யாழில் 13 சதவீதத்தினரிடம் கணினிகள் உள்ளன

யாழ்.மாவட்டத்தில் வசிப்பவர்களில் 13.1 சதவீதமானவர்களிடம் சொந்தமாக கணினிகள் உள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் தற்போது 1 இலட்சத்து 90,150 குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 17,722 பேர் வசித்து வருகின்றனர். இவர்களின் தனிநபர்களிடத்தில் 13.1 சதவீதத்தினரிடம் கணினிகள் உள்ளன. இதேவேளை, கம்பனிகள் உள்ளடங்களாக 13.8 சதவீத இணைய இணைப்புக்கள் உள்ளன. 9.1 சதவீதத்தினர்...

அதிர்ஷ்ட இலாபச்சீட்டில் கிடைக்கப்பெற்ற 20 இலட்சம் ரூபாயை, ஆலயத்துக்கு ஒப்படைத்த நபர்

கதிர்காமம் பஸ்நாயக்க நிலமே என்றழைக்கப்படும் கதிர்காமம் ஆலய பொறுப்பாளர் டி.பி.குமாரகே என்பவருக்கு அதிர்ஷ்ட இலாபச்சீட்டில் கிடைக்கப்பெற்ற சுமார் 20 இலட்சம் ரூபாயை, ஆலயத்துக்கே ஒப்படைத்துள்ளார். மேற்படி ஆலயத்துக்கு முன்பாக இருந்து வரும் அதிர்ஷ்ட இலாபச்சீட்டு விற்பனை நிலையத்தில் குறித்த ஆலயப் பொறுப்பாளர் 'மஹாஜன சம்பத' தேசிய லொத்தர் ஒன்றைப் பெற்றுள்ளார். கடந்த 16ஆம் திகதி குழுக்கப்பட்ட...
Ad Widget

தனிச்சிங்கள நாட்டை உருவாக்க முயற்சித்தால் அது தமிழீழம் உருவாகவே வழிசமைக்கும்!

ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றாமல் தனிச் சிங்கள நாட்டை உருவாக்க நினைத்தால் தமிழர் தேசத்தில் தமிழீழம் என்ற தனி இராஜ்ஜியம் உருவாக அது வழிசமைக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார். ஜெனீவாவில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு இன்று வியாழக்கிழமை உரையாற்றிய போதே...

சர்வதேச மத்தியஸ்தத்தை நேரடியாகக் கோரியுள்ளது பரணகம ஆணைக்குழு! – பரிந்துரைகள் பாரதூரமானவை என்கிறார் ராஜித

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தையும் தாண்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நியமித்த மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகள் பாரதூரமானதாக அமைந்துள்ளன என்று அமைச்சரவை பிரதிப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "பரணமக ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை...

வெள்ளைக் கொடி விவகாரம் பொய் ; தமிழ்செல்வனின் மனைவி சாட்சியம்

வெள்ளைக் கொடி விவகாரம் பொய் என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனின் மனைவி சசிரேகா சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமற்போனோர் தொடர்பிலான விசாரணைகைளை மேற்கொள்ளும் மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மேற்கோள்காட்டி திவயின இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இராணுவத்தினரிடம் சரணடைந்த எவரும் வெள்ளைக் கொடியுடன் வரவில்லை என...

200 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 200 ஓட்டங்களை பெற்றநிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது. நேற்று கொழும்பு பீ.சரவணமுத்து மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில் நாயணசுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்த அணி சார்பில் மிலிந்த ஶ்ரீ வர்த்தன 68...

யாழில் 60 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா: இருவர் கைது

60 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கொடிகாமம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கலால் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் வசமிருந்து 30 கிலோ கிராம் கேரள கஞ்சாவும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இந்தியாவின் - இராமேஸ்வரம் கடல் மார்க்கமாக இவற்றை நாட்டுக்குள் கொண்டுவந்து வல்வெட்டித்துறை...

வடக்கு, கிழக்குக்கு கூடுதலாக அதிகாரம் கிடைக்க இந்தியா விரும்பியது – யாழில் ப.சிதம்பரம்

இந்திய மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும்விட அதிக அளவு அதிகாரங்களை இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குவதற்கேற்ற வகையில்தான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் பிரேரிக்கப்பட்டதாக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த முன்னாள் இந்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தருமாகிய ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற் கொண்டு கொழும்புக்கு வருகை தந்திருந்த சிதம்பரம், நேற்று புதனன்று...

தம்புள்ளவில் மண்ணுக்குள் புதையுண்ட கிணறு

தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று மண்ணுக்குள் புதையுண்டுபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தம்புள்ளையை அண்மித்த நாவுல, பிபில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்மைக்காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாகவே தனது தோட்டத்தில் அமைந்திருந்த கிணறு மண்ணுக்குள் புதையுண்டு போயுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 40 அடி...

பரணகம ஆணைக்குழுவின் கலப்பு நீதிமன்றப் பரிந்துரையை வரவேற்கிறோம்! – சுமந்திரன்

போர்க்காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள், இறுதிப் போரின்போது நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள், மனித உரிமைகள் மீறல்கள் என்பன தொடர்பில் விசாரணை செய்ய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ள கலப்பு நீதிமன்ற விசாரணையை நாம் வரவேற்கிறோம். என்று தமிழ்த்...

யாழில் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டவர் சிக்கினார்

அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அனுமதிப் பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச் சென்றதாக, சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய லொறியை விடுவிக்கவே இவர் இவ்வாறு இலஞ்சம் கொடுக்க முற்பட்டுள்ளார். இதன்படி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு சந்தேகபர் 6000 ரூபா இலஞ்சமாக கொடுக்க...

யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 28ஆவது நினைவு தினம்

இந்திய அமைதிப்படையின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 28ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.போதனா வைத்தியசாலையில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் இன்று காலை 10 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்திய அமைதிப்படையினர் 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் உட்புகுந்து மேற்கொண்ட துப்பாக்கி...

சேவாக் பற்றி சில சுவாரசியங்கள்

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அதிரடி பேட்ஸ்மேன் சேவாக் அறிவித்துள்ள நிலையில் அவர் பற்றி அதிகம் அறிந்திராத சில தகவல்கள் இதோ: ஆவேசமாக ஆடினாலும், இயல்பில் சேவாக் மிகுந்த நகைச்சுவை உணர்வுமிக்கவர். பாகிஸ்தானின் முல்தான் நகரில் அந்த நாட்டு அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின்போது, பாக். பவுலர் ஷோயிப் அக்தர், சேவாக்கிற்கு பந்து...

தமிழினியின் இறுதிஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்!!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளீர் அரசியல் துறை பொறுப்பாளர் தமிழினி என்றழைக்கப்படும் அமரர் சிவசுப்ரமணியம் சிவகாமியின் இறுதிக்கிரியைகள் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இறுதிக் கிரியைகள் பரந்தன்-சிவநகரிலுள்ள அவரது இல்லத்தில் பிற்பகல் 2 மணிக்கு நடைபெற்று பரந்தன் சிவபுரம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்வதற்காக அன்னாரின் பூதடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இதில்...

பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது!! : முன்னாள் ரா அதிகாரியின் கூற்றால் பரபரப்பு!!

இலங்கை யுத்தம் முடிந்த நிலையில், பிரபாகரன் இறந்து விட்டதாக காட்டப்பட்ட உடல் உண்மையில் அவருடையது இல்லை என்றும், பிரபாகரன் உயியோடு இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்றும், இந்திய ரா முன்னாள் அதிகாரியும், கடற்படை அதிகாரியுமான கார்கில் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்த போது அவர் பிரபாகரனைப் பற்றி பரபரப்பான தகவல்களை அளித்தார். அதில்...

மற்றுமோர் முன்னாள் போராளி திடீர் மரணம்!! அதிர்ச்சியில் மக்கள்!!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் போராளி ஒருவர் திடீரெ மரணித்துள்ளமை குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இரண்டு பிள்ளைகளின் தயாரான 29 வயதான சசிதரன் தாரிகா என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மருத்துப் பிரிவு முன்னாள் போராளியாவார். இறுதி யுத்தத்தில் பலத்த காயமடைந்த நிலையில் வாழ்ந்து வந்த...

ஒஸ்லோவின் பிரதி மேயராக இலங்கை தமிழ் பெண் தெரிவு

நோர்வே தலைநகர் ஒஸ்லோவின் புதிய பிரதி மேயராக தொழில் கட்சியை சேர்ந்த கம்ஸாஜினி குணரட்னம் என்ற இலங்கைப் பெண் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். கடந்த எட்டு ஆண்டுகளாக கென்சவேட்டிவ் கட்சி வசமிருந்த ஒஸ்லோ நகரின் அதிகாரத்தை நோர்வோயின் தொழில் கட்சியும் அதன் கூட்டணியிலுள்ள பசுமை மற்றும் சோசலிச கட்சிகள் மீள கைப்பற்றியிருந்தன இலங்கையை பிறப்பிடமாக கொண்ட கம்ஸாஜினி குணரட்னம்,...

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் – ஆன்டிரியா

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் டான் ஆக ஒரு படத்தில் நடிக்கவேண்டும் , அவருக்கு ஜோடியாக நான் நடிக்க ஆசை என்று கூறியுள்ளார் நடிகை ஆன்டிரியா.ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகை குஷ்பு நடத்தி வரும் ‘சிம்ப்ளி குஷ்பு’ நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக மாபெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கமல், சிம்பு, ஜி.வி.பிரகாஷ், சிவகார்த்திக்கேயன் உள்ளிட்ட...

யாழில் போதை விழிப்புணர்வு பேரணி

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதை ஒழிப்பு மாதத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு பேரணி நேற்று (20) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் நேற்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வினை மாவட்ட செயலகத்தில் வைத்து மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில் நந்தனன் ஆரம்பித்து வைத்தார். புகையிலை மது மற்றும் ஏனைய போதைப் பொருள் பாவனைகளினால் ஏற்படும் விளைவுகளை...

யாழை தளமாக கொண்டு இயங்கிய தொலைக்காட்சி நிலையத்திற்கு சீல்

குறித்த நிறுவனம் சட்டவிரோதமான முறையில் தொலைகாட்சி, வானொலி நிலையம் என்பவற்றை இயக்கியதாகவும், அதனால் குறித்த நிறுவனம் கொழும்பில் இருந்து வந்த தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையக அதிகாரிகளால் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நிறுவனத்தில் இருந்து தொலைக்காட்சி மற்றும் வானொலி என்பவற்றின் ஒலிபரப்புக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பவை கைபற்றப்பட்டதுடன் அலுவலகத்தில் இருந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரும் கைது...
Loading posts...

All posts loaded

No more posts