Ad Widget

இலங்கையில் சுவீடன் தூதரகம் அமைக்க கோரிக்கை

சுவீடன் தூதரகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டுமென சிவில் சமூகத்தினர் சுவீடன் வெளிவிவகார அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

sweedan-1

சுவீடன் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் யாழிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டார்.

அந்த விஜயத்தின் போது, யாழ். மாவட்ட செயலகத்தில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

அந்த சந்திப்பின் போது, முன்னைய காலத்தில் சுவீடன் தூதரகத்தினால் பல நன்மைகள் பெற்றுக்கொண்டதன் காரணத்தினால், இங்கு தூதரகம் அமைப்பது பல நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வழியமைக்கும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அத்துடன், யாழ். மாவட்டத்தில் நிலவும் தண்ணீர்ப் பிரச்சினைகள் மற்றும் போரின் பின்னர் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள், உட்பட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர்.

அனைத்து உறுப்பினர்களின் கருத்துக்களையும் செவிமடுத்த அமைச்சர், சிவில் சமூகத்தின் கருத்துக்களை தான் பெறுமதிமிக்கதாக ஏற்றுக்கொண்டு, தனது பலத்திற்கு ஏற்றவாறு முடிந்தவரை, உரிய அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

Related Posts