ஜெய்ப்பூர் நிறுவனத்தினூடாக உதவிகளைப்பெற்றுக் கொள்ளமுடியும்

யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தினூடாக வறிய நிலையிலுள்ள மாற்றுத் திறனாளிகள் உதவிகளைப்பெற்றுக் கொள்ளமுடியும் என நிறுவனத்தின் தலைவர் வைத்தியர் திருமதி ஜெ.கணேசமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நிறுவனத்தினூடாக வறுமைநிலையிலுள்ள மாற்றுத் திறனாளிகளுக்குரிய தேவைக்கேற்ப செயற்கை அவயவங்கள் நடமாட உதவும் உபகரணங்கள் மற்றும் உளவள சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை...

குறுந்திரைப்பட போட்டிக்கு ஆக்கங்கள் கோரல்

வடமாகாண சுகாதார சுதேச மருத்துவ சமூக சேவைகள் புனர்வாழ்வு நன்னடத்தை சிறுவர் பராமரிப்புச் சேவைகள் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் சிறுவர் மற்றும் பெண்கள் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஊட்டும் குறுந்திரைப்படங்களைத் தயாரிப்பது தொடர்பான போட்டிக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...
Ad Widget

பொது வேட்பாளர் தெரிவுக்கு வைபரே உதவியது

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எதிரணியின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை நிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வகித்த வகிபாகம் அளப்பரியதாகும். தன்னை பொது வேட்பாளராக தெரிவு செய்யப்பட்ட விதம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் 69ஆவது மாநாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உரையாற்றும் போது சிலவிடயங்களை அம்பலப்படுத்தினார். இந்நிலையில், இந்தியாவுக்கு விஜயம்...

சீனா உதவியிருக்காவிடின் யுத்தம் முடிந்திருக்காது

சீனா உதவியிருக்காவிடின் 30 வருடங்களாக நிலவிய யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்திருக்க முடியாது என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். சீனாவின் பிங்கூவா செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதேபோல, சீனாவுடன் இருக்கின்ற தொடர்பை தொடர்ந்தும் பேணவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமன்றி சீனாவினால் எம்நாட்டுக்கு செய்ததை ஒருபோது மறக்கமுடியாது என்றும் அவர்...

வட்டு. மத்திய கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் முடிவுக்கு வந்தது!!

யாழ்.வட்டுக்கோட்டை மத்திய கல்லூரியின் புதிய அதிபரை மாற்றுமாறு கோரி மாணவர்களும் பெற்றோர்களும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில் அதிபரை எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதியில் மாற்ற நடவடிக்கை எடுப்பார்கள் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து அந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் இதற்கு தீர்வுகாணுமாறு கோரி...

ஜெனீவா செல்லும் ததேகூ உறுப்பினர்கள்

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் பேரவையினால் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை எதிர்வரும் 30ம் திகதி வெளியிடப்படவுள்ளதை முன்னிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவொன்று ஜெனீவா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பமாகும் ஐநா மனித உரிமைப் பேரவையின் அமர்வுகளின் காலப் பகுதியில் இந்தக் குழு ஜெனிவாவில் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள...

தேர்தல் காலத்தில் நடைபெற்ற சில உண்மைகளை போட்டுடைத்த ஜனாதிபதி

ஜனவரி 5ம் திகதி இரவு மருதானையில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான இறுதி பிரசார நடவடிக்கைகளின் போது, பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் செல்ல முடியாது எனக் கூறி, பாதுகாவலர்கள் மற்றும் சாரதி தன்னை வீட்டில் தனியாக விட்டுச் சென்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். இச் சந்தர்ப்பத்தில் ரணில் விக்ரமசிங்கவே தனது வீட்டுக்கு வந்து தன்னை கூட்டத்துக்கு...

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்கும்! – கஜேந்திர குமார்

தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் சர்வதேச விசாரணை பொறிமுறை ஊடாகவே நீதி கிடைக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். குற்றம் செய்தவர்களே குற்றம் குறித்து விசாரணை செய்ய வேண்டியதில்லை. இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். தமிழ் மக்கள்...

மைத்திரி வசித்த வீட்டுக்கு குடிபெயருகிறார் மஹிந்த!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயன்படுத்திய இல்லம் முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌ஷவுக்கான உத்தியோகபூர்வ இல்லமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வீட்டில் திருத்த வேலைகள் சில இருப்பதனால் மஹிந்த ராஜபக்‌ஷ இன்னமும் அங்கு குடியேறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு விஜயராம மாவத்தை உள்ள வீடு ஒன்றே முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌ஷவின் உத்தியோகபூர்வமாக கடந்த செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளது என்பது...

அடுத்தவாரம் ஜனாதிபதியின் கைக்கு வருகிறது ஐ.நா அறிக்கை!

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையின் முற்பிரதி அடுத்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இந்த அறிக்கை கிடைத்தவுடன் அதற்குப் பதிலளிப்பது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, அரசாங்கத்தினால் இரண்டு குழுக்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா விசாரணை...

மஹிந்த பிரதமராகியிருப்பின் பாரியளவில் கொலைகள் இடம்பெற்றிருக்கும்!

அண்மையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக அதிகாரத்துக்கு வந்திருப்பாரேயானால், இலங்கையில் பாரியளவில் அப்பாவிகள் கொலை செய்யப்படும் அனுபவம் ஏற்பட்டிருக்கும் என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட போதே இவ்வாறு கூறியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் பொலிஸ்...

மன்னாரில் பயறு அமோக விளைச்சல்

மன்னார் மாவட்டத்தில் சிறுபோகத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்ட பயறுச்செய்கை அமோக விளைச்சலைக் கண்டிருக்கிறது. நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (04.09.2015) மன்னார் நானாட்டனில் இடம்பெற்ற வயல்விழாவில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு அறுவடையை ஆரம்பித்து வைத்துள்ளார். பெரும்போகத்தில் நெற்செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளில் பெரும்பாலானோர் சிறுபோகத்தில் ஈடுபடுவதில்லை. நெற்செய்கைக்கு அதிகளவில் நீர் தேவைப்படுவதால் சிறுபோகத்தில் அரிதாகவே நெற்செய்கை...

இலங்கை தமிழர் மோகன் மரணம்: ராயப்பேட்டையில் பதற்றம்!

போலி பாஸ்போர்ட் வழக்கு விசாரணைக்காக இலங்கை தமிழர் மோகன் பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் அவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அவரது உடல் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. உடல் பரிசோதனையை மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் நடத்த வேண்டும் என்று ஆலந்தூர் மாஜிஸ்திரேட்டிடம் மனு கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து...

மட்டக்களப்பில் 2000 ஆண்டு பழமையான நாகர் கிணறு

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலயத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாகர்களின் கிணற்றையும், நாகக்கல்லையும் அடையாளம் கண்டிருப்பதாக யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் சி பத்மநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். வந்தாறுமூலை நீர்முகப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் சிறியதொரு கிணறு காணப்படுகிறது. மூன்றடிக்கு மூன்றடி நீல அகலங்களுடன் சதுரவடிவிலான இந்த...

அத்துமீறும் இந்திய மீனவர்கள் தொடர்பில் புதிய அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி வருகை தருவது தொடர்பில் புதிய ஆட்சிபீடத்தை எற்றுக் கொண்டுள்ள அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவேண்டும் என வடமாகாண மீனவ சம்மேளன அமைப்பு தெரிவித்துள்ளது. வடமாகாண மீனவ சம்மேளன அமையத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட மீனவ கடற்றொழில் அமைப்புகளின் தலைவர்களுடான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது. யாழ் நீரியல் வளத்...

எதிர்க்கட்சித் தலவர் பதவியை இனப்பிரச்சினைத் தீர்வுக்காக பயன்படுத்த வேண்டும்! – சிவாஜிலிங்கம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் மற்றும் பிரதிக் குழுக்களின் தலைவர் பதவிகளை தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வினை காண்பதற்கான வாய்ப்பாக பயன்படுத்த வேண்டும் என்று வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார். மாறாக நாட்டில் நல்லிணக்கம் ஏற்பட்டுவிட்டது என்பதை சர்வதேச கண்களுக்கு காட்டி சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கை அரசாங்கத்தினை பாதுகாக்கும்...

இனப்பிரச்சினைக்கு விரைவான தீர்வை தரவேண்டும் தேசிய அரசு! – சுமந்திரன்

இந்த தேசிய அர­சாங்­கத்­தி­லா­வது தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை பெற்­றுத்­தர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்­திரன் தெரிவித்துள்ளார். அமை­யப்­பெற்­றுள்ள தேசிய அர­சாங்கம் தொடர்பில் எதிர்க்­கட்சி என்ற வகையில் நாம் எமது வாழ்த்­துக்­களை தெரி­விக்­கின்றோம். கடந்த காலத்தில் மக்­க­ளுக்கு கொடுத்­தி­ருந்த வாக்­கு­று­தி­க­ளுக்கு அமைய இப்­போதும் ஒரு கூட்டு அர­சாங்கம் அமை­யப்­பெற்­றுள்­ளது....

யாழில் மீண்டும் அதிகரிக்கும் வாள்வெட்டு தாக்குதல்கள்!!!

இணுவில் கந்தசாமி கோயில் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த முகமுடிக் கொள்ளையர்கள் அங்கிருந்த ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு, அங்கிருந்த நகை மற்றும் பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (03) இடம்பெற்றுள்ளது. இந்த வாள் வெட்டுச் சம்பவத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான...

உதவிய மாணவியின் மீது ஆசிரியர் தாக்குதல்

புத்தூர் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் வரலாறு கற்பிக்கும் ஆசிரியர், மாணவியின் கன்னத்தில் அறைந்தமையினால் மயக்கமுற்ற மாணவி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (03) அனுமதிக்கப்பட்டுள்ளார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. வரலாற்று பாடப்புத்தகம் கொண்டு வராத மாணவிக்கு தனது புத்தகத்தை மாற்றிக் கொடுத்து உதவியமையை அவதானித்த ஆசிரியர், குறித்த மாணவியின் கன்னத்தில் கடுமையாக...

அமைச்சரவை பதவியேற்பில் சில சுவாரசியங்கள்…

தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டது. இந்த வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை பகல் 12.11க்கு ஆரம்பமாகி 13.42க்கு நிறைவுக்கு வந்தது. இந்த பதவியேற்பு வைபவத்தில் இடம்பெற்ற சில சுவாரசியமான சம்பவங்கள்... வருகை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியாரும் 12.10க்கு வருகைதந்தனர்....
Loading posts...

All posts loaded

No more posts