- Thursday
- May 14th, 2026
நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குமாறு கோரி, யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அத்துடன், அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக்கோரி அதனுடன் இணைந்து, மற்றுமொரு சுவரொட்டியும் ஒட்டப்பட்டுள்ளது. சமவுரிமை இயக்கம் என்ற பெயரில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக் கடற் பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டதாகத் தெரிவித்து இன்று புதன்கிழமை பருத்தித்துறை கடற்ப்பரப்பில் வைத்து 9 இந்திய மீனவர்கள் காங்கேசன்துறைக் கடற்ப்படையினர் கைது செய்துள்ளனர். இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இழுவைப்படகு ஒன்றில் பருத்தித்துறை கடற்ப்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர்...
தீவிரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரை நாடுகடத்துமாறு கனடா உத்தரவிட்டுள்ளதாக கனேடியச் செய்திகள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்ததாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாணிக்காவசம் சுரேஸ் என்ற நபரையே இவ்வாறு நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கனேடிய மத்திய நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பத்துள்ளது.1995ம் ஆண்டு முதல் கனேடிய அரசாங்கம்...
கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்புக்களில் கல்வி கற்று வரும் பாடசாலை மாணவிகளை மறைமுகமாக பாடசாலைப் பணியாளர் ஒருவர் கையடக்கத்தொலைபேசியில் புகைப்படங்களை எடுத்து வருவதாகவும் இதனால் மாணவிகள் மத்தியில் அச்ச நிலை காணப்படுகின்றது. என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகரில்; உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர மற்றும் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப்பிரிவுகளில் கல்வி...
யாழ் நீதிமன்றம் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான 20 வழக்குகளில், கடந்த 5 மாதங்களாக விளக்க மறியலில் இருந்து வந்த சந்தேக நபர்களுக்கு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கடும் நிபந்தனையுடன் பிணை வழங்கியுள்ளார். இந்த வழக்குகளிலும் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களுக்கு பிணை கோரி தாக்கல் செய்யப்பட்ட 20 வழக்குகள் நீதிபதி இளஞ்செழியன், முன்னிலையில் விசாரணைக்கு...
தமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் இன்றைய தினம் நண்பகலளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் குழுவொன்று விஜயம் செய்யவுள்ளது. பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...
பாரிய போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறி கைதுசெய்யப்பட்ட வெலே சுதா எனப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
ஷங்கரின் எந்திரன் 2 படத்தில் ஏமி ஜாக்சன் நடிக்க உள்ளதை நினைத்து பல நடிகைகள் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்களாம். வெற்றிகரமான இயக்குனராக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் ஷங்கர். அவர் படத்தில் நடிக்க நடிகர், நடிகைகள் ஏங்குகிறார்கள். ஷங்கரின் இயக்கத்தில் ஒரு படத்திலாவது நடித்துவிட்டால் அது பெரிய பாக்கியம் என்று நினைக்கிறார்கள். இந்நிலையில் ஏமி ஜாக்சனுக்கு...
சமூக வலைத்தளங்களில் சமீபகாலமாக பிரபல நடிகர்களின் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்ட ஒரு டுவிட்டுக்கு, அஜித் ரசிகர் ஒருவர் அவரை கிண்டல் செய்து கமெண்ட் ஒன்றை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. எனவே, கடுப்பான உதயநிதி, அவரிடம் அஜித்தை பற்றி தவறான வார்த்தைகளால்...
வடமாகாணத்திற்கு புதிய பிரதி பொலிஸ்மா அதிபராக டபிள்யூ.எவ்.யூ.பெர்னாண்டோ இன்றைய தினம் பதவியேற்றுள்ளார். குறித்த பதவியேற்பு நிகழ்வு இன்றைய தினம் காலை 10 மணிக்கு காங்கேசன்துறை பகுதியில் உள்ள வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது. வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் எ.ஜயசிங்க இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் குறித்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
2001 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் பிரசாரக் காலப்பகுதியில் ஊர்காவற்றுறைப் பகுதிக்கு பிரசார நடவடிக்கைகளுக்காக கூட்டமைப்பினர் சென்றபோது ஈ.பி.டி.பி. உறுப்பினர்களினால் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் இருவர் கொல்லப்பட்டதுடன் 22 பேர் காயமடைந்திருந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று திருமலை மேல் நீதிமன்ற நீதிபதி டி.சசி மகேஸ்வரன் முன்னிலையில் இடம் பெற்றது. இந்த...
நாங்கள் குற்றவாளிகள் அல்ல எங்களை பிணையில் செல்ல அனுமதியுங்கள் என புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்கள் நீதவானிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது ஒன்பது சந்தேக நபர்களும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர். அதன் போது...
நேசத்தமிழ் உறவுகளே! உங்களின் விடிவிற்காய் உதிரம் சிந்தி ஊருக்காய் உழைத்த நாம் இன்று உறவுகளை பிரிந்து உற்றவரை பிரிந்து பூட்டிய சிறைகளுக்குள் பட்டினி போராட்டம் நடத்துகிறோம். உங்கள் பிள்ளைகளாகிய எங்கள் அவல குரல் கேட்கிறதா சொல்லுங்கள். ஒரு மனித வாழ்க்கையின் சத்தான அரைவாசி காலத்தை சிறையில் தொலைத்து ஏக்கங்கள், தாக்கங்கள், நிராகரிப்புகள், நிராசைகள், அவமானங்கள், அருவப்புக்கள்...
யாழ். மறை மாவட்டத்தின் 8 ஆவது ஆயராக அருட்கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை பரிசுத்த பாப்பரசரால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பு நேற்று வத்திக்கானில் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து யாழ். ஆயர் இல்லத்தில் வைத்து இந்த அறிவிப்பை இளைப்பாறிச் செல்லும் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். தனது குருத்துவ வாழ்வில் 25...
நல்லாட்சி அரசு தங்களை பொதுமன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழ் அரசியல் கைதிகளின் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று இரண்டாவது நாளாகவும் சிறைச்சாலைகளில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் கொழும்பு - மகஸின் சிறைச்சாலையில் நான்கு கைதிகள் உடல்நிலை மோசமாகப் பாதிக்கப்பட்டு நேற்று மயக்கமடைந்தனர். இதனையடுத்து மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில்...
"சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தனிப்பட்ட ரீதியில் குற்றங்கள் எதுவும் செய்யவில்லை. பொதுவான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதனால்தான் அவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளை விடுவித்தது போன்று அப்பாவிகளான தமிழ் அரசியல் கைதிகளையும் உடன் விடுவிக்க ஜனாதிபதி, பிரதமர், நீதியமைச்சர் ஆகியோர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.'' - இவ்வாறு அவசர கோரிக்கை விடுத்துள்ளார் எதிர்க்கட்சித்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற விசாரணைக்குழுவொன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் விசேட வரப்பிரசாதங்கள் சட்டமூலத்தின்கீழ் இந்தக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எம்.பிக்களின் படுகொலைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களை நாடாளுமன்ற விசாரணைக்குழு முன்னிலையில் அழைத்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், பொலிஸாரின் விசாரணைகளை மேற்பார்வையிடவும்...
வடக்கில் கண்ணி வெடி அகற்றும் மனிதாபிமானப் பணிகளுக்காக சுமார் 108 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது குறித்த ஒப்பந்தம் நேற்று இலங்கையின் ஜப்பானுக்கான தூதரகத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஹலோ ட்ரஸ்ட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் கன்னி வெடி அகற்றும் பணிகளுக்காக 2003ம் ஆண்டு முதல் 27.7 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது, என்பது...
சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளதனால் SUZUKI, HONDA, NISSAN போன்ற மோட்டார் வாகனங்களில் விலைகள் பாரிய அளவில் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் Toyota போன்ற வாகனங்களுக்கான சுங்க வரிகள் அதிகரிக்கப்பட்டதையடுத்து வாகனங்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன. அதன்படி, Toyota Aqua மோட்டார் வாகனத்தின் சுங்க வரி ரூபா 770,000 இனால் அதிகரிக்கப்பட்டதுடன் Toyota Axio...
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆயுதக்குழுக்களை சார்ந்தவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முதலாம் குறுக்கு வீதியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், கற்றுக்கொண்ட...
Loading posts...
All posts loaded
No more posts
