Ad Widget

சாதனைகளுடன் விடைபெற்ற உலகக் கிண்ணம்

எந்த உலகக் கிண்ணத்திலும் இல்லாத அளவுக்கு இம்முறை போட்டியில் அதிகமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன. அதன் விவரம்:– முதல்முறையாக இந்த உலகக் கிண்ணப் போட்டியில்தான் இரட்டை சதம் அடிக்கப்பட்டது. அதுவும் இரண்டு முறை எடுக்கப்பட்டுள்ளது. சிம்பாப்வேக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் வீரர் கெய்ஸ் 215 ஓட்டங்களைக் குவித்தார். இதில் குறைந்த பந்தில் இரட்டை சதம் எடுத்து...

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழு விபரம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாகக் குழுவுக்கு தலைவராக சிதத் வெத்தமுனி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் செயலாளராக பிரகாஷ் ஷாப்டர், பொருளாளராக லுசில் விஜேவர்தன, துணைத் தலைவராக குஷில் குணசேகர, கபில விஜேகுணவர்தன ஆகியோரும் தெரிவாகியுள்ளனர். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகக்குழுவின் பதவிகாலம் நிறைவுபெறுவதால் குறித்த இடைக்கால நிர்வாகக் குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்தக்...
Ad Widget

வட மாகாண சபைக்கு படிப்படியாக அதிகாரம் வழங்கப்படுகிறது – முதலமைச்சர்

வடக்கு மாகாணசபையினால் 248 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றுள்ளது. மாகாணசபைக்கு பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமனம் செய்வதற்குரிய அதிகாரம் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற போதிலும், வடக்கு மாகாணசபை பதவிக்கு வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகின்ற நிலையில் முதற்...

மஹிந்த இன்று நீதிமன்றத்தில் ஆஜராவாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் நாட்டிலுள்ள சில பகுதிகளுக்கு இராணுவத்தினரை அனுப்பி மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக இவருக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் நீதிமன்றத்தில் ஆஜராவது குறித்து சட்ட ஆலோசனை பெற்றுக்...

‘யேமனிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்’

யேமனில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு தாயகத்துக்கு அழைத்துவரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. இந்திய கடல் மற்றும் வான் படைகளின் விமானங்களும் கப்பல்களும், மேலதிகமாக ஏர் இந்தியா விமானங்களும் மீட்புப் பணிக்காக பயன்படுத்தப்படும் என்று வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் சையத் அக்பருதீன் தெரிவித்தார். முதற்கட்டமாக யேமனின் கடற்கரை நகரான ஏதனிலிருந்து 400 இந்தியர்களை...

நண்பனுக்காக ஒன்று சேர்ந்த நடிகர்கள்

தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர்களும் எந்த ஈகோ இல்லாமல் நட்புடம் பழகி வருகின்றனர். தற்போது விக்ராந்தின் அண்ணன் சஞ்சீவ் 'பிறவி' படத்தை இயக்குகிறார். அபிநயா, பார்வதி நிருபன், லீமா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். அருள்தாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். த்ரில்லர், ஆக்‌ஷன், காதல், ரொமான்ஸ் என அனைத்துக்கும் முக்கியத்துவம் தரப்பட்டுள்ள இப்படத்துக்கு ஜேக்ஸ் இசையமைக்கிறார் இதில்...

ஏப்ரல் 16 மிரட்ட வருகிறது காஞ்சனா பேய்

ராகவா லாரன்ஸ், தான் இயக்கியிருக்கும் கங்கா – முனி 3 படத்தின் பெயரை காஞ்சனா 2 என்று மாற்றினார். கடந்த டிசம்பர் மாதமே இந்தப் படம் திரைக்கு வந்திருக்க வேண்டும். எதிர்பாராதவிதமாக லாரன்ஸ் விபத்தில் மாட்டிக் கொண்டதால் நான்கு மாதங்கள் கழித்து ஏப்ரல் 16 திரைக்கு வருகிறது. தமிழிலும், தெலுங்கிலும் லாரன்சின் பெயரை அழுத்தமாக பதிய...

விஜய் படத்தில் ராதிகா சரத்குமார்

விஜய் தற்போது சிம்பு தேவன் இயக்கும் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு விஜய் தனது 59-வது படத்தை இயக்கும் வாய்ப்பை ‘ராஜா ராணி’ இயக்குனர் அட்லிக்கு வழங்கியுள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா-எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில், ராதிகா சரத்குமாரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்து...

இந்திய மீனவர்களின் இழுவை மீன்பிடியை நிறுத்தும் பிரதமரின் தீர்மானம் வரவேற்கத்தக்கது -டக்ளஸ்

இந்திய மீனவர்களின் அத்துமீறியதும் எல்லைதாண்டியதுமான இழுவைப்படகுத் தொழில்முறையை வடபகுதியில் முற்றாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளமையை எமது கடற்றொழிலாளர்கள் சார்பில் வரவேற்பதாக ஈழ மக்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் நாட்டின் ஏனைய மாவட்டங்களை விடவும் வடபகுதிக் கடற்றொழிலாளர்கள் சுனாமி அனர்த்தம் மற்றும் நீண்டகால...

விடுதலைப் புலிகள் சூழல் பாதுகாப்புக் குறித்து கூடுதலானஅக்கறை கொண்டிருந்தார்கள் – பொ.ஐங்கரநேசன்

விடுதலைப் புலிகள் சூழல் பாதிப்புக் குறித்து கூடுதலான அக்கறை கொண்டிருந்தார்கள் என்று வடமாகாண சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (30.03.2015)இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தால் கரையோர வளங்களை நல் முகாமைத்துவம் செய்வது தொடர்பான ஆய்வுப்பட்டறை ஒன்று திருநெல்வேலியில் அமைந்துள்ள சேவாலங்கா கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வுப்பட்டறையில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே...

வேம்படி மகளிர் உயர்தரப்பாடசாலை முன்னிலை

இன்று திங்கட்கிழமை(30) வெளியான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 28 பேர், 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக அதிபர் திருமதி வி.சண்முகரட்ணம் தெரிவித்தார். 9 ஏ சித்திகளை 28 பேரும் 8 ஏ சித்திகளை 48 பேரும் 7 ஏ சித்திகளை 25 பேரும் 6...

எல்லாம் அறிந்தவர் கமல்… – எஸ்பி

கமல் ஹாஸனுக்கு தெரியாத விஷயமே கிடையாது. அவர் எல்லாம் அறிந்தவர் என்று பாராட்டினார் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன். கமல் ஹாஸனின் உத்தம வில்லன் படத்தின் தெலுங்குப் பதிப்பின் இசை வெளியீட்டு விழா ஹைதராபாதில் நேற்று நடந்தது. இந்த விழாவில் நடிகர் கமல் ஹாஸன், நாயகிகள் ஆன்ட்ரியா, பூஜா குமார், கமல் மகள் ஸ்ருதி ஹாஸன், நடிகை...

உலக கோப்பை ஒரு ரவுண்ட்-அப்!

11வது உலக கோப்பை தொடர் நேற்றுடன் இனிதே நிறைவுபெற்றது. ஆஸ்திரேலியா, 5வது முறையாக சாம்பியனாகிவிட்டது. இந்த உலக கோப்பையில் பரிசு தொகை மதிப்பு மொத்தம் 71 கோடியாகும். 2011 உலக கோப்பை பரிசு தொகையைவிட 25 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதில், சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்க டாலர் மதிப்பில் 3,975,000 பரிசு தொகையாக கிடைத்தது....

போக்குவரத்து சபை பஸ் மோதி ஒருவர் பலி

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் கரும்புப் பிள்ளையார் ஆலயத்துக்கருகில் இன்று திங்கட்கிழமை (30) காலையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் மோதியதில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர். அக்கராயன் கண்ணகிபுரம் பகுதியை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை தயாளன் (வயது 31) என்பவரே இந்நத விபத்தில் உயிரிழந்தார். முட்கொம்பனில் இருந்து கிளிநொச்சிக்கு சென்றுகொண்டிருந்த பஸ், மோட்டார் சைக்கிளில்...

நாயாற்றில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்தும்படி பிரதமரிடம் வேண்டுகோள்

முல்லைத்தீவு நாயாறு கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடிக்கும் தென்னிலங்கை மீனவர்களை கட்டுப்படுத்தும்படி முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முல்லைத்தீவு மாவட்ட பிரச்சினைகள், தேவைகள் என்பன பற்றி பிரதிநிதிகளுடன் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். அவர்...

டெங்கு பரவ இடமளித்தோருக்கு எதிராக வழக்கு

யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட நல்லூர்ப் பகுதியில் டெங்கு நுளம்பு உற்பத்தியாகக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்து நால்வருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். பொதுச்சுகாதார பரிசோதகருடன் இணைந்து கடந்த 20ஆம் திகதி முதல் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் யாழ். மாநகர சபை எல்லைக்குள் செய்யப்பட்டது. இதன்போது, டெங்கு பரவுக்கூடிய வகையில்...

மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறு பிரதமரிடம் கோரிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்படாத பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) வலியுறுத்தினர். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் பிரதமருடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே நாடாளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் மற்றும் சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தனர்....

மீள் திருத்தத்துக்கு 24வரை விண்ணப்பிக்கலாம்

வெளியாகியுள்ள கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்துவதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி வரையிலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை இன்று வெளியாகிய பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய இணையத்தள முகவரிகளில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் விவகாரம்: உள்ளக விசாரணை குழு நியமனம்

ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி மற்றும் முறைகேடுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு உள்ளக விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து இலவச wi-fi சேவை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து...

 234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மே 15 வரை நீடிப்பு

234 உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மே மாதம் 15ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது என்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. மார்ச் 15ஆம் திகதி மற்றும் நாளை 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமையுடன் பதவிக்காலம் நிறைவடைகின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான பதவிக்காலமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது என்று பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற எதிர்வரும் ஏப்ரல்...
Loading posts...

All posts loaded

No more posts