Ad Widget

அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் புலனாய்வுப் பிரிவு

அரச புலனாய்வுப் பிரிவு எதிர்காலம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்து விபரமான அறிக்கை ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளது.

ஒரு அரசியல் அணியின் தலைமைத்துவம் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைப்பதற்காக பாரிய திட்டங்களை ஜனவரி மாதம் முதல் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினை அடிப்படையாக கொண்டு பல்வேபறு செயற்பாடுகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குறிப்பாக புத்திஜீவிகளை கொண்டு கிராம மட்டங்களின் கூட்டங்களை நடத்தவும் அந்த அணியினர் திட்டமிட்டுள்ளதாகவும் அரச புலனாய்வுப் பிரிவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டப்படி வேலை செய்தல் போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்து நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பை நடத்தி அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஸ்தம்பிக்க செய்வது தொடர்பாக குறித்த அரசியல் அணியினர் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த புதன் கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி அமைச்சர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.

Related Posts