Ad Widget

கிரீசுக்கு படகில் சென்றபோது விபத்து: 4குழந்தைகள் உட்பட 22 அகதிகள் பரிதாபமாக பலி

உள்நாட்டுப்போர் நடந்து வரும் சிரியா, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.சிரியாவில் இருந்து செல்கிற அகதிகள், துருக்கி வழியாக கிரீஸ் நாட்டின் கொஸ் தீவுக்கு செல்கின்றனர்.

At-least-22-die-as-refugee-boat-capsizes-off-Turkish-coast_SECVPF

இப்படிஒரு படகு 200-க்கும் மேற்பட்ட அகதிகளை சுமந்து கொண்டு துருக்கியில் இருந்து கடல் மார்க்கமாக ஒரு மரப்படகில் கொஸ் தீவுக்கு சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது.

உடனடியாக துருக்கி கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து சென்று 211 பேரை பத்திரமாக மீட்டனர்.எனினும் 22 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. அவர்களில் 11 பேர் பெண்கள், 4 பேர்குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.பலியானவர்கள் எந்த நாட்டினர் என்பது இன்னும் உறுதியாக தெரியவரவில்லை.

Related Posts