டக்ளஸ் தேவானந்தாவின் வழக்குச் செலவை வழங்குமாறு உதயனுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

டக்ளஸ் தேவானந்தாவின் வழக்குச் செலவை வழங்குமாறு உதயன் உரிமையாளர், பிரதம ஆசிரியருக்கு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உதயன் பத்திரிகைக்கு எதிராக ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தொடுத்திருந்த அவதூறு வழக்கு நேற்று தொடர் விசாரணைக்கு வந்திருந்தபோதே மேற்படி உத்தரவை யாழ் மாவட்ட நீதிபதி கஜநிதிபாலன் விடுத்திருந்தார். மேற்படி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது உதயன்...

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய ஆடைக்கட்டுப்பாட்டில் தளர்வு

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய ஆடைக்கட்டுப்பாட்டில் தற்போது தளர்வு நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் நீண்டகாலப் புனரமைப்பின் பின் கும்பாபிஷேகம் கண்ட இவ்வாலயத்தில் குறித்த ஆலய தர்மகத்தா குழுவினரால் ஆலயத்திற்குள் வழபடச்செல்லும் ஆண்கள் ஷேட் அணியாமல் வேட்டியுடனும் பெண்கள் பஞ்சாபி முதலிய ஏனைய ஆடைகள் தவிர்த்து சேலையுடனும் வரவேண்டும் என்ற சட்டம்விதிக்கப்பட்டதால் அடியவர்கள் குறிப்பாக பெண்கள் பல்வேறு...
Ad Widget

கடலுக்குச் செல்வோர் அவதானம்

நாட்டில் நிலவும் அசாதாரண வானிலை காரணமாக கடற்படை மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானமாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. விஷேடமாக ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வேகத்தில் காணப்படும் என்று அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

24 மணிநேரமும் முறையிடலாம்

சிறுவர்கள் மற்றும் மகளிருக்கு எதிராக நடைபெறும் துஷ்பிரயோகம் தொடர்பாக முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணிநேர சேவை, முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம், சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை 1929 என்ற இலக்கத்துக்கும் மகளிருக்கு எதிரான துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை 1938 என்ற இலக்கத்துக்கும் அழைப்பை ஏற்படுத்தி...

யாழ். பல்கலையின் கலைப்பீடத்தின் கல்விச் செயற்பாடு நிறுத்தம்!!

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள கலைப்பீடத்தின் மூன்றாம், நான்காம் ஆண்டு மாணவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை அடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் இந்த...

சங்கிலியன் சிலையையும் விட்டுவைக்காத சோடா !!

நல்லூர் முத்திரைச் சந்தியில் உள்ள சங்கிலியன் சிலையில் சோடாவுக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளமை தமிழ் மக்களை பெரும் விசனமடையச் செய்துள்ளது. தமிழ் மக்களின் வீரத்தை வெளிப்படுத்திய சங்கிலி மன்னன் கையில் ஏந்தியிருக்கின்ற வாளில் சோட நிறுவனத்தின் விளம்பரச் சின்னம் மாட்டப்பட்டுள்ளது. நல்லூர் ஆலய மகோற்சவத்திற்கு வருகின்ற மக்களுக்கு தமது குளிர்பானம் தொடர்பில் விளம்பரம் செய்வதற்காக குறித்த நிறுவனத்தின்...

வித்யாவின் கண்ணிலிருந்த விந்தணுவை பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு

யாழ். புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவி லோகநாதன் வித்யாவின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம், திங்கட்கிழமை (15) உத்தரவிட்டுள்ளது. இந்த கொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொலை செய்யப்பட்ட மாணவியின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து...

குடிநீர் திட்டத்துக்கு மீனவர் சமாசம் எதிர்ப்பு

வடமராட்சி கிழக்கின் மருதங்கேணி மற்றும் தாளையடி கடல் பிரதேசத்திலிருந்து நீரைச் சுத்திகரித்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கோரி, வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக சங்கத் தலைவர் பொ.பிரேமதாஸ் தெரிவித்தார். சமாசத்தின் நிர்வாக எல்லைக்குட்பட்ட மணற்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையுற்ற 15 கிளைச்...

வடமாகாண சபை மாங்குளத்தில் அமைக்கப்படும்

வடமாகாண சபையின் கட்டடத் தொகுதியை வடமாகாணத்தின் மத்தியாகக் கொள்ளப்படும் மாங்குளத்தில் அமைப்பதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாங்குளம் பகுதியில் வடமாகாண சபை கட்டடத் தொகுதியை அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படும் காணியை, வடமாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், வடமாகாண ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் ஆகியோர் திங்கட்கிழமை (14) பார்வையிட்டுள்ளனர். மாங்குளம் சந்தியிலிருந்து 500 மீற்றர்...

சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக்கப்படும்

நாட்டில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் சிறுவர்களையும் மகளிர்களையும் பாதுகாப்பதற்குமான சட்டத்தை மிகவும் கடினமாக்கப்படவேண்டும் என்று மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்தார். இசுருபாயவில் அமைந்துள்ள மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அலுவலகத்தில் தனது கடமைகளை நேற்று செவ்வாய்க்கிழமை (15) பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே...

இலங்கை மனித உரிமைகள் விவகாரத்தில் பின்வாங்கும் அமெரிக்கா!- கெலம் மக்ரே பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கை மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா பின்வாங்குவதாக, சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குநர் கலம் மக்ரே குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த கலம் மக்ரே, அமெரிக்க மற்றும் இலங்கை அரசை பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அவர் மேலும் பேசுகையில், மைத்திரிபால சிறிசேன அரசு மேற்கு நாடுகளுடன் கூட்டணி அமைத்ததால் அமெரிக்கா பின்வாங்குகிறது.சீனாவுக்கு ராஜபக்ச...

ஐ. நாவில் மங்கள சமரவீர பொய் கூறுகின்றார் – சுரேஸ்

உள்ளக விசாரணை என்பது வெறும் கண்துடைப்பாக இருக்குமே தவிர, அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமைகள் அவையில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆற்றிய உரை சம்பந்தமாக நீர்வேலியில் உள்ள அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சுரேஸ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து அவர்...

தலைமன்னார்- இராமேஸ்வரம் தரைப்பாலம் குறித்து ரணில்-கட்கரி பேச்சு

தலைமன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைப்பது தொடர்பாக, இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், இந்திய மத்திய தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேச்சுக்களை நடத்தியுள்ளார். 5.19 பில்லியன் டொலர் செலவில், தலைமன்னாரையும் இராமேஸ்வரத்தையும் இணைக்கும் தரைவழிப் பாலத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய மத்திய அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. 22 கி.மீ...

என் அடுத்தப் படத்தைப் பெண்கள் பார்க்கவேண்டாம் – மிஷ்கின்

ஆர்.பி. ரவி இயக்கத்தில் உருவாகியுள்ள படம், தற்காப்பு. இயக்குநர் வாசுவின் மகன் சக்தி தனது பெயரை சக்திவேல் வாசு என்று இந்தப் படத்தில் இருந்து மாற்றிக்கொண்டுள்ளார். தற்காப்பு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் மிஷ்கின் பேசியதாவது: ஒரு படம் தோற்றுவிட்டால் 50 குடும்பங்கள் தோற்றுவிடும். ஒரு கலைஞனுக்குச் சுதந்திரம் தேவை. படத் தணிக்கையின்போது...

மீனவர் பிரச்னைக்கு மனிதாபிமானத் தீர்வு: மோடி-ரணில் பேச்சுவார்த்தையில் முடிவு

இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்னையை மனிதாபிமானத்துடன் அணுகி, தீர்வு காண்பது என தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி - இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. இலங்கை பிரதமராக நான்காவது முறையாக ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி பதவியேற்றார். இதைத் தொடர்ந்து, தனது முதலாவது வெளிநாட்டுப்...

பேஸ்புக் அலுவலகம் எப்படி இருக்கும் ?? இதோ அலுவலகத்தை அறிமுகப்படுத்துகின்றார் மார்க் ஜுக்கர்பெர்க்

தினமும் 665 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் பேஸ்புக் அலுவலகம் எப்படி இருக்கும் என்று அறிந்துக்கொள்ள விரும்பியதுண்டா? முதல் முறையாக பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது அலுவலகத்தை பேஸ்புக் லைவ் மூலமாக அறிமுகப்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மற்ற அலுவலகங்கள் போல இல்லாமல் மிகப் பெரிய திறந்த வெளியாக காட்சி அளிக்கிறது கலிபோர்னியாவில்...

பேஸ்புக் லைக் பிரியர்கள் ஜாக்கிரதை: விரைவில் வருகிறது டிஸ்லைக் பட்டன்

பேஸ்புக்கில் ஒரு படத்தையோ அல்லது கருத்தையோ பதிந்துவிட்டு, அதை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள் என்று அடுத்தவர்களின் அங்கிகாரத்திற்காக ஏங்குவது பலருக்கு ஒரு மனநோயாக மாறிவிட்ட நிலையில், லைக் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் விரைவில் பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன் அறிமுகப்படுத்தப்படும் என மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். கலிபோர்னியாவில் இருக்கும் பேஸ்புக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு...

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவி ஏற்றார்

ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமராக டோனி அப்பாட் கடந்த 2 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார். அவர் பொருளாதார ரீதியில் நாட்டை முன்னேற்ற தவறி விட்டதாக மூத்த மந்திரி டர்ன்புல் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ஆளும் தாராளவாத கட்சிக்குள் நடந்த ஓட்டெடுப்பில் டர்ன்புல் வெற்றி பெற்றார். டோனி அப்பாட் தோல்வி அடைந்தார். இதையடுத்து அவர் பதவி...

போட்டி நடுவர் பணியில் இருந்து விலகுகிறார் மகனாமா

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் 49 வயதான ரோஷன் மகனாமா கடந்த 2004–ம் ஆண்டில் இருந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) எலைட் போட்டி நடுவர் (மேட்ச் ரெப்ரி) குழுவில் பணியாற்றி வருகிறார். இதுவரை அவர் 58 டெஸ்ட், 222 ஒரு நாள் போட்டி மற்றும் 35 இருபது 20 ஓவர் போட்டிகளில் போட்டி...

த.தே.கூட்டமைப்புக்கு 3 மாவட்டங்களின்அபிவிருத்திக் குழு தலைவர் பதவி

மூன்று மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவர் பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம், வன்னி, மற்றும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவர் பொறுப்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கப்படுகின்றது. பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அரசியற் கட்சிக்கு அவர்கள் வெற்றி பெற்ற மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக்களின் தலைவர் பதவி வழங்க அரசு...
Loading posts...

All posts loaded

No more posts