புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை உடன் நீக்கமுடியாது!

மஹிந்த ஆட்சியில் புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை உடனடியாக நீக்கிவிட முடியாது என்றும், இதுபற்றி ஆழமாக ஆராயப்படவேண்டும் என்றும் புதிய அரசு அறிவித்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. கேள்வி நேரத்தின்போது, "புலம்பெயர் அமைப்புகள் மீதும், தனிநபர்களுக்கு எதிராகவும்...

மானிப்பாயில் கைக்குண்டுகள் மீட்பு

மானிப்பாய் பகுதியில் வெற்றுக்காணியில் இருந்து எஸ்.எஸ். ஈ. 87 ரக இரண்டு கைக்குண்டுகள் மானிப்பாய் பொலிஸாரினால் மீட்கப்பட்டு, இராணுவத்தினரால் செயலிழக்க செய்யப்பட்டுள்ளன. மானிப்பாய் கட்டுடை பகுதியில் கடந்த வியாழக்கிழமை குறித்த கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதே இடத்தினைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது தோட்டக்காணிக்கு பக்கத்தில் உள்ள வெற்றுக்காணிக்குள் சென்ற போது, அங்கு இரண்டு கைக்குண்டுகள் இருப்பதை...
Ad Widget

இலங்கை வீரர்களுக்கு சென்னையில் விளையாட முடியாத சூழ்நிலை

இம்முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் இலங்கை வீரர்கள் களம் காண முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டு தோறும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன்படி நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 8ம் திகதி முதல் தொடங்கி மே 24ம் திகதி வரை நடைபெறவுள்ளன....

எல்லை தாண்டிய மீனவர்கள் 37 பேர் கைது

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 37 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் ஐந்து மீனவப்படகுகளும் இதன்போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேலும் கைதான மீனவர்களும் கைப்பற்றப்பட்ட படகுகளும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

நடு இரவில் பாடலை வெளியிடும் இயக்குனர் மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘ஓ காதல் கண்மணி’. இப்படத்தில் துல்கர் சல்மான்-நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மணிரத்னம் தன்னுடைய சொந்த நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் புகைப்படங்கள், டீசர், மற்றும் டிரைலர் ஆகியவை வெளியாகி இப்படத்தின் மீது பெரும்...

வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்த சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘காக்கி சட்டை’. இப்படத்தையடுத்து தற்போது ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பொன்ராம் இயக்கி வரும் இப்படத்தை இமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் விறுவிறுப்பாக நடந்து வருகிறது....

வேகப்புயல் பிரட் லீ நடிக்கும் ’அன் இண்டியன்’ திரைப்படம்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் புயல் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ நடித்து வரும் ’அன் இண்டியன்’ [Un indian] திரைப்படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீ முதல் முறையாக இந்தியாவை மையப்படுத்திய ”இந்தியன் அல்லாதவன்” [UNINDIAN] என்ற சினிமா படத்தில் நடத்தி வருகிறார்.அந்த திரைப்படத்தின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டு உள்ளது. இந்த...

புத்தாண்டுக்கு முன்னதாக வலி.வடக்கில் குடியமர்வு

சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வலி.வடக்கில் ஆயிரத்து நூறு ஏக்கர் முழுமையாக விடுவிக்கப்பட்டு அதில் மக்களின் மீள்குடிய மர்வு நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்படும். இவ்வாறு யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஏற்கனவே விடுவிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மேலதிகமாக 8 கிராம சேவையாளர் பிரிவுகள் விடுவிக்கப்படவுள்ளது. இந்தப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மிதிவெடி அகற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 7...

வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்பட மாட்டாது – இராணுவத் தளபதி

வடக்கு-கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக படையினரோ அல்லது படைமுகாம்களோ அங்கிருந்து அகற்றப்படமாட்டாது என,இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டிசில்வா,தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள மொழி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், வடக்கில் மீண்டும் ஆயுதக்கிளர்ச்சி ஏற்படாமல் தடுப்பதற்கு எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.தேசிய பாதுகாப்புக்கோ அல்லது...

போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் : ஐ.நா சிறப்பு தூதுவரிடம் வலியுறுத்தியது த.தே.கூ

"இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் அரசு ஆரம்பிக்கவுள்ள உள்ளக விசாரணையில் எமக்கு நம்பிக்கையில்லை. எதிர்வரும் செப்டெம்பரில் ஐ.நா. விசாரணை அறிக்கையையே நாம் எதிர்பார்த்திருக்கின்றோம். ஐ.நா. விசாரணை அறிக்கையின் பிரகாரம் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.''என்று, ஐ.நாவின் சிறப்பு நிபுணர் பப்லோ டி கிரெய்ப்பிடம் நேரில் வலியுறுத்தினர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

தேர்வாளர் குழுத் தலைவர் பதவியிலிருந்து சனத் இராஜினாமா

இலங்கை கிரிக்கெட் தேர்வாளர் குழுத் தலைவர் சனத் ஜெயசூரிய தனது பதவியை இராஜினாமா செய்யத் தீர்மானித்துள்ளார். விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நவீன் திசாநாயக்கவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அவர், அனுப்பிவைத்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரரும் சகலதுறை ஆட்டக்காரருமான சனத் ஜெயசூரிய கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தெரிவுக்குழு...

கிளிநொச்சியில் விபத்து: ஒருவர் சாவு!

கிளிநொச்சி, முரசுமோட்டை நான்காம் கட்டைப்பகுதியில் வீதியில் நடந்து சென்ற ஒருவரை வாகனம் ஒன்று மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்றது. முரசு மோட்டையிலுள்ள சங்கரநாராயணன் கோயிலில் தங்கியிருந்த இயக்கச்சியைச் சேர்ந்தவரான த.பொன்னுத்துரை (வயது-65 )என்பவரே உயிரிழந்தவராவார். அதிகாலை வயலுக்குச் செல்வதற்காக வீதியில் சென்றவரை பின்னால்...

நாளை, அரை சந்திர கிரகணம்

இலங்கையில் வாழ்கின்றவர்கள், நாளை சனிக்கிழமை(04) அரை சந்திர கிரகணத்தை பார்க்க முடியும் என்று நவீன தொழில்நுட்பம் தொடர்பிலான ஆர்தர் சி கிளார்க் மத்தியநிலையம் அறிவித்துள்ளது. மாலை 5 மணிக்கே அரை சந்திர கிரகணம் தென்படும் என்றும் அந்த மத்தியநிலையம் அறிவித்துள்ளது. எனினும், சந்திர கிரகணத்தின் இறுதி இரவு 8 மணிவரையும் தென்படும் என்றும் அறிவித்துள்ளது. சந்திரன்...

மனைவி தற்கொலை! கேள்வியுற்ற கணவர் உயிரை மாய்க்க முயற்சி!!

தனது மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதைக் கேள்வியுற்ற, பொலிஸ் காவலில் இருந்த கணவர் அங்கிருந்த போத்தலை உடைத்து தன்னை தானே குத்தி உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். இந்த சம்பவம் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. கடந்த எட்டு மாதங்களுக்க முன்னர் இளவாலை, பிரான்பற்றைச் சேர்ந்த பெண்ணுக்கும் வவுனியா...

பேருந்து மீது கல் வீச்சு

இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலைக்குச் சொந்தமான பேருந்து மீது மாலுசந்திப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (02) இரவு கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் பேருந்தின் பின்பக்க கண்ணாடிகள் சேதமடைந்தது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கிச் சென்ற பேருந்தே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. தாக்குதல் தொடர்பில் பேருந்து சாரதி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை...

 ஜனாதிபதிக்கு சி.வி.கே கடிதம்

வடமாகாணத்தி உள்ள அரச காணிகளை தனியாருக்கோ வேறு அமைப்புக்களுக்கோ வழங்கும் போது வடமாகாண சபையின் ஆலோசனை பெறப்பட வேண்டும் என கோரி, வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்தால் ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு அமைவாகவே இக்கடிதம் நேற்று வியாழக்கிழமை (02) அனுப்பட்டுள்ளது.

பிரதமரின் பயணம் அரசியல் ரீதியானதால் கலந்துகொள்ளவில்லை – முதலமைச்சர் சி.வி

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வடக்குக்கான பயணம் அரசியல் ரீதியானது. எனவே, மக்களின் பிரதிநிதி என்ற முறையில் அவரது கூட்டங்களில் தான் கலந்துகொள்ளவில்லை என வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் வியாழக்கிழமை (02) தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை விடுதித் தொகுதி மற்றும் இரத்த வங்கி திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்...

சித்திரமும் வடிவமைத்தல் பிரிவுக்கு புதிய இணைப்பாளர் நியமனம்

யாழ். பல்கலைக்கழக மருதனார் மட நுண்கலைபீடத்தின் சித்திரமும் வடிவமைத்தல் பிரிவுக்கு புதிய இணைப்பாளராக இசைத்துறை பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.சூரியகுமார் புதன்கிழமை (01) கலைப்பீட பீடதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் மாணவர்களுக்கான வருட ஆய்வு கட்டுரைகள் தொடர்பில் மேற்பார்வை செய்வதற்குரிய பொருத்தமான ஒருவரை நியமிக்கும் பொறுப்பு இணைப்பாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக கலைப்பீட கேட்போர் அரங்கில் மாணவர்கள்,...

சம்பந்தனுக்கு ஆனந்தசங்கரி கடிதம்

இழப்புகள் போராட்டங்கள் எல்லாம் தமிழரசுக் கட்சிக்கு மட்டும்தான் சொந்தம் என்று நினைத்து விடாதீர்கள் எனக் குறிப்பிட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கடிதம் ஒன்றை வெள்ளிக்கிழமை (03) அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நான் கடந்த பல நாட்களாக தங்களிடம் பல விடயங்கள் சம்பந்தமாக கேட்கப்பட்ட...

கென்ய பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிதாரிகள் தாக்குதல்; உள்ளே பணயக் கைதிகள்

கென்யாவின் வடகிழக்கே முகமூடியணிந்த துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்திய பல்கலைக்கழக மாணவர் விடுதியை பாதுகாப்புப் படைகள் சூழ்ந்துள்ளன. கரிஸ்ஸா என்ற ஊரிலுள்ள பல்கலைக்கழகத்திற்குள் எத்தனை பணயக் கைதிகள் பிடித்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பது இன்னும் தெரியவில்லை என பொலிசார் கூறுகின்றனர். நால்வர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் உள்ளூர் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர்...
Loading posts...

All posts loaded

No more posts