Ad Widget

விஜய்யுடன் படப்பிடிப்பில் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்

புலி படத்திற்குப் பிறகு விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் மற்றும் சமந்தா நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு ‘காக்கி’ என தலைப்பு வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்த அட்லி, தற்போது எமிஜாக்சன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியிருக்கிறார். இதற்காக விஜய் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் இன்று கலந்து கொண்டேன் என்று எமிஜாக்சன் கூறியிருக்கிறார்.

கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் விஜய் ‘செல்லாக்குட்டி’ என்ற பாடலை விஜய் பாடியிருக்கிறார். இதற்கான ரெக்கார்டிங் சமீபத்தில் நடந்தது.

Related Posts