வாள் வெட்டு கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

வடமாகாணத்தில் இடம்பெறும் குழு மோதல்கள், வாள் வெட்டு கலாசாரம் என்பவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க பொலிஸார் மற்றும் சட்டத்துறை சார்ந்தோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் தெ.இந்திர குமார் கோரிக்கை விடுத்துள்ளார். பல்கலை கழக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்ய கோரியும் கைது...

அதிகாரங்கள் குறைக்கப்படுவது ஆரோக்கியமான அறிகுறியே – இரா.சம்பந்தன்

மீண்டும் ஜனாதிபதியாக விரும்பாத அருமையானதொரு ஜனாதிபதியொருவர் எமக்கு கிடைத்துள்ளார். ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். இதுவோர் ஆரோக்கியமான அறிகுறியாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம், நேற்று திங்கட்கிழமை (27) ஆரம்பமானது. சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பித்த ஜனாதிபதி மைத்திரிபால...
Ad Widget

கிளிநொச்சியில் ரயில் – ஜீப் மோதி நால்வர் பலி

கிளிநொச்சி - அறிவியல் நகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்து மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக மத்திய ரயில் கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த சரக்கு ரயிலுடன் ஜூப் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் பெண் மற்றும் சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

19வது திருத்தச் சட்டம் மீது இன்று வாக்கெடுப்பு

முழு நாடும் எதிர்பார்த்த 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. தொடர்ச்சியாக ஏற்படுத்தப்பட்டுவந்த தடைகள் மற்றும் இடையூறுகளையும் மீறி 19ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பமானது. இன்று இரண்டாவதுநாள் விவாதம் நடைபெற்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக்...

19க்கு கையுயர்த்துவதை விட வேறொரு கௌரவம் இல்லை – ஜனாதிபதி

ஸ்ரீ லங்காவின் சுதந்திர ஜனநாயகத்தை மீண்டும் பாதுகாத்து அந்த வரலாற்று கௌரவம், கட்சி பேதங்கள் இன்றி சகல கட்சிகளுக்கும் கிடைப்பதற்கு இன்றிலிருந்து இன்னும் ஒன்றைநாட்கள் இருகின்றன. அந்த அதிர்ஷ்டத்தை உதயமாக்கி கொள்ளுமாறு நான் சகலரிடமும் கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு கையுயர்த்துவதை விட வெறொரு கௌரவம் இல்லை என்றும்...

மரணச்சடங்கில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

வடமராட்சி, அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் உயிரிழந்த செந்தூரனின் இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. இதன்போது கொலைக் குற்றவாளிகளைக் கைதுசெய்து பொலிஸார் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரி அப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை நடத்தினர். திக்கம் நாவலடி சந்தியில் இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. "கொலைகும்பல் நீண்டகாலமாக சுதந்திரமாக இயங்கிவருகின்றது" , "இவர்களை பொலிஸார் இதுவரை...

சக மாணவர்கள் மீதான வாள் வெட்டு, கைதை கண்டித்து யாழ்.பல்கலை மாணவர்கள் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான வாள்வெட்டுக்கு நீதி கோரியும், கடந்த வாரம் ஊடகவியலாளர் ஒருவருடன் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரியும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இன்று திங்கட்கிழமை காலை கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தினர். கடந்த சனிக்கிழமை இரவு மானிப்பாய் பகுதியில் இசைநிகழ்ச்சியொன்றை பார்த்துவிட்டு வீடுதிரும்பிக்கொண்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேர்மீது இனந்தெரியாத குழுவினர்...

மகிந்தவுடன் இணைய தயாராகும் மைத்திரி

தான் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னேற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ பக்ஷவுடன் இணைந்து செயற்பட ஆயத்த மாகவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலியில் இடம் பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நான் ஸ்ரீ.சு.கவின் முன்னேறறத்தை கருத்திற்கொண்டே மகிந்தவுடனான...

19ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக யாழில் சுவரொட்டி

நாடாளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை (27) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக மக்கள் விடுதலை முன்னணியினரால் யாழ்ப்பாணத்தில், சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. '19ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதை தடுக்கும் சூழ்ச்சியை தோற்கடிப்போம்' என தலைப்பிடப்பட்டே இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. 19ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேறுவதற்கு, ஆளுங்கட்சியின் எம்.பி.க்கள் ஆதரவு தெரிவிக்கும்வேளை, முன்னைய ஜனாதிபதி மஹிந்த...

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இலங்கை திரும்புவதை தவிர்க்கவும் – பா.அரியநேத்திரன்

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் இலங்கைக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். பொதுத் தேர்தல் நடந்து முடிந்து நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் வரையில் இலங்கைக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்குமாறும் அவர் கோரியுள்ளார். இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, சவூதி அரேபியாவில்...

சந்திரிக்காவும் ஆர்ப்பாட்டத்தில் குதிப்பு

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தி கோட்டையில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் பங்கேற்றுள்ளார்.

இளைஞர் குழுக்களுக்கிடையே மோதல் : நால்வர் கைது

சுன்னாகத்தில் இரு இளைஞர் குழுக்களுக்கிடையே நேற்றிரவு இடம்பெற்ற மோதலால் அப்பகுதி முழுவதும் பெரும் பதற்ற நிலை காணப்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்கள் பெற்றோல் குண்டுகள், வாள்கள் மற்றும் கைக்கோடரிகளுடன் மோதலில் ஈடுபட்டனர். இதில் இருவர் காயமடைந்தனர். பொலிஸாருக்கு பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் மோதல் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற பொலிஸார் நால்வரைக் கைது செய்தனர். ஏனையோர் தப்பியோடினர்....

நில அதிர்வுகளால் அதிரும் காத்மாண்டு: பலியானோர் எண்ணிக்கை 3,000 ஆக உயர்வு

நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தொட்டுள்ளது. நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை காலை 11.56 மணிக்கு கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவாகியிருந்த நிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டுவில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பழமைவாய்ந்த கட்டிடங்கள், குடியிருப்புகள் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 3...

சம்பந்தர்தான் தலைவர் அதில் மாற்றம் ஏதுமில்லை – வடமாகாண முதலமைச்சர்

வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தேர்வானது முதல் சர்ச்சைகளுக்குக் குறைவில்லாதவர் நீதியரசர் ச.வி.விக்னேஸ்வரன். அண்மைக் காலமாக அவரது கருத்துக்கள் தென்னிலங்கையையும் இந்தியாவையும்கூட ஆட்டம் காண வைத்திருக்கின்றன. கூட்டமைப்பிலிருந்து ஒரு சில கட்சிகள் பிரிந்து சென்று வேறு கட்சிகள் மற்றும் உதிரிகளுடன் சேர்ந்து மாற்று அணி ஒன்றை உருவாக்கும் முயற்சிகளின் பக்கம் சாய்கிறார் என்பது அவரைச் சுற்றி...

யாழ். குடாவில் போலி நாணயத்தாள்கள்! மக்களே மிகவும் அவதானம்!!

யாழ். குடாநாட்டில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதனால் பொதுமக்கள் அனைவரையும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு யாழ்.வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ் - சிங்கள புதுவருடத்துடன் புதிய நாணயத்தாள்கள் அச்சிட்டு புழக்கத்தில் விடுப்பட்டுள்ளது. எனவே அதனை சாதாகமாக பயன்படுத்தி போலி நாணயத்தாள்களும் விசமிகளால் அச்சிடப்பட்டு புழக்கத்திற்கு தற்போது விடப்பட்டுள்ளது. அந்தவகையில்...

ஆசிரிய கலாசாலை பரீட்சைகளில் சித்தியடையாதோருக்கான மீள்பரீட்சை

2011ஆம் ஆண்டும் அதற்குப் பின்னரும் நடைபெற்ற ஆசிரிய கலாசாலைப் பரீட்சைகளில் சித்தியடையத் தவறிய ஆசிரியர்களுக்கான, மீள்பரீட்சை ஒன்றை இவ்வருடத்தில் நடத்துவதற்குப் பரீட்சைத் திணைக்களம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. கோப்பாய் ஆசிரிய கலாசாலையூடாக ஏற்கெனவே பரீட்சைக்குத் தோற்றி சித்தியடைய தவறியவர்கள், நூன சித்தி பெற்றவர்கள் ஆகியோர் மீள் பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் பொருட்டு எதிர்வரும் 30க்கு முன்னர் கலாசாலை அதிபருடன்...

மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிகிச்சை

செரிபரல் பால்சி லங்கா பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரணையில் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிகிச்சை, சக்கரகதிரை வழங்கும் நிகழ்வின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் மே மாதம் சனிக்கிழமை (02) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையும் நடைபெறவுள்ளது. யாழ். கச்சேரிக்கு அண்மையிலுள்ள சுண்டுக்குளியிலுள்ள ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தியே இந்த...

குடும்பஸ்தர் அடித்து கொலை: ஒருவர் கைது

அல்வாய் வடக்கு பகுதியில் 3 பிள்ளைகளின் தந்தையொருவர், கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அல்வாய் கிழக்கு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி திருச்செல்வம் (வயது 48) என்பவர் சனிக்கிழமை (25) அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்....

பொதுமன்னிப்பு வழங்கியும் சிறையில் வாடும் உதயசிறி

ஜனாதிபதி மைத்திரிபா சிறிசேன, பொதுமன்னிப்பு வழங்கியும் இதுவரை எனது மகள் உதயசிறி விடுதலை செய்யப்படாதது பெரும் கவலையளிக்கின்றது என, சிகிரியா பளிங்குச் சுவரில் எழுதிய குற்றத்துக்காக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மட்டக்களப்பு - சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறியின் தாய் எஸ்.தவமணி தெரிவித்தார். சிகிரியா குன்றிலுள்ள பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதிய குற்றத்துக்காக...

பசிலுக்கு இன்று பிறந்தநாள்: அவைக்கும் வருகிறார்

தனது பிறந்த நாளை இன்று திங்கட்கிழமை (27), கொண்டாடும் பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மெர்ஷன்ட் பிரிவிலிருந்து (கட்டணம் செலுத்தும் பிரிவு) சிறைச்சாலை வாகனம் மூலம் நாடாளுமன்றத்துக்குச் சென்று அங்கு இடம்பெறவுள்ள அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்கவுள்ளார். திவிநெகும நிதி மோசடி விவகாரம் தொடர்பில்,...
Loading posts...

All posts loaded

No more posts