- Thursday
- May 14th, 2026
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவருமான பிள்ளையான் என்கின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்றிருந்தபோதே பிள்ளையான் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்வதற்காக...
நாட்டின் பல்வேறு சிறைகளிலும் தடுத்து வைக்கப் பட்டுள்ள அரசியல் கைதிகள் இன்று முதல் சாகும்வரை யிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். கொழும்பு, மெகஸின், சீ.ஆர்.பி அநுராதபுரம், தும்பறை, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய சிறைகளில் சுமார் 20 வருடங்களுக்குமேலாக தடுத்து வைக்கப்பட் டுள்ள சுமார் 250இற்கு அதிகமான அரசியல் கைதிகளே இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில்...
வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் அவரது உதவியாளர்களது சொந்த நிதி மூலம் மாதம் தோறும் வாழ்வாதார உதவிகள் வழக்கும் திட்டம் கடந்த மாதம் 5ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன் இரண்டாம் கட்டம் கடந்த சனிக்கிழமை மாலை வடக்கு மாகாண அவைத் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன் போது துவிச்சக்கரவண்டிகள், தையல் இயந்திரங்கள்,...
காந்தீயம் அமைப்பின் மூத்த தலைவர் டேவிட் ஐயா நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மருத்துவமனையில் காலமானார். 1924 ஆண்டு யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை – கரம்பொன்னில் பிறந்த சொலமன் அருளானந்தம் டேவிட் என்ற முழுப்பெயரைக் கொண்ட இவர் லண்டன், கென்யா போன்ற நாடுகளில் கட்டடக் கலைஞராகப் பணியாற்றி தாயகம் திரும்பினார். நாடு திரும்பிய அவர் ராஜசுந்தரம் போன்றவர்களுடன்...
இலங்கை அரசு தமிழ் இனஅழிப்பை மேற்கொண்ட குற்றச்சாட்டுக்கும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்திய குற்றச்சாட்டுக்கும் ஆளாகிச் சர்வதேசத்தின் முன்னால் இன்று தலைகுனிந்து நிற்கிறது. இக்குற்றச்சாட்டுகளோடு, இலங்கை அரசு தமிழ் மக்களைப் பட்டினியால் கொலை செய்த பட்டினிச்சாவுக் குற்றச்சாட்டுக்கும் முகங்கொடுக்க வேண்டியிருந்திருக்கும். அவ்வாறு ஆளாகாமல் இலங்கை அரசை இரணைமடுக்குளமே காப்பாற்றியது என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்...
தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் விதத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் பண்பாட்டுப் பெருவிழா நடைபெற்றது. வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு, யாழ்.கலாச்சார பேரவை, யாழ்.மாவட்டச் செயலகம் இணைந்து நடத்திய யாழ்.பண்பாட்டு பெருவிழா நேற்றுகாலை 9 மணிக்கு ஆரம்பமானது. யாழ். மாவட்டச் செயலர் என்.வேதநாயகன் தலமையில் நடைபெற்ற இப்பண்பாட்டு பெருவிழாவில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பிரதம...
வடமராட்சி, வல்வெட்டித்துறை, தெணியம்பை பகுதியில் வெள்ளைநிற நாகபாம்பு ஒன்று நேற்று அகப்பட்டுள்ளது. வீதியில் காணப்பட்ட 5 அடி நீளமான இந்த வெள்ளை நிற நாகபாம்பினை அப்பகுதி மக்கள் பிடித்து போத்தலில் அடைத்துவல்லிபுர ஆழ்வார் ஆலயப் பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளனர்.
கலாசாரத்தை உலகுக்கு கற்றுக் கொடுத்து, பண்பாட்டிற்கு வரைவிலக்கணமாக வாழ்ந்தவர்கள் யாழ். மக்கள் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், யாழ். மாவட்ட கலை கலாசாரப் பேரவையும், யாழ். மாவட்டச் செயலகமும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு பெருவிழா யாழ்.மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. குறித்த நிகழ்வில்...
கோப்பாய் பொலிஸாரின் அசமந்தப் போக்கை கண்டித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி வீட்டுக்கு பொது மக்கள் நீதி கேட்டு சென்றனர். கடந்த முதலாம் திகதி திருநெல்வேலி சந்தையில் இருந்து வீடு திரும்ப முற்பட்ட கோண்டாவில் வடக்கு அன்னுங்கை வீர பத்திரர் கோவிலடியைச் சேர்ந்த வயோதிபப் பெண்ணான சண்முகம் கமலா என்பவர் மோட்டார் சைக்கிளால்...
வலி. வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் இன்று (11) பகல் மூன்று கிராம சேவகர் அலுவலகங்கள் திறந்து வைக்கப்படவுள்ளன. அரசாங்கத்தின் கிராமத்திற்கு பத்து லட்சம் ரூபா என்ற நிதித் திட்டத்தின் கீழ் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கிராம சேவகர் அலுவலகங்களை, பிரதம விருந்தினராக கலந்து கொள்ளும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் திறந்து...
யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு நேற்று (10) யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெற்றது. மேற்படி இரு மாவட்டங்களிலும் இருந்து 687 இளைஞர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முகத்தேர்வே நடைபெற்றது. கொழும்பில் இருந்து வருகை தந்துள்ள பொலிஸ் ஆட்சேர்ப்பு பிரிவினர், பொலிஸ் சேவைக்கு விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டவர்களுக்கான...
இலங்கையில் தற்போது பாவனையில் இருக்கும் தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவது குறித்து நீண்டகாலமாக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு வருடங்களினுள் இந்த செயற்பாட்டை நடைமுறைக்குக் கொண்டு வரவும், அதன் பின்னர் இலங்கையிலுள்ள அனைவருக்கும் இலத்திரனியல்...
பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார். தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும்...
விண்வெளியில் பல விண்கற்கள் மிதக்கின்றன அவற்றில் பெரும்பாலானவை பூமியை நோக்கிப் பாய்ந்து வரும் போது எரிந்து சாம்பலாகின்றன. சில கற்கள் பல துண்டுகளாக உடைந்து பூமியின் மீது விழுந்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், தற்போது பூமிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மிகப்பெரிய இராட்சத விண்கல் ஒன்று தற்போது பூமியை நெருங்கி வருகிறது. அதற்கு 86666 (2000...
பலஸ்தீனின் முஸ்லிம் பெண்ணொருவரை இஸ்ரேல் இராணுவத்தினர் ஈவிரக்கிமின்று துப்பாக்கியால் சுடும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் குறித்த பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர்களை இஸ்ரேல் இராணும் கைது செய்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகன முஸ்லிம் பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகச்சை பெற்று வருகின்றார். கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல்...
இன்னும் விடுவிக்கப்படாத பொது மக்களின் காணிகளை விடுவிக்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அவர் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்துவந்துள்ள பொதுமக்களின் 615 ஏக்கர் காணிகளை மீண்டும் உரிமையாளர்களிடம் கையளித்துள்ளமை...
வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள நலன்புரி முகாம்களை, நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் நேரில் வந்து பார்வையிடவேண்டும் என நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்கள் சார்பாக இடம்பெயர்ந்த மக்கள் பிரதிநிதியொருவர் கோரிக்கை விடுத்துள்ளார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் தொடர்பான விசேட...
முழுமையான பத்திரிகை சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அடிப்படைவாதிகளின் குறுகிய நோக்கங்களை அடைந்துகொள்வதற்கு இடமளிக்காது உண்மைக்கு முதலிடம் வழங்க வேண்டியது ஊடகவியலாளர்களின் பொறுப்பாகும் என ஜனாதிபதி மைத்திரபால தெரிவித்தார். நாட்டின் சுதந்திரத்தையும் ஊடகத்துறையின் சுதந்திரத்தையும் முழுமையாக உறுதிப்படுத்துவதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்போடு இருப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதான பத்திரிகைகளின் தலைப்புகளை பிரசுரிக்குமாறு கட்டளை...
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 என்ற தெலைபேசி இலக்கத்திற்கு தேவையற்ற விடயங்கள் சம்பந்தமான அழைப்புக்களே அதிகம் கிடைப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 1929 தெலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கக் கூடிய அழைப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும், எனினும் அதில் அதிகமானவை சம்பந்தமில்லாத அழைப்புக்கள் என்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் குறித்த தொலைபேசி...
தனது குழந்தையை கவனிக்காமல் பேஸ்புக்கில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த தாய் ஒருவர் தனது குழந்தையயை பறிகொடுத்துள்ளார். பிரித்தானியாவின் Yorkshire பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாய் பேஸ்புக்கில் அரட்டை அடித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குழந்தை வீட்டின் அருகாமையில் உள்ள நீர்நிலை ஒன்றில் விளையாடிக்கொண்டிருந்துள்ளது. இதையறியாத தாய் பின்னர் திடீரென தனது குழந்தையை காணவில்லை என அப்பகுதி முழுவதும்...
Loading posts...
All posts loaded
No more posts
