யுவராஜ்சிங் அதுக்கு சரிபட்டு வரமாட்டாரு – டோணி

இரண்டாவது டி20 போட்டியில், இலங்கையை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி. இப்போட்டியில், யுவராஜ் களம் இறங்க வேண்டிய நேரத்தில் கேப்டன் டோணி பேட் செய்ய சென்றது யூவி ரசிகர்களை கடுப்புக்குள்ளாக்கியுள்ளது. டோணி களமிறங்கியதுமே ரெய்னா விக்கெட் வீழ்ந்ததால் யூவி களமிறங்கினார். ஆனால் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கம் அவசரத்தில் எல்லைக்கோடு...

கும்கி -2 படத்தில் நடிக்க மறுத்த லட்சுமி மேனன்

தற்போது தனுஷ், கீர்த்தி சுரேஷ், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நடிக்கும் மிரட்டு படத்தை இயக்கி வருகிறார் பிரபுசாலமன். இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் அந்த பணிகள் முடிய சில மாதங்களாகுமாம். எனவே கோடை...
Ad Widget

சினிமாவுக்கு வருகிறார் திவ்யதர்ஷினி (டிடி)

சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி டிடி என்று செல்லமாக அழைக்கப்படுபவர் திவ்யதர்ஷினி. காப்பி வித் டிடி மூலம் புகழ்பெற்ற டிடி தொடர்ந்து விஜய் டிவியின் சிறந்த தொகுப்பாளினி விருதை பெற்று வருகிறார். திரையுலகைச் சேர்ந்த அனைவருமே டிடியின் நண்பர்கள்தான். இதுவரை சினிமாவில் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்து வந்த டிடி, இப்போது சினிமாவில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார். சமீபத்தில்...

பரிசோதனை வீடமைப்பு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்

வடக்கு- கிழக்கில் 65 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் செயற்திட்டத்தின் பரிசோதனை வீடமைப்புத் திட்டம் யாழ்.மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனம் ஒன்றின் ஊடாக இந்தப் பரிசோதனை வீடமைப்புத் திட்டம், மல்லாகத்திலும் வளலாயிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சினால் வடக்கு - கிழக்கில் 65 ஆயிரம் வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கப்படவுள்ளது. 2...

யாழ் பல்கலை மருத்துவ பீட மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ‘மாகாண ஆரோக்கிய விழா-2016’

வடமாகாண சுகாதார அமைச்சும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சமுதாய மற்றும் குடும்ப மருத்துவதுறையும் இணைந்து 35ஆம் அணி மருத்துவ மாணவர்கள் ஊடாகத் தொற்றா நோய்களிலிருந்து தவிர்த்துக் கொள்வதற்கான ஆரோக்கிய வாழ்க்கை முறைகள் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுக்கிறார்கள். ‘மாகாண ஆரோக்கிய விழா-2016’ எனப் பெயரிடப்பட்டு வடமாகாணத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தி இந்நிகழ்வுகள் கடந்த மாசி மாதம்...

இனங்களிடையே குழப்பத்தை தோற்றுவிக்க சிலர் முயற்சி ; யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையில் குழப்பத்தை தோற்றுவித்து அதிலிருந்து குளிர்காய்வதற்கு சில மூன்றாம் தரப்பு பிரிவினர் முயற்சித்து வலுவதாக யாழ்ப்பாணப் பல்கழலக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட சிறிய பிரச்சினையை இன முறுகல் என்று திரிபுபடுத்தி சில ஊடகங்களும் இந்த செயற்பாட்டில் ஈடுபட்டிருப்பது கவலையளிக்கிறது என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள...

ஆறுவார குழந்தையாக இருந்த போது தாயைப் பிரிந்த பெண் 28 வயதில் மீண்டும் இணைந்தார்!

ஆறு வார குழந்தையாக இருந்த போது பிரித்தானிய தம்பதிகளுக்கு தத்துக் கொடுக்கப்பட்ட பெண், 28 வயதில் மீண்டும் தாயாருடன் இணைந்து கொண்டார்.   இலங்கையை சேர்ந்த தாய் ஒருவர் வறுமை காரணமாக பிறந்து 6 வாரங்களே ஆன தனது பெண் குழந்தையை பல வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டு தம்பதியினருக்கு வளர்க்க கொடுத்துள்ளார். அன்று முதல் அந்த...

வடக்கின் ஆளுநராக சிங்களவர் வேண்டாம்! -சிவாஜிலிங்கம்

வடக்கின் ஆளுநராக முன்னாள் மேல்மாகாண முதலமைச்சர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் நிர்வாக திறன் அறிந்தவர் என்பது தெரியும் ஆனாலும் தமிழர்கள் ஆட்சி செய்யும் ஒரு மாகாணத்துக்கு தமிழரோ அல்லது முஸ்லிமோ தான் ஆளுநராக வரவேண்டும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அவ்வாறு தொடர்ந்து சிங்களவர் ஒருவர் எதிர்ப்பை மீறி நியமிக்கப்பட்டால் அதற்கு எதிராக...

முதலமைச்சர் அலுவலகம் மாற்றம்

வட மாகாண முதலமைச்சர் அலுவலகம் மற்றும் முதலமைச்சரின் கீழுள்ள அமைச்சுக்கள் என்பன கைதடியில் அமைக்கப்பட்ட புதிய கட்டடத் தொகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை சம்பிராதாயபூர்வமாக மாற்றப்பட்டது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடமாகாண அமைச்சர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், முதலமைச்சர் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். வட மாகாண முதலமைச்சர்...

வீதியில் மயங்கி கிடந்த பெண் வைத்தியசாலையில் உயிரிழப்பு

நெல்லியடி – கொடிகாமம் வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை மயங்கிக் கிடந்த பெண்ணொருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி வீதியில், கன்கொல்டலை என்னும் இடத்தில் மயங்கிக் கிடந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க குறித்த பெண்ணை அப்பகுதி மக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். இந்நிலையில், அப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்....

நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் சிறையில் இல்லை -எம்.ஏ.சுமந்திரன்

சிறைகளில் நீண்டகாலமாக நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று கூறுவது தவறானது. குறைந்தளவானவர்களே சிறைகளில் உள்ளனர். அவர்களிலும் குற்றம் இனங்காணப்படாதவர்கள் சொற்ப அளவிலேயே இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஒருங்கிணைந்த நல்லிணக்கத்துக்கான வழிமுறைகளுக்கான இணையத்தளம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (12) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது, அதில்...

முதலமைச்சர் சபையை முற்றாக புறக்கணித்துவிட்டார் – ஜி. ரி. லிங்கநாதன்

முதலமைச்சர் சபையை முற்றாக புறக்கணித்துவிட்டார் என்பதை அவரது நடவடிக்கைகள் உணர்த்துகின்றன என வட மாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் குற்றம் சாட்டினார். வவுனியா, கோவில்குளத்தில் உள்ள அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர். கடந்த மாகாணசபை அமர்வின்போது விவசாய...

“மக்கள் எங்கோ அங்கே மஹிந்த”! – அவரே சொல்கிறார்!

"தமது நலன்களைக் காப்பதற்கு தலைவன் வேண்டும் என்று முழுநாடுமே கேட்டு நிற்கின்றது. அந்தவகையில், மக்கள் எங்கேயோ அவர்களுக்கு தலைமைதாங்க நான் தயாராக இருக்கின்றேன்."- இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். தனது அரசியல் பயணத்தின் தீர்க்கமான அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுக்கும் வகையில் பத்தரமுல்லையில்...

இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் மங்கள முக்கியஸ்தர்களுடன் பேச்சு!

யாழ்ப்பாணத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை வருகை தந்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பிக்களாகத் தெரிவான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், மற்றும் அக்கட்சியின் முக்கிஸ்தர் சேவியர் குலநாயகம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். ஐ.நா....

விபத்தில் உயிரிழந்த 6 வயது சிறுவனுக்காக நீதிகேட்டு யாழ். நகரில் போராட்டம்!

மினிபஸ் சாரதியின் பொறுப்பற்ற செயலால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 6 வயதுச் சிறுவனின் மரணத்துக்கு நீதி கேட்டு யாழ். நகரில் நேற்று வெள்ளிக்கிழமை ஊர்வலமும் கையெழுத்துப் போராட்டமும் இடம்பெற்றன. இதன்போது போராட்டக்காரர்கள் போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த பஸ்களை மறித்தமையால் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனால் கலகமடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அத்துடன் போக்குவரத்துக்கு...

ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு யாழ் கட்டளைத்தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழு யாழ்குடா நாட்டுக்கான விஜயத்தின் போது யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டனர். இச்சந்திப்பின் போது இப்பிராந்தியத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் நல்லிணக்க அபிவிருத்தி செயற்பாடுகளின் நகர்வுகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக இராணுவ தகவல்கள் குறிப்பிடுகின்றன. மேலும் இந்நிகழ்வின்...

திஸர பெரேரா சாதனை; இந்திய அணி வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20க்கு இருபது போட்டியில் இந்திய அணி 69 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இந்திய...

உயிரிழப்பு ஏற்படுத்தும் சாரதிகள் மீது இனிமேல் கொலைக்குற்ற வழக்குகள்! – நீதிபதி இளஞ்செழியன்

விபத்தின் மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனச் சாரதிகளுக்கு எதிராக, இனிமேல் விபத்துச் சாவு என்று வழக்குத் தாக்கல் செய்யப்படாமல், கொலைக் குற்றம் என்றே வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டும். இவ்வாறு யோசனை முன்வைத்துள்ளார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன். அத்துடன், வீதிப் போக்குவரத்தின் போது, பஸ் நடத்துநர்கள் மிதி பலகையில் நின்று, வீதியில் செல்லும்...

வடக்கு தென்னை மற்றும் பனம்பொருள் உற்பத்தியாளர்கள் ஜனாதிபதி சந்திப்பு

கொழும்பு வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் வடக்கு, வடமேல் மாகாண பனை தென்னை வள கூட்டுறவு சங்கங்களின் சமாசங்களைச் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சிலர் நேற்று (11) மாலை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தனர். இக்கலந்துரையாடலில் பங்குபற்றிய பிரதிநிதிகள் தங்களுடைய வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது முகம்கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பாக ஜனாதிபதியினுடைய கவனத்திற்கு...

ஒருங்கிணைந்த நல்லிணக்கத்துக்கான இணையத்தளம் அங்குரார்ப்பணம்

ஒருங்கிணைந்த நல்லிணக்க வழிமுறைகளுக்கான இணையத்தளத்தை அதன் தலைவர் மனோரி முத்தடுக்காம, இன்று வெள்ளிக்கிழமை (12) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். யாழ். மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் வைத்து இந்த இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. உண்மை அறிதல், நீதி வழங்குதல், இழப்பீடு வழங்குதல், மீள இடம்பெறாது தடுத்தல் ஆகிய 4 நோக்கங்களின் அடிப்படையில் ஜெனீவாவுக்கு சமர்ப்பிப்பதற்காக, பொறுப்புக்...
Loading posts...

All posts loaded

No more posts