யாழ். பல்லைக்கழக மாணவர்களின் சுற்றுலா பஸ் விபத்து!- 13 பேர் படுகாயம்

பதுளைக்குச் சுற்றுலா சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பயணித்த பஸ் மாங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்குமிடையில் இன்று அதிகாலை 2 மணியளவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 7 பேர் கைது! குண்டுகளும் மீட்பு

யாழ்ப்­பா­ணத்தில் இடம்­பெ­று­கின்­ற­ வாள்­வெட்டுச் சம்­ப­வங்கள் தொடர்­பாக ஏழு சந்­தே­க­ ந­பர்­க­ளை ­கை­து­ செய்­துள்­ள­தா­கவும் அவர்­க­ளி­ட­மி­ருந்­து வாள் மற்றும் உள்ளூர் குண்­டுகள் சிலவும் மீட்­கப்­பட்­டுள்­ள­தா­க­ யாழ்ப்­பா­ண­ பொ­லிஸார் தெரி­வித்­தனர். அரி­யாலைப் பகு­தியில் வைத்து இவர்­களை கைது­ செய்­துள்­ள­தா­க­ பொ­லிஸார் தெரி­வித்­தனர். அண்மைக் கால­மா­க யாழ் குடா­நாட்டில் வாள்­வெட்டுச் சம்­ப­வங்­களும் ஆயு­த­மு­னையில் வீட்­டா­ரை ­அச்­சு­றுத்­தி ­பணம் நகை­ என்­ப­வற்­றை...
Ad Widget

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை குழப்பவே முன்னாள் போராளிகள் கைது!

எதிர்வரும் மே-18ம் திகதி அனுஷ்டிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை குழப்பவே முன்னாள் போராளிகள் கடத்தப்படுவதும் விசாரணைக்கு அழைப்பதும் இடம்பெறுவதாக, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். “படைத்தரப்பினராலும் பொலிஸாராலும் முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவதும் சட்டரீதியாக கைது செய்யப்படுவதற்கு அப்பால் கடத்தப்பட்டு பின்னர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்படுவதும் மிகப் பெரிய அச்சுறுத்தல். இம்மாதம்...

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் அழைப்பு!

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்டுள்ள முன்னாள் போராளிகள், நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்ந்து கைதுசெய்யப்பட்டு வருவதுடன், மீண்டும் அவர்கள் விசாரணைக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதன் முதற்கட்டமாக, யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகள் அனைவரையும் எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்புக்கு வருமாறு புனர்வாழ்வு அமைச்சு அறிவித்தல் விடுத்துள்ளது. இந்த அறிவித்தல் யாழ் மாவட்ட புனர்வாழ்வு...

தடையின்றி தனியார் காணியில் அமைக்கப்படும் விகாரை!

கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் விகாரை அமைக்கப்பட்டு வரும் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்த வேலைத்திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு காணியமைச்சினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அந்நடவடிக்கை இடைநிறுத் தப்படாமல் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. கொக்கிளாய்ப் பகுதியில் கடந்த 2012 ஆண்டிலிருந்து இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடன் இந்த விகாரை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்தக் காணியின்...

விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கலையரசன் கைது!

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கலையரசன் கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் பகுதியில் தனது வீட்டிலிருந்த சமயம் ராம் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருகோணமலையில் வைத்து கலையரசன் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் நெருக்கமானவர்கள் என்றும் திருகோணமலையில் பாதுகாப்புப் படைத்தரப்பினர் மீதும் காவல்துறையினர் மீதும்...

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனி அரசை அமைக்க முயற்சி!! உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல்!

சிறீலங்காவில் தனியரசொன்றை உருவாக்குவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை தமிழரசுக் கட்சியும் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டவாளர் அனுர லக்சிறியினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு மீதான விசாரணையை தொடருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனுவின் பிரதிவாதிகளாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா,...

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டம் அரசகுழுவிடம் கையளிப்பு!

அரசியல் விடயம் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையால் உருவாக்கப்பட்ட தீர்வுத் திட்டவரைபு, அரசியல் யாப்பு மறுசீரமைப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ் மக்கள் பேரவையின் இறுதித் திட்டவரைபு வெளியிடப்பட இருந்த நிலையில், அரசியல் யாப்பு மறுசீரமைப்புக் குழுவினரால் கடந்த திங்கட்கிழமையே இறுதித் திகதி (25) வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த திங்கட்கிழமையன்று தமிழ் மக்கள் பேரவையின் பிரதிநிதிகளால் பேரவையின்...

களனி பல்கலை மாணவர்கள் 80 பேர் வைத்தியசாலையில்!

களனி பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் சுகயீனம் காரணமாக, களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைத் தவிர்ந்த அனைத்துப் பீடங்களும் ஒரு வாரத்திற்கு மூடப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பிரதான வைத்திய அதிகாரிகள் மற்றும் களனி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் அறிவுரைப்படியே பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் அறிவித்துள்ளார். குறித்த பல்கலைக்கழக விடுதியில் ஒருவகை நோய்...

புலிகளின் சிறப்புத் தளபதி நகுலன் கைது!

விடுதலைப் புலிகள் அமைப்பின் சாள்ஸ் அன்ரனி படைப் பிரிவின் சிறப்பு தளபதியான நகுலன் என அழைக்கப்படும் கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி என்பவர் நேற்று காலை நீர்வேலி தெற்கு பகுதியில் உள்ள அவருடைய வீட்டிலிருந்து பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 2009ஆம் ஆண்டு போர் நிறைவடைந்த பின்னர் காணாமல் போயிருந்த சில தளபதிகளில் இவரும் ஒருவர் என...

தமிழருக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக 242 தடவைகள் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளன எனவும், அதற்கான ஆதாரங்கள் உள்ளன எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தாயகம் இல்லத்தில் நடைபெற்ற தந்தை செல்வா நினைவு தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்...

இராணுவத்துக்கும் ரூ.10,000 சம்பள அதிகரிப்பு! ஜனாதிபதி பரிந்துரை!!

கடந்த இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டது. இந்த பத்தாயிரம் ரூபா சம்பள உயர்வு முப்படையினருக்கும் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்துள்ளார். நேற்றைய தினம் அமைச்சரவையில் ஜனாதிபதி அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பித்து இந்த யோசனையை முன்வைத்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தினால் அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கிய...

மரணதண்டனையிலிருந்து தப்பினர் 83 கைதிகள்!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 83 கைதிகளுக்கு அதனை ஆயுள் தண்டனையாக மாற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார். நீதி அமைச்சால் நியமிக்கப்பட்ட விசேட குழுவால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளது என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார். இதன்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 450 இற்கும் அதிகமான கைதிகள் தொடர்பில்...

மே மாதம் முதல் புதியதொரு அரசியல் வேலைத்திட்டம்!

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதிக்குப் பின்னர் புதியதொரு அரசியல் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். அவ்வாறே நாட்டினதும் நாட்டு மக்களினதும் நன்மைக்காக புதிய அரசியல் தீர்மானங்கள் பலவற்றை மே முதலாம் திகதிக்குப் பின் மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். நாட்டு மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்து ஊழல் மோசடிகள் எதுவும்...

கௌஷால் சில்வாவின் உடல் நிலையில் முன்னேற்றம்!

பயிற்சிப் போட்டியொன்றின் போது உபாதைக்குள்ளான இலங்கை கிரிக்கட் அணி வீரர் கௌஷால் சில்வாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை முன்னிட்டு பல்லேகல சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் கடந்த 24ம் திகதி நடைபெற்ற பயிற்சி போட்டியொன்றின் போது தினேஷ் சந்திமால் துடுப்பெடுத்தாடிய சந்தர்ப்பத்தில் ஷோர்ட் லெக் திசையில்...

மே தின பேரணிக்கு அரச சொத்துக்களை பயன்படுத்த வேண்டாம்

மே தின பேரணிக்கு அரச சொத்துக்களை பயன்படுத்த வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். போக்குவரத்துக்களுக்காக அரச பஸ்களை பயன்படுத்துவதாயின் அதற்கான பணத்தை...

தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக கற்கைகளுக்கு மாணவர்கள் உட்சேர்ப்பு பற்றி SLIIT அறிவிப்பு

தேசத்தின் முதல் தர உயர் கற்கைகளை வழங்கும் கல்வியகமான, இலங்கை தகவல் தொழில்நுட்பக் கல்வியகம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் வியாபார முகாமைத்துவம் ஆகிய பிரிவுகளில் பட்டக்கீழ் படிப்புகளுக்கான ஜுன் 2016 ஆம் ஆண்டுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் BSc (Hons) பட்டம் என்பது தகவல் தொழில்நுட்பம், தகவல் கட்டமைப்புகள்...

யாழ்.மாவட்ட செயலக பாதுகாப்பு அதிகாரியின் அடாவடி!!

யாழ்.மாவட்ட செயலகத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் நிர்வாகமா அல்லது மாவட்ட செயலாளரின் நிர்வாகமா நடைபெற்று வருகின்றது என்பது கேள்விக் குறியாகவே இருக்கின்றது. யாழ். மாவட்ட செயலகத்திற்கு செல்பவர்களுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர் மரியாதையற்ற முறையில் நடந்துகொள்கின்றார். யாழ். மாவட்ட செயலகத்தில் வர்த்தக, வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீனின் கலந்துரையாடல் இடம்பெற்றது. அந்த கலந்துரையாடலுக்கு வருகை தந்த அமைச்சர் ரிசாட்...

இலங்கையில் சுவீடன் தூதரகம் அமைக்க கோரிக்கை

சுவீடன் தூதரகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டுமென சிவில் சமூகத்தினர் சுவீடன் வெளிவிவகார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுவீடன் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் யாழிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டார். அந்த விஜயத்தின் போது, யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். அந்த...

சிலர் சமஷ்டி என்றால் பிரிவினை என்பதால்தான் பிரச்சினை

ஒரு அமைச்சர் என்ற முறையில் உயர்ஸ்தானத்தை வகிக்கும் சுவிடன் வௌிவிவகார அமைச்சர் இங்கு வந்தது எமக்கு பெருமை என வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சுவிடன் வௌிவிவகார அமைச்சர் நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்தார். இங்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட வட மாகாண முதலமைச்சர், நீங்கள்...
Loading posts...

All posts loaded

No more posts