வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவதில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் நீக்கம்!

வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது மற்றும் வெளிநாடுகளுக்கு பணத்தை அனுப்புவதில் இருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் NRFC, RFC உள்ளிட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகளிலுள்ள பணத்தை முன்கூட்டிய அனுமதி இல்லாமல் அனுப்ப முடியும் என இலங்கை மத்திய வங்கி நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

சுத்திரிப்புப் பணியை நாங்கள் செய்யமாட்டோம்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிவரும் சுகாதார உதவியாளர்களை சுத்திரிப்புப் பணியிலும் ஈடுபடுமாறு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் கூறியுள்ளளது. நோயாளர்களுடன் நெருங்கிப் பழகும் தாங்கள், சுத்திகரிப்புப் பணியையும் மேற்கொண்டு நோயாளர்களையும் கவனிக்க முடியாது என சுகாதார உதவியாளர்கள் கூறினர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுத்திரிப்புப் பணியில் ஈடுபடுபவர்கள் போதாமல் உள்ளமையால், சுகாதார உதவியாளர்களும் அவர்களுக்கு துணையாக...
Ad Widget

சுஷ்மாவுக்கு ரணில் அமோக வரவேற்பு!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்து முக்கிய பேச்சுகளில் ஈடுபட்டார். இரண்டு நாட்கள் பயணமாக இலங்கைக்கு நேற்று விஜயம் செய்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றது. இதன்போது இந்திய...

28 வருடங்களுக்கு பிறகு பிறந்த குழந்தையை வரவேற்கும் ஒஸ்டானா மக்கள்!

வடக்கு இத்தாலியில் உள்ள சிறிய நகரம் ஒன்று, அந் நகரத்தில் 1980 க்கு பிறகு பிறந்துள்ள முதல் குழந்தையின் வரவை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர் அந்நாட்டு மக்கள். பீட் மாண்ட் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஒஸ்டானா என்ற அந்த நகரின் மேயர், இந்த குழந்தையின் வரவு, தமது சிறு நகரின் ஒட்டுமொத்த சமூகத்தின் கனவு நனவானதை குறிப்பதாக...

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் வருகை இன்று!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் (Zeid Ra'ad Al Hussein) இன்று (06) இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என வௌிவிவகார அமைச்சு தகவல் வௌியிட்டுள்ளது. இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ள இவர் எதிர்வரும் 09 ஆம் திகதி வரையான சுமார் நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருக்கவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால...

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் யாழ் விஜயத்தின் போது ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் அல் ஹுஸைனின் யாழ். விஜயத்தின் போது காணாமல் போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். அகில் இலங்கை தமிழ் காங்கிரஸின் ஏற்பாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை (07) இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. யாழ். நல்லூர் ஆலய முன்றலில் காலை 9.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுப்பதற்கான...

பேஸ்புக்கில் நண்பராக பழகி 20 பெண்களை துஸ்பிரயோகம் செய்து போலி டாக்டர் கைது

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே உள்ள பகிடியாலாவைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.பட்டப்படிப்பை பாதியில் முடித்த இவர் ஒரு டாக்டரிடம் உதவியாளராக சில காலம் பணியாற்றினார். பின்னர் தானே ஒரு கிளினிக் தொடங்கி டாக்டராக செயல்பட தொடங்கினார். தன்னிடம் சிகிச்சைக்கு வரும் பெண்ணிடம் அன்பாக பேசி வசியப்படுத்தினார். பின்னர் தனது வலையில் வீழ்த்தி கற்பழித்து வந்தார். இதையடுத்து அவர்...

சிறுநீரக கடத்தல் சம்பந்தமான அறிக்கை அமைச்சர் ராஜிதவிடம் ஒப்படைக்கப்பட்டது

இலங்கை வைத்தியர்கள் சிலர் நாட்டிற்குள் மேற்கொண்ட சிறுநீரக கடத்தல் சம்பவம் குறித்து தேடிப்பார்ப்பதற்கு நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவினரின் அறிக்கை நேற்று (05) சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர் கடந்த 23ம் திகதி சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் தனியார் வைத்தியசாலைகள் உள்ளிட்ட இடங்களில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். முன்னதாக 03 தினங்களில் அந்த...

இந்தியாவில் கல்விகற்கும் இலங்கை மாணவர்கள் அச்சத்தில்!!!

பெங்களூர் ஹேசரகாடாவில் தான்சானிய நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமையை அடுத்து இலங்கை மாணவர்கள் மத்தியிலும் தாக்குதல் அச்சம் தோன்றியுள்ளது. இந்த செய்தியை த ஹிந்து நாளிதழ் பிரசுரித்துள்ளது. ஆபிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களும் ஏனைய வெளிநாட்டு மாணவர்களும் ஹேசரகாடாவில் தங்கி கல்வியை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் தன்சானியா நாட்டு மாணவர்கள் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டமையை...

இதுவா பச்சைப் பிள்ளை? அப்படியானால் 12 வயது பிரபாகரனின் மகன் ???

ஒரு குழந்தையைக் கைது செய்து அக்குழந்தையின் தந்தைக்கு சிக்கலைக் கொடுக்கும் பழிவாங்கும் அரசியல் என்று ராஜபக்சேவின் மகன் யோசித ராஜபக்சேவைக் கைது செய்ததை விமர்சித்துள்ளார் கோத்தபயா ராஜபக்சே. ஆனால் அவர் போட்ட இந்த டிவிட்டுக்கு பலரும் கடுமையாக பதில் டிவிட் போட்டு கோத்தபயாவை கலங்கடித்து வருகின்றனர். தமிழர்களும், சிங்களர்களும் பாரபட்சமே இல்லாமல் கோத்தபயாவை அவரது டிவிட்டுக்குப்...

விபத்தில் வலிகாமம் வடக்கு தவிசாளர் படுகாயம்

தாவடிப் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (05) காலை இடம்பெற்ற விபத்தில், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னால் சென்ற வான் ஒன்று திடீரென நிறுத்தப்பட்டபோது, இவரது மோட்டார் சைக்கிள் வானுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குடாக்கடலில் மீன்பிடிக்க 45 நாட்கள் தடை?

யாழ்ப்பாணத்தின் குடாக்கடல் பகுதியில் தொழில் செய்வதற்கு 45 நாட்கள் தடை விதித்து, மீனின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. மீன்களின் இனப்பெருக்கக் காலத்தில் கடலுக்கு 45 நாட்கள் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடாமல் இருக்கும் சட்டம் இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. தீவுப் பகுதியிலிருந்து பண்ணைப் பகுதி வரையிலும் அதிகளவான கலங்கட்டிகள் போடப்பட்டுள்ளன. இந்தக் கலங்கட்டிகளால் மீன்களின் இனப்பெருக்கமான...

லைகாவுடன் மருதநாயகம்! – கமல் ஹாசன்

லைகா நிறுவனத் தயாரிப்பில் இரு படங்களை உருவாக்கவிருப்பதாகவும், அவற்றில் தனது கனவுப் படமான மருதநாயகமும் உண்டு என்றும் கமல் ஹாஸன் கூறியுள்ளார். இந்திய சினிமாவில் மிக பிரமாண்டமாக கால் பரப்பியுள்ள லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்போது ரூ 350 கோடி பட்ஜெட்டில் ரஜினியின் 2.ஓ படத்தைத் தயாரிக்கிறது. இந்தியாவின் மிக அதிக பொருட்செலவில் தயாராகும் படம்...

பொருத்தமான நடிகர் கிடைத்தால் ரஜினி வாழ்க்கையைப் படமாக்கலாம் – மணிரத்னம்

ரஜினிகாந்த் வாழ்க்கையை படமாக எடுப்பது நல்ல யோசனைதான்... ஆனால் அதற்கேற்ற பொருத்தமான நடிகர் கிடைப்பது மிகக் கடினம்' என்று இயக்குநர் மணிரத்னம் கூறினார். 8-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற மணிரத்னம், பார்வையாளர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது 'எம்ஜிஆர், அம்பானி போன்ற பல முன்னணி நபர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி படங்கள் எடுத்துள்ளீர்கள். ஏன்...

சம்பந்தனுக்கு உதவிய பிரேமதாசவின் பாரியார்!

கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று நடைபெற்ற தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், ஆசனத்தில் இருந்து எழுந்திருக்க, முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் பாரியார் ஹேமா பிரேமதாச உதவியுள்ளார். 68வது தேசிய சுதந்திர தினத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நிகழ்வு நடைபெற்ற இடத்திற்கு வந்த போது, அதில்...

வி்த்தியா கொலை வழக்கு: சிக்கலில் ஊடகவியலாளர்

ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெறும் புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கில் செய்தி சேகரிக்கச் செல்லும் ஊடகவியலாளர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள பத்திரிகை ஒன்றின் செய்தியாளரே நாளை ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் முதல் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவானாக வை.எம்.எல்.ரியால் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த...

தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது பெரிய விடயமல்ல!- சம்பந்தன்

சுதந்திர தின விழாவில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை பெரிய விடயமல்ல என்று தெரிவித்துள்ளார் எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன். இது புதியதுமல்ல, அதேவேளை ஆச்சரியப்பட வேண்டியதொன்றுமல்ல. ஏனெனில் தேசிய கீதம் ஏற்கனவே சுதந்திர தினத்தில் தமிழில் பாடப்பட்டு வந்த ஒன்றே. இது பெரிதான விடயமல்ல. இதனை மீள நடைமுறைப்படுத்தியதில் அரசாங்கத்திற்கும் நன்மையாகும். அதே போன்று...

புகையிலைச் செய்கைக்கு விரைவில் தடை!

புகையிலை செய்கையை தடை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வடமத்திய மாகாணம், இபலோகமவில் அண்மையில் இடம்பெற்ற விவசாய அபிவிருத்தி திட்டமொன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் வர்த்தக விவசாய செய்கையாக புகையிலையை பயிரிடுவதைத் தவிர்த்து, உணவுப் பொருட்கள் பயிரிடப்படும் என அவர்...

சம்பந்தன் ஆனந்தக் கண்ணீர்!

தேசிய வைபவம் காலிமுகத்திடல் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த வைபவ நிறைவின்போது, தேசிய கீதம் தமிழ்மொழியிலும் இசைக்கப்பட்டது. வைபவத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனும் கலந்துகொண்டார். தேசிய கீதம், தமிழ்மொழியில் பாடப்பட்டபோது அவரின், கண்களிலிருந்து கண்ணீர் வந்ததாக, இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்த அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின நிகழ்வுகளின்...

வடக்கின் புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே!

வடக்கு மாகாணத்துக்குரிய புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் ரெஜினோல்ட் குரே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்படவுள்ளார். தனக்கு இவ்வாறானதொரு பதவி கிடைக்கவுள்ளது என அறியக் கிடைத்தது என்று ரெஜினோல்ட் குரேயே உறுதிப்படுத்தியுள்ளார். தற்போதைய வடக்கு மாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிகக்கார இந்த மாத இறுதியுடன் தனது பதவியிலிருந்து ஓய்வுபெறுகின்றார். ஆளுநர் பதவியில் இருந்து விலகிக்கொள்வது குறித்து அவர்...
Loading posts...

All posts loaded

No more posts