கிரீசுக்கு படகில் சென்றபோது விபத்து: 4குழந்தைகள் உட்பட 22 அகதிகள் பரிதாபமாக பலி

உள்நாட்டுப்போர் நடந்து வரும் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.சிரியாவில் இருந்து செல்கிற அகதிகள், துருக்கி வழியாக கிரீஸ் நாட்டின் கொஸ் தீவுக்கு செல்கின்றனர். இப்படிஒரு படகு 200-க்கும் மேற்பட்ட அகதிகளை சுமந்து கொண்டு துருக்கியில் இருந்து கடல் மார்க்கமாக ஒரு மரப்படகில் கொஸ்...

ததேகூவுக்குள் சிக்கலை ஏற்படுத்தும் அவசியம் சிலருக்கு உள்ளது!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குள் சிக்கலை ஏற்படுத்தும் தேவைப்பாடு சிலருக்கு உள்ளதாக, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதனாலேயே கூட்டமைப்பின் தலைவர்கள் தன்னுடன் அதிருப்தியில் உள்ளதாக பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளாமையால், கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையில் எனக்கு முரன்பாடு...
Ad Widget

போர்க்குற்றங்களுக்கு நீதி விசாரணையும், அரசியல் தீர்வை அடைவதற்கான பொறிமுறையும் தேவை

கோர யுத்தத்தால் உயிரிழப்புகளையும், சொத்தழிவுகளையும் சந்தித்த எமது மக்களுக்கு நீதி விசாரணை நடாத்தப்பட்டு, உண்மைகள் கண்டறியப்படுவதோடு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுடன், பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கான பரிகாரமும் காணப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.   அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்களுக்கு...

வித்தியா படுகொலை : சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைச் சந்தேக நபர்களான 9 பேரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் லெனின் குமார் உத்தரவிட்டார். குறித்த சந்தேக நபர்களை இன்று ஊர்காவாற்றுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே ஊர்காவற்றுறை நீதவான் லெனின் குமார் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

கண் சத்திரசிகிச்சைக்காக கண்டிக்குச் செல்லும் யாழ்.வாசிகள்

யாழ்ப்பாணத்தில் கண் சத்திரசிகிச்சை போதிய திருப்தியில்லாமல் இருப்பதால் பெருமளவான மக்கள் கண்டிக்குச் செல்கின்ற நிலைமை அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இதர தனியார் வைத்தியசாலைகளிலும் கண் சிகிச்சை மற்றும் கண் சத்திரசிகிச்சை என்பன இடம்பெறுகின்றன. எனினும், ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தில் கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள் குறைவாகவுள்ளனர். இதனால், யாழ்ப்பாணத்தில் கண் சத்திரசிகிச்சை செய்பவர்கள் பலர் கண்டியிலுள்ள தனியார்...

வீட்டுக்குள்ளேயே நிர்வாண போல் நடன கிளப் நடத்தும் கிறிஸ் கெய்ல்

டி20 கிரிக்கெட் அல்லது சிக்ஸ் என்றாலே நமக்கு விரைவில் ஞாபகம் வரும் வீரர் வெஸ்ட்இண்டீசின் ஜமைக்கா வீரர் கிறிஸ் கெய்ல்தான். இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். தொடரில் இவர் பந்துகளை சிக்சராக பறக்க விடுவதை பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும். மைதானத்தில் எவ்வளவு ஆக்ரோஷமாக விளையாடுகிறாரோ, அதேபோல் எதையும் யதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் மனிதரும் இவர்தான். எந்தவொரு நேரத்திலும் தனது...

நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நான்கு கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையிலேயே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. சார்க் வலயத்தில் செய்மதி பரிமாற்றும் வேலைத்திட்டம், வவுனியா மாவட்ட வைத்தியசாலையை புனரமைக்கும் வேலைத்திட்டம், சிறிய அபிவிருத்திக்கு உதவி வழங்குதல், இந்தியாவில் 17 மாநிலங்களில்...

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களை மீள் மின்னேற்றலாம்

வாகனங்களை மீள் மின்னேற்றம் செய்வதற்கு அவசியமான உபகரணங்கள் மற்றும் மின்னேற்றல் கட்டமைப்பை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஸ்தாபிக்கத் திட்டமிட்டுள்ளதாக கனியவள மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். மின் பாவனையை மாத்திரம் கொண்ட வாகனங்களுக்கு தற்போது அதிக கேள்வி நிலவுவதால் இந்த திட்டம் அமுல்படுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மின்னை மீள் நிரப்பும்...

மோடியை சந்தித்தார் ரணில்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, டெல்லியில் உள்ள ஐதராபாத் ஹவுசில் அந்த நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். மேலும் முன்னதாக அவர் டெல்லியில் இந்திய மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக...

தற்கொலைக்கு முயன்ற இலங்கை அகதி – திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்!

தமிழகத்தின் திருச்சி மத்திய சிறையில் இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வேறு சிறை முகாம்களில் இருந்து மாற்றப்பட்ட 15 பேர் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அடிக்கடி முகாம் சிறைகளில் உள்ளவர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் முகாம் சிறையில் உள்ள யுகப்பிரியன்...

கைதடியில் விபத்து இளைஞர் பலி! மற்றொருவர் படுகாயம்!!

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதியதில் அதனை செலுத்தி வந்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். கைதடிச் சந்திக்கு அண்மையாக இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் கைதடியை சேர்ந்தவரான சிவலிங்கம் தீபன் (வயது 31) என்பவர் மரணமானார். ஜெகதீஸ்வரன் (வயது 31) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...

தமிழகத்தில் கரையொதுங்கிய மர்மப் படகு – இலங்கையைச் சேர்ந்ததா?

தமிழகத்தின் நாகை மாவட்டம் - வேதாரண்யத்தில் ஆளில்லா கண்ணாடியிழப் படகு ஒன்று கரை ஒதுங்கியது இன்று காலை தெரியவந்தது. பதிவு எண் போன்ற விபரங்கள் இல்லாத இந்த படகு இலங்கையைச் சேர்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. வேதாரண்யம், மணியன்தீவு கடற்கரையில் இஞ்சின் பொறுத்தப்பட்ட நிலையில் ஒதுங்கிய இந்த படகை, கைப்பற்றிய கடலோரக் காவல் நிலைய பொலிசார்...

யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் கையெழுத்துப் போராட்டம்

இன்று செவ்வாய்க்கிழமை 15ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தில் சர்வதேச விசாரணையை வலியூறுத்தியூம் உள்ளக விசாரணைப் பொறிமுறையை நிராகரித்தும் கையழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. இப்போராட்டத்தில் பெருமளவான மாணவர்கள் ஊழியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு கையொப்பங்களை இட்டனர். மேலும் படங்களுக்கு..

ஈரானிய சினிமாவுக்கு இசையமைத்ததால் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு… ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

முகமது நபி பெயர் சூட்டப்பட்ட ஈரானிய படத்திற்கு இசையமைத்தால் பத்வா வெளியிடப்பட்டதையடுத்து, இது குறித்து அப்படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் விளக்கமளித்துள்ளார். முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக பத்வா எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார். ஈரான் மொழி...

குடிநீர் இல்லாமல் 2,000 பாடசாலைகள்

இலங்கை முழுவதும் சுமார் 2,000 பாடசாலைகள் சுத்தமான குடிநீர் இல்லாத நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், நேற்று திங்கட்கிழமை(14) தெரிவித்துள்ளார். அத்துடன், எந்தவிதமான மலசலகூட வசதிகள் இன்றி சுமார் 500 பாடசாலைகள் உள்ளதுடன், ஒரு மலசலகூடத்துடன் மாத்திரம் 2,000 பாடசாலைகள் உள்ளதாகவும் அவர் கூறினார். கணினி, ஆய்வுக்கூடம், நூலகம் இல்லதாக நிலையில்...

U-turn இல்லை

கடந்த காலங்களில் வழங்கப்பட்ட நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் அனுபவங்களையும் 'யு டேர்ண்'களையும் வைத்து, தம்மை எடைபோட வேண்டாமென, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமவீர கோரிக்கை விடுத்துள்ளார். ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்வாண்டுமார்ச் மாதத்தில் இடம்பெற்ற 28ஆவது மனித...

சர்வதேச விசாரணையை வலியூறுத்தி நடைபெற்ற நடைபயணத்தின் இறுதி நிகழ்வு

சர்வதேச விசாரணையை வலியூறுத்தி நடைபெற்ற நடைபயணத்தின் இறுதி நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

கோப்பாயில் இராணுவம் மீண்டும் காணி அபகரிப்பு முயற்சி! – மக்களின் எதிர்ப்பினால் நிறுத்தம்

கோப்பாய் பிர­தேச செயலர் பிரிவில் இரா­ணுவத் தேவைக்­காக சுவீகரிப்பதற்கு, ஒன்­றரை ஏக்கர் காணியை அள­விடும் பணி மக்கள் எதிர்ப்புத் தெரி­வித்­த­மையால் கைவி­டப்­பட்­டுள்­ளது. கோப்பாய் பிர­தேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கோப்பாய் மத்தி கிராம அலு­வலர் பிரிவின் கீழ் கோப்­பாயில் இருந்து கைதடி செல்லும் வீதியில் சுமார் ஒரு ஏக்கர் காணியில் இரா­ணுவ முகாம் அமைந்­துள்­ளது....

வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம் உதயம்

வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம், 13ஆம் திகதி உதயமாகியுள்ளது. யாழ்ப்பாண ஊடக மையத்தில் ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனச் செயலாளர் தர்மசிறி லங்காபேலி தலைமையில் இடம்பெற்ற செயலமர்வின் போதே இது உருவாக்கப்பட்டது. வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்ட ஊடக அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். தகவல்...

நல்லூர் திருவிழா : யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 14.6 மில்லியன் ரூபாய் வருமானம்

நல்லூர் உற்சவ காலத்தில் கடைகளுக்கான இடங்கள் வாடகைக்கு விடப்பட்டதின் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 14.6 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக யாழ். மாநகர சபை கணக்காளர் தெரிவித்தார். நல்லூர் உற்சவ காலத்தின் போது, ஆலயத்தைச் சூழவுள்ள வீதிகளில் கடைகள் அமைப்பதற்கான இடம், யாழ்ப்பாணம் மாநகர சபையால் ஏலத்தில் வாடகைக்கு விடப்பட்டது. இதில் அதிகூடிய ஏலம்...
Loading posts...

All posts loaded

No more posts