- Tuesday
- May 12th, 2026
பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் மீனவர்களின் வலையில் சடலம் ஒன்று சிக்கியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை கற்கோவளம் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் வலையில் இந்தச் சடலம் அகப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சடலத்தை அடையாளம் காண்பதற்காக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வழமையாக புத்தகங்கள் மனிதர்களுக்கான அறிவூட்டல்களையே வழங்குகிறது. மனிதனும் புத்தகங்களிலிருந்து வேறுபட்ட அறிவுகளையே பெற்றுக் கொள்கிறான். ஆனால் தற்போது அமெரிக்காவிலுள்ள ஆய்வாளர்கள் புத்தகமானது நீரை சுத்திகரித்து குடிநீராக பயன்படுத்த உதவும் என தெரிவித்துள்ளனர். குடிக்கக்கூடிய புத்தகம் (‘Drinkable book’) என்ற பெயரிலான இந்த புத்தகத்தில் ஒவ்வொரு பக்கமும் வௌ்ளி, செப்பு மற்றும் நனோ துகள்களால் ஆக்கப்பட்டுள்ளது. கழிவு...
திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் இடம்பெயர்ந்த 234 குடும்பங்களுக்கு காணி உறுதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றுமுன்தினம் (22) கையளிக்கப்பட்டன. இறுதி யுத்தத்தின் பின்னர் கடந்த அரசினால் விசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக முதலீட்டுச்சபைக்கு கையளிக்கப்பட்ட 818 ஏக்கர் காணியை புதிய அரசு மீண்டும் அரசுடையாக்கி மீண்டும் ஆரம்ப உரிமையாளர்களுக்கு கையளிக்கப்பட்டது. அந்த காணிகளுக்கான காணி உறுதிகளே ஜனாதிபதியினால்...
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் நேற்று இடம்பெற்று வருகின்றது. இந்தப் போட்டியே இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார கலந்துகொள்ளும் இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டியாகும். எனவே இரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய அவர் 18 ஓட்டங்களுடன் அஸ்வினின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து...
யாழ்.நகர் மற்றும் திருநெல்வேலிப் பகுதிகளிலிருந்து இரு சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி கேணியடி வைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து எரிந்த நிலையில் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தனித்து வசித்து வரும் இவருக்கு இன்று சனிக்கிழமை காலை உணவு கொடுப்பதற்காக அவரது மருமகன் அங்கு சென்ற போது வீட்டில் எரிந்த நிலையில் மூதாட்டியின்...
நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் போது வீட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி விட்டு செல்லுமாறு யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.வூட்லர் தெரிவித்துள்ளார். தற்போது நல்லூர் திருவிழாக் காலம் ஆரம்பித்து உள்ளமையால் இந்துக்கள் அனைவரும் கோயில்களுக்கு சென்று வருவது வழமை. இரவு,பகல் மற்றும் அதிகாலை என பல நேரங்களில் கோவில் களுக்கு சென்று வருகின்றனர். இவ்வாறு செல்லும் போது வீட்டில்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வீட்டினை கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் தொடர்பில் தொடர்ச்சியாக இழுபறி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய பட்டியல் தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தற்போது இரா.சம்பந்தனின் வீட்டினை வடக்கு மற்றும் கிழக்கினைச் சேர்ந்த கட்சி ஆதரவாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதன்போது, தேசிய பட்டியல்...
இலங்கை கடற்பரப்புக்குள் குறிப்பாக வடபகுதி கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய றோலர் படகுகளைக் கட்டுப்படுத்த சரியான நடவடிக்கையை இலங்கை மத்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்கள் கொடுக்க வேண்டும் என இலங்கை கடலுணவுகள் ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்தது. அந்தச் சங்கத்தின் கடலுணவு ஆய்வாளர் ஸ்ரீவ்...
நாளையதினம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் காலை 9.30 மணிக்கு முன்னரே பரீட்சை நிலையத்துக்கு சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. இம்முறை 2,907 பரீட்சை நிலையங்கiளில் பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் 3,400,930 மாணவர்கள் பரீட்சைக்கு எழுதவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நடைபெறும் போது ஏதாவது இடையூறுகள் ஏற்படுமாயின்...
காய்ச்சலால் பீடிக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட சிறுவன் ஒருவன் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை திடீரென மரணமானான். சம்பவம் பற்றித் தெரியவருவதாவது - கடந்த 18ஆம் திகதி காய்ச்சல் காரணமாக இந்தச் சிறுவன் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தான். காய்ச்சல் மாறாத நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் காய்ச்சல்...
"ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரும், அவர்கள் தலைமையில் உருவாகும் தேசிய அரசும் நாட்டின் நல்லாட்சிக்காக மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றவேண்டும். அத்துடன், நாட்டிலுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தாமதமின்றி உடன் தீர்வைக் காணவேண்டும். இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பரிபூரண ஆதரவை - ஒத்துழைப்பை வழங்கும்.'' - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
பனம் பொருள் உற்பத்தியில் ஈடுபடும் தொழில் முயற்சியாளர்களுக்கு ஒரு லட்சம் ரூபா வரையிலான இலகு கடன் வசதியும் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான வசதியையும் வழங்குவதற்கு பனை அபிவிருத்திச் சபை முன்வந்துள்ளது. பனம் பொருட்களை மூலப் பொருட்களாகக் கொண்டு பாவனைப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் முயற்சியாளர்களுக்கு தொழில் முயற்சியை அபிவிருத்தி செய்யும்...
மனிதரொருவர் அதிகமான நேரம் வேலை பார்ப்பதற்கும் அவருக்கு மூளையில் இரத்தக் கசிவு ஏற்படும் ஆபத்து அதிகரிப்பதற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக புதிய ஆய்வொன்று சுட்டிக்காட்டியுள்ளது. ஐரோப்பா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, ஆகிய நாடுகளில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களின் வேலை நேர மற்றும் உடல் நலத் தரவுகளை ஆராயும் போது வாரத்திற்கு 55 மணி நேரத்துக்கும் கூடுதலாக வேலை...
இலண்டன் நகரில் 10 அடுக்குமாடி குடியிருப்புக்கள் இரண்டினை இணைக்கும் முகமாகவும், இரண்டு குடியிருப்புக்களிடையே பாலம் போல் செயற்படும் வகையிலும் 25 மீற்றர் நீளமுள்ள நீச்சல் தடாகமொன்றை நிர்மாணிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 25 மீற்றர் நீளமும் 3 மீற்றர் ஆழமும் கொண்டதாக அமைக்கப்படவுள்ள இந்த நீச்சல் தடாகம் ஸ்கை பூல் "Sky Pool" என அழைக்கப்படுகிறது. அத்துடன்...
ஆவரங்கால் சந்தியில் இருந்து அச்சுவேலி வைத்தியசாலை வரை, வீதியின் இருமருங்கிலும் நடப்பட்டிருந்த பழைய மின்கம்பங்களை அகற்றுமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் ஆரம்பகாலத்தில் நடப்பட்ட மின்கம்பங்களில் இருந்து மின்சாரம் வழங்கப்படுவது துண்டிக்கப்பட்டு வீதிகளின் அருகில் உள்ள காணிகள் ஊடாக அப்பகுதிகளில் புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும், அங்கு ஏற்கெனவே இருந்த பழைய மின்கம்பங்கள்...
நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவத் திருவிழாவின் போது ஆலயச் சூழலைச் சுற்றிலும் சுமார் 300 கடைகள் அமைப்பதற்கு அனுமதி கொடுக்கவுள்ளதாக யாழ். மாநகர சபை ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன் தெரிவித்தார். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த 19ஆம் திகதி முதல் ஆரம்பமாகி 25 தினங்களுக்கு நடைபெறவுள்ளது. மஹோற்சவ காலத்தில் ஆலய வளாகத்தில் கடைகள் அமைப்பதற்கான...
சரசாலை பகுதியில் இன்று (21) காலை மர்மப் பொருள் ஒன்று வெடித்ததில் கணவன் மற்றும் மனைவி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேயிடத்தைச் சேர்ந்த சடையன் வர்ணன் (வயது 27), வர்ணன் பேபிராணி (வயது 25) ஆகிய இருவருமே படுகாயமடைந்தனர். இதில் மனைவி முகத்தில்...
6.396 மில்லிகிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள பிரபலமான பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி கற்கும் பாடசாலை மாணவனை அரச சான்று பெற்ற நன்னடத்தை பாடசாலையில் அனுமதிக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன, வியாழக்கிழமை (20) உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சிவில் உடையில் சென்ற பொலிஸார்...
தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும்கூட, தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போவதாக ஜனநாயகப் போராளிகள் கடசியின் இணைப்பாளர் நடேசபிள்ளை வித்தியாதரன் கூறியுள்ளார். ராணுவப் புலனாய்வாளர்கள் தங்களை ஏவியிருப்பதாகக் கூறி கூட்டமைப்பு தங்களைப் புறக்கணித்தது என்கிறார் வித்யாதரன். அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் முடிந்தபோது, ராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வுப் பயிற்சியளிக்கப்பட்டதன் பின்னர், சமூகத்தில் இணைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின்...
சமரச தேசிய அரசாங்கமாக புதிய பாராளுமன்றில் ஒன்றிணைந்து செயற்படவென ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர் , அதே நிகழ்வில் ஐதேக பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பதில் பொதுச் செயலாளர்...
Loading posts...
All posts loaded
No more posts
