- Friday
- May 15th, 2026
கொடிகாமம், பாலாவி வடக்கு பகுதியைச் சேர்ந்த குணரட்ணம் சஞ்சீவினி (வயது 15) என்ற சிறுமியை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) மதியம் முதல் காணவில்லையென சிறுமியின் உறவினர்களால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் சில மாதங்களுக்கு முன்னர் குடும்பச் சண்டை காரணமாக வீட்டைவிட்டு வெளியேறிச் சென்ற நிலையில் சிறுமியும் அவரது சகோதரரும்...
காங்கேசன்துறை இராணுவ காவலரணுக்கு முன் நிறுத்தி விட்டு, பணிக்காக உள்ளே சென்ற தமிழ் இராணுவ உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள், திருட்டு போயுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸார், நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்தனர். காங்கேசன்துறை ஹரிசன் படைமுகாமில் கடமையாற்றும் பண்டத்தரிப்பு பகுதியினைச் சேர்ந்த குறித்த இராணுவ சிப்பாய், வியாழக்கிழமை (29) காலை வழமை போல இராணுவ காவலரனின்...
வடமாகாணத்தில் உள்ள 102 வைத்தியசாலைகளில் 32 வைத்தியசாலைகள் நிரந்தர வைத்தியர்கள் இன்றி இயங்கி வருவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைக்கப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தின் புதிய கட்டடத்திறப்பு விழாவில்கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'வடக்கு மாகாணத்தில்...
யாழ்ப்பாண மாவட்டத்தில் வெவ்வேறு பகுதிகளில் முறைகேடாக இயங்கி வந்த எட்டு மதுபான நிலையங்களுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து வருகை தந்திருந்த மதுவரி திணைக்கள உயர் அதிகாரிகள் தலமையிலான குழுவினர், குறித்த மதுபான நிவையங்களுக்கு சீல் வைத்துச் சென்றதாக மதுவரி திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இயங்கிய 3 மதுபான நிலையங்கள், ஊர்காவற்துறையில் 2,...
தமிழ்நாட்டில் செய்யாறு அகதிகள் முகாமில் வாழ்ந்து வந்த இலங்கை அகதி ஒருவர் விஷம் உட்கொண்டு உயிரிழந்துள்ளார். வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாமையினால் விஷம் உட்கொண்ட பெண் ஒருவர் கிட்டத்தட்ட நான்கு நாட்களுக்கு பின்னர் உள்ளூர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். 41 வயதுடைய இராஜேஸ்வரி எனப்படும் பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இராஜேஸ்வரி தனது கணவரின்...
யாழ் எய்ட்டின் முன்னால் போராளிகளுக்கு உதவும் செயற் திட்டத்தின் கீழ் இடுப்புக்கு கீழ் செயலிழந்த நிலையில் வாழ்வியலை கொண்டு நடாத்துவதற்கு சிரமப்பட்ட திருகோணமலையைச் சேர்ந்த முன்னால் போராளிக்கு வவுனியாவில் வைத்து முன்னர் ஒரு தொகைப்பணம் வழங்கி வைக்கப்பட்டதுடன் நல்லின பசுமாடும் கன்றும் திருமலை மொரவெவவில் உள்ள அவரின் வீட்டில் வைத்து வழங்கப்பட்டது.அத்துடன் அங்கவீனமான முன்னால் போராளிகள்...
தேசிய இளைஞர் சேவை சபை, இலங்கை இளைஞர் சமூக சம்மேளனம் மற்றும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு என்பன இணைந்து ஏற்படுத்தப்பட்டுள்ள இளைஞர் பாராளுமன்றத்துக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணிவரையில் 334 பிரதேச செயலகங்களிலும் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கான...
ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட நிலத்தடி மாளிகை, கொழும்பு துறைமுகத்துடன் தொடர்பு கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்துடன் இந்த நிலத்தடி இல்லத்தை தொடர்புப்படுத்தும் பணிகள் அரைவாசி வரை முடிவுற்றுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றிய ஒருவரின் தகவல்படி குறித்த நிலத்தடி மாளிகைக்கு இரண்டு தடவைகள்...
தடுப்புக்காவலில் உள்ள தமிழ் கைதிகள் தொடர்பில் நியாயமான வகையில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புலிகளுடன் தொடர்பில்லாத தமிழ் கைதிகள் விடுவிக்கப்படுவர். அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வழக்குகளின் அடிப்படையில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என்று சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் யாரையும் தடுத்து வைக்கவில்லை. ஆனால்...
யாழ்ப்பாணத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக வயிற்றோட்டத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் பெய்து வரும் கடும் மழை காரணமாக நோய் தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநோய் தொற்றுக்களிலிருந்து மக்கள் தங்களை பாதுகாப்பதற்காக சுட்டாறிய நீரை பருகுமாறு யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நந்தகுமாரன் பொதுமக்களிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்....
"உண்மையான நல்லிணக்கத்தை அடைவதற்காக மக்களுக்கும் அவர்களது தலைவர்களுக்கும் உதவக்கூடிய பொருத்தமான நேரம் எனக்கு அமையும்போது இலங்கைக்கு வருவேன்." - இவ்வாறு உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை எஸ்.ஜே. இம்மானுவேல், இன்று திங்கட்கிழமை வெளிவந்துள்ள தமிழ்ப் பத்திரிகை ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். "இலங்கைக்கு வருகைதர முன்பாக என்னைப் பற்றியும் எமது செயற்பாடுகள் பற்றியும் முன்னைய மஹிந்த அரசினால்...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றியீட்டியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி மேற்கிந்திய தீவுகள் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வேளை, மழை இடையில் குறுக்கிட்டதால் இந்தப் போட்டி 26 ஓவர்களுக்கு...
கொழும்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வடக்கில் நேற்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ். உயர் தொழிநுட்ப நிறுவன மாணவர்களால், நேற்று காலை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் குறிப்பிட்டுள்ளதோடு, வகுப்பினையும் பகிஷ்கரித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை...
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை எனவும் கடந்தகால தவறுகளை சீர் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கார்த்திகை மாதம் மரம் நடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு இன்று மரம் நடும் செயற்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு...
புலி படத்திற்குப் பிறகு விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் மற்றும் சமந்தா நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘காக்கி’ என தலைப்பு வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது....
நடிகை ஐஸ்வர்யாராய், இந்தி நடிகர் அபிஷேக் பச்சனை மணந்து குடும்பம், குழந்தை என்று இருந்ததால் சினிமாவை விட்டு தற்காலிகமாக ஒதுங்கினார். 3 வருடங்களாக படங்களில் நடிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன், திடீரென மீண்டும் நடிக்க வந்தார். ‘ஜாஷ்பா’ என்ற இந்தி படத்தில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது, இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த...
'சிறைக்கைதிகளும் மனிதர்களே' என்ற தொனிப்பொருளின் கீழ் சிறைக்கைதிகளை உரிமைகள் மற்றும் சலுகைகளுடன் தடுத்து வைப்பதற்கு உகந்த சுற்றாடலுடனும் சகல வசதிகளுடனும் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண புதிய சிறைச்சாலை கட்டடத்தொகுதி சனிக்கிழமை (31) திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.பி பெரேரா தலைமையில், சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன, சிறைச்சாலைக்கான புதிய கட்டடத்தினை...
தற்போது சந்தையில் மலிவு விலையில் விற்கப்படும் திராட்சைப் பழங்களை வாங்கி உட்கொள்ள வேண்டாமென கிண்ணியா பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி இன்று ஞாயிற்றுக்கிழமை மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். கிண்ணியாவில் சனிக்கிழமை (31) வாராந்தச் சந்தையில் ஒரு கிலோகிராம் திராட்சைப்பழம் 100 ரூபாய் படி விற்கப்பட்ட திராட்சைப்பழத்தை வாங்கி உட்கொண்ட சில மணி நேரங்களில் வாந்தியும் தலைச்சுற்றும்...
"நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரியான நிலைப்பாட்டை எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கவேண்டும்." - இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோரும், உறவினர்களும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இதன் பிரதியை...
அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘வேதாளம்’. இதில் அஜித் இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் லட்சுமி மேனன், அஸ்வின், கபீர்சிங், ராகுல் தேவ், தம்பிராமையா ஆகியோர் நடித்துள்ளார்கள். சிறுத்தை சிவா இப்படத்தை இயக்கியிருக்கிறார். அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இதில் இடம் பெற்ற ‘ஆலுமா......
Loading posts...
All posts loaded
No more posts
