எரிபொருளின் விலை குறைப்பில் ஏன் கவனம் செலுத்தவில்லை?

உலகச் சந்தையில் எரிபொருளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டும் இதுவரையில் அதன் பயனை எமது நாட்டு மக்கள் அனுபவிப்பதற்கு வாய்ப்பு கிட்டாதுள்ளமை துரதிஸ்டவசமான நிலைமையாகுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கேள்வி எழுப்பியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது, 'எரிபொருளின் விலை உலகச் சந்தையில் வீழ்ச்சியுற்றுள்ளது....

இந்த நூற்றாண்டின் மிக முக்கிய கண்டுபிடிப்பு!! : புவி ஈர்ப்பு அலைகள்

புகழ்பெற்ற நோபல் பரிசு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் 100 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடித்து சொன்ன புவி ஈர்ப்பு அலைகளை தற்கால விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். கடந்த 1915ஆம் ஆண்டு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் தனது கோட்பாடு ஒன்றில் இது குறித்த கணிப்பை முன்வைத்தார். அதைத்தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வான்வெளியில் 'கருந்துளை' என்ற மர்மத்தை ஏற்கெனவே விஞ்ஞானிகள் கண்டுபிடித்து...
Ad Widget

ஸிகா வைரஸ் தாக்கத்துக்கு 3 பேர் பலி!! ஆசியாவிலும் வேகமாக பரவுகின்றது!!

டெங்கு மற்றும் சிக்கன் குனியாவுக்கு காரணமான கொசுக்களின் வாயிலாக கடந்த ஆண்டு பிரேசில் நாட்டில் தோன்றிய ஸிகா நோயானது ரியோ டி ஜெனிரோ உள்ளிட்ட சுமார் 30 அமெரிக்க நாடுகளிலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள சில நாடுகளிலும் படுவேகமாக பரவி வருகின்றது. தாயின் கருவில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சியை இந்த நோய் பாதிப்படையச் செய்கிறது....

தேசிய கொடியை ஏற்ற மறுக்கவில்லை – விஜயகலா

யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது சிறுவர் மற்றும் பெண்கள் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தேசிய கொடியை ஏற்றுவதற்கு மறுப்பு தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார். அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போதே விமல் வீரவன்ச இந்த விடயத்தை தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனிடம்...

யாழ் பல்கலை மாணவர்களிடையே மோதல்!

யாழ் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பிரிவைச் சேர்ந்த இரண்டு தரப்பினருக்கு இடையில் நேற்று ஏற்பட்ட மோதலில் மூவர் காயமடைந்தனர். மூன்றாம் ஆண்டு மாணவர்களின் செயற்பாடுகளை இரண்டாம் ஆண்டு மாணவர்கள் வாசிகசாலையில் ஒட்டியதாக கூறப்படும் சுவரொட்டிகளே இந்த மோதல்களுக்கான காரணம் என அறியமுடிகின்றது. எதுஎவ்வாறாயினும் சம்பவத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் யாழ்ப்பாண மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும்...

சிறிய விண்கல் பூமியைத் தாக்குமா? அச்சத்தில் விஞ்ஞானிகள்

பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் விண்கல் ஒன்று, மார்ச் மாதத்தில் பூமியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது பூமியை கடந்து செல்லுமா அல்லது தாக்குமா என்பதை கணிக்க முடியாமல், விஞ்ஞானிகள் அச்சத்தில் உள்ளனர். ஒரு கிலோ மீட்டர் அகலமுள்ள அந்த விண்கல், நிலாவை விட 21 மடங்கு பெரிய அளவில் பூமியை கடந்து செல்லும் என்று...

இந்தியா–இலங்கை மோதல் இன்று

ராஞ்சியில் இன்றிரவு நடக்கும் 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா–இலங்கை அணிகள் மோதுகின்றன. முந்தைய தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். இந்தியாவுக்கு வந்துள்ள தினேஷ் சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில்...

விக்ரமின் புதிய படம்..

விக்ரம் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘இருமுகன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கி முடிவடைந்துள்ளது. தற்போது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்கவுள்ளனர். இப்படத்திற்கு பிறகு விக்ரம், ‘சமர்’, ‘நான் சிகப்பு மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய...

கபாலி டீசர் இம்மாதம் 25ல்! படம் மே மாதத்தில்!!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கபாலி படத்தின் டீசர் வருகின்ற பிப்ரவரி 25 ல் வெளியாகும் என்று நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ், கலையரசன் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் கபாலி. பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினி தாதா வேடத்தில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு...

தொழில்வாய்ப்பு இன்மையால் போராளியொருவர் தற்கொலை

யாழ்ப்பாணம் நல்லூர் வடக்கைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தொழில் வாய்ப்பு இன்மை காரணமாக தற்கொலை செய்துள்ளார். யோதிலிங்கம் துசன் என்ற 34 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நல்லூர் வடக்கு விநாயகர் வீதியைச் சேர்ந்த குறித்த முன்னாள் போராளி குடும்ப பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு போதுமான தொழில் வாய்ப்பின்றி இருந்ததாக...

ரொமான்ஸ் பண்ணாதீர்கள்! யாழ்.பல்கலைக்கழகத்தில் சுவரொட்டி

யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரை மண்டபங்களில் மாணவ ஜோடிகள் அநாகரீகமாக நடந்து கொள்ளும் நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் மேற்படி விரிவுரை மண்டபங்களில் “ரொமான்ஸ் பண்ணாதீர்கள்” என்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மாணவ ஜோடிகள் விரிவுரை மண்டபத்திற்குள் ஜோடியாக இருத்தல் மற்றும் ஒருவரை ஒருவர் அணைத்தபடி இருத்தல் மற்றும் முத்தமிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக பல முறைப்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு...

70 அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலையில் 70 அத்தியாவசிய மருந்துப் பொருள் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த இரண்டு வாரங்களாக மருந்துப்பொருட்களுக்கு இவ்வாறு தட்டுப்பாடு நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. புற்று நோய், சிறுநீரக நோய், இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பல நோய்களுக்கான 70 வகை அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாக...

யோஷிதவுக்கு பிணை மறுக்கப்பட்டதும் கண்ணீர் விட்டு அழுதார் ஷிராந்தி ராஜபக்ஷ! – யுவதிகளும் கதறல்

யோஷித ராஜபக்ஷவின்வின் பிணைக் கோரிக்கை நிராகரிக்கும் தீர்ப்பை நீதிவான் தம்மிக ஹேமபால நேற்று அறிவித்த போது மன்றில் இருந்த ஷிரந்தி ராஜபக்ஷ கண்ணீர் விட்டு அழுதார். மஹிந்த ராஜபக்ஷவின் கண்களும் கலங்கியிருந்தன. கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழான குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் லெப்டினன் யோஷித ராஜபக் ஷ உள்ளிட்ட சந்தேக நபர்கள்...

தந்தையின் பதவி நிரந்தரமில்லை என்கிறார் மைத்திரியின் மகள் சதுரிக்கா!

தனது தந்தையின் பதவி நிரந்தரமில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள் சத்துரிக்கா சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் மகள் சத்துரிக்கா தொடர்பில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியாகி இருந்தன. தந்தைக்கு இணையாக அவரது மகள் சத்துரிக்கா, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், தனது தந்தையின் ஜனாதிபதி பதவி நிரந்தரமில்லை என்று...

ஹுசைனிடம் ஜனாதிபதி, பிரதமர் வழங்கிய உறுதிமொழிகள் எனக்கு தெரியும் – மகிந்த

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனிடம், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்களின் தூதுக்குழுக்கள் எவ்வாறான உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர் என்று எனக்குத் தெரியும் என்று, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர், நேற்று வியாழக்கிழமை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'நாட்டையும்...

27, 28, 29ஆம் திகதிகளில் யாழில் ஜனாதிபதி ஆணைக்குழு அமர்வு!

காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்தகட்ட அமர்வு யாழ்.குடாநாட்டில் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 27, 28, 29 ஆம் திகதிகளிலும், மார்ச் முதலாம் திகதியும் சாட்சி விசாரணைகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டப்ளியூ குணதாச தெரிவித்துள்ளார். கோப்பாய், வலிகாமம் வடக்கு, வலிகாமம் தெற்கு, சாவகச்சேரி, காரைநகர்...

இரு நாள் டெங்கு ஒழிப்புத் திட்டம்!

மேல் மாகாணம் உட்பட டெங்கு பாதிப்புள்ள 7 மாவட்டங்களில் இரு நாள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நேற்றுமுதல் (11) ஆரம்பமாகியுள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, கேகாலை, யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம், மட்டக்களப்பு, குருணாகல, அம்பாறை ஆகிய பிரதேசங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன. இவ்வாண்டு ஆரம்பம் தொடக்கம் இன்று வரை டெங்கு நோயாளர்களின்...

அரிசிக்கான இறக்குமதித் தீர்வை அதிகரிப்பு!

பெரும்போக நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான இறக்குமதி தீர்வை 35 ரூபாவிலிருந்து கிலோ ஒன்றுக்கு 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் விதத்தில் அரிசி இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது. 2015/2016...

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சிக்கு விஜயம்

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் அடங்கிய குழுவினர், நேற்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்தனர். அங்கு மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதார நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ள அவர்கள், அங்குள்ள மக்களுடனும் கலந்துரையாடியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் அங்கு மேற்கொள்ளப்படும் வீடமைப்பு, மற்றும் கண்ணிவெடி அகற்றும் பணிகளின் முன்னேற்ற நிலைமைகள் குறித்தும் அவர்கள் நேரில் சென்று கேட்டறிந்துள்ளனர்....

இலங்கைக்கு மேலும் ஒரு தங்கம்

12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் வினேத் சில்வா இலங்கைக்கு மற்றுமொரு தங்கப் பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளார். 200 மீற்றர் ஆண்களுக்கான ஓட்டப் போட்டியில் அவர் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading posts...

All posts loaded

No more posts