ஈ.பி.டி.பி கடந்த காலங்களில் பல தவறுகளை இழைத்துள்ளதாக பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார் தவராசா!!

ஈ.பி.டி.பி கடந்த காலங்களில் பல தவறுகளை இழைத்துள்ளதாக பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ள அந்தக் கட்சியின் முக்கியஸ்தரான வட மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் எஸ்.தவராசா, அந்தத் தவறுகளை திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்லத் தாம் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அரசியல் யாப்பு சார்ந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே...

தேசிய விளையாட்டு விழாவின் இறுதிநாளில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார்!

யாழ்ப்பாணத்தில் முதற்தடவையாக நடைபெற்ற 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதிநாள் இன்றாகும். இந்த இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர். யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் கடந்த 29ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பித்த தேசிய விளையாட்டு விழாவின் ஆரம்ப...
Ad Widget

வவுனியாவில் முன்னாள் போராளி கைது

வவுனியாவில் முன்னாள் போராளியொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். வவுனியா கொக்குவெளி படைவீரர் குடியிருப்புத் திட்டத்தில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டிலேயே சின்னவன் என அழைக்கப்படும் முன்னாள் போராளி கைதுசெய்யப்பட்டிருக்கின்றார். கடந்த 27 ஆம் திகதி வியாழக்கிழமை இரவு வவுனியா கொக்குவெளி படைவீரர் குடியிருப்புத் திட்டத்திற்குள் புகுந்த சின்னவன் என அழைக்கப்படும் முன்னாள் விடுதலைப்...

குடிப்பரம்பலை மாற்றியமைக்கும் சதித்திட்டங்களை கூட்டமைப்பு வேடிக்கை பார்க்கின்றது: சுரேஷ்

வடக்கின் குடிப்பரம்பலை முழுமையாக மாற்றியமைத்து தமிழர்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தும் நடவடிக்கைகள் ஸ்ரீலங்காவின் தற்போதைய அரசாங்கமும் தனது இராணுவ மற்றும் அரச இயந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்தி வருவதாக தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினரும், ஈபி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். அதேவேளை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தமிழருக்கு எதிரான இந்த திட்டமிட்ட சதித்திட்டங்களுக்கு எதிராக தமிழ் மக்களின்...

தமிழ் மக்களை எவரும் பிழையாக வழிநடாத்தக்கூடாது!

தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சனைகளையும் நெருக்கடிகளையும் சந்தித்து வரும் நிலையில், நிரந்தர அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் வகையில் செயற்படவேண்டும். இந்நிலையில் சிங்கள இனவாதிகளுக்கு தீனிபோடும் வகையில் செயற்படக்கூடாது எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமது உரிமைகளைப்...

பிரதேச சபையின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிர்ப்பு

அண்மையில் விடுவிக்கப்பட்ட வலி. வடக்கின் பலாலி தெற்கு வயாவிளான் பகுதியில் உள்ள புனித இந்து மயானத்தினை இல்லாது செய்து, மலச்சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கைக்கு, அப் பகுதி மக்கள், நேற்று சனிக்கிழமை (01) எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். நான்கு கிராமசேவையாளர் பிரிவுக்கு உரித்தான மேற்படி பூனையன் காடு இந்து மாயனத்தினை அழித்து வலி. வடக்கு...

நீர்வேலி வங்கிக் கொள்ளை போன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாதிருக்க வேண்டுமானால் எமக்கான சரியான அரசியல் தீர்வை முன்வையுங்கள்

நீர்வேலி வங்கிக் கொள்ளை போன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாதிருக்க வேண்டுமானால் எமக்கான சரியான அரசியல் தீர்வை முன்வையுங்கள்-மத்திய மின்சக்தி அமைச்சரிடம் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கோரிக்கை நீர்வேலி என்றதும் நீர்வேலியில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளையே தனது நினைவுக்கு வருவதாகவும், ஆனால் இப்போது அப்படியான கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுவதில்லை எனவும் மத்திய மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலா பிட்டிய...

கிளி. அரை நிரந்தர கடைத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டு விழா

கிளிநொச்சி பொதுச்சந்தையில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு புதிய கடைகளை அமைத்து கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (சனிக்கிழமை) முதலமைச்சர் சி.விவிக்னேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. பண்டிகைக் காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில், வர்த்தகர்கள் தங்களது வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லும் வகையில் தற்காலிகமான முறையில் அரை நிரந்தர கடை தொகுதியாக இது...

பௌத்த சிலை உடைப்பு வழக்கு விசாரணைகளிலிருந்து பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் விலகல்

பௌத்த சிலை உடைப்பு வழக்கு விசாரணைகளிலிருந்து பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் விலகிக் கொண்டுள்ளார். கனராயன்குளம் மாங்குளம் பிரதேசத்தில் பௌத்த சிலையொன்று உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உச்ச நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைகளிலிருந்து பிரதம நீதியரசர் விலகிக்கொண்டுள்ளார். பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், நீதியரசர்களான...

தமிழர் மௌனத்தை கலைத்ததால் தென்னிலங்கை குழம்பிவிட்டது: முதலமைச்சர் சி.வி.

தமிழ் மக்கள் வெளிப்படையாக பேச முற்பட்டுள்ளதை அடுத்தே தென்னிலங்கையிலுள்ள அரசியல்வாதிகளும் ஏனையோரும் குழப்பமடைந்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார். சிங்களத் தரப்பு தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் தமிழருக்கு விரோதமான நடவடிக்கைகளை கண்டும் தமிழ் மக்கள் மௌனிகளாக இருந்ததை அவர்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு விட்டதாக கருதிய சிங்களத்தரப்பு, தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக குரல்...

விடுதலைப்புலிகளின் தலைவரைப்போன்று விக்னேஸ்வரன் நீண்டதூரம் பயணிக்கமுடியாது!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைப் போன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் அதிக தூரம் பயணிக்கமுடியாது என பீல்ட் மார்ஷலும் தற்போதைய அமைச்சருமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். வடக்கில் எழுக தமிழ் பேரணியை நடாத்திய அவர், இணைந்த வடக்குக் கிழக்கில் சுயாட்சியை கோரியுள்ளார். இது தொடர்பாக பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு...

சகோதரர் உட்பட மூவர் மீது வாள்வெட்டு

யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் வெள்ளிக்கிழமை (30) இரவு சகோதரர் உட்பட மூவர் மீது கும்பலொன்று மேற்கொண்ட வாள்வெட்டில், மூவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். இராசாவின் தோட்டப் பகுதியைச் சேர்ந்த சகோதரர் இருவர் உட்பட மூவரும் படுகாயமடைந்துள்ளார். ஸ்ரான்லி வீதியில் உள்ள கடையொன்றின் முன்னால் நின்று உரையாடிக்கொண்டிருந்த சமயம்...

வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்டனி ஜெகநாதன் உயிரிழப்பு

வட மாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் மரியாம்பிள்ளை அன்ரனி ஜெகநாதன் மாரடைப்பால் இன்று திடீரென உயிரிழந்துள்ளார். 68 வயதான அன்ரனி ஜெகநாதன், மோட்டார் சைக்கிளில் பயணம்செய்துகொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சைகளை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண...

ரஜினிக்காக இயக்குனர் சிவாவின் திட்டத்தையே மாற்றிய அஜீத்?

'தல 57' படத்தின் ஷூட்டிங் ரஜினிக்காக சென்னைக்கு பதில் ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் இன்டர்போல் ஏஜெண்டாக நடித்து வரும் படம் 'தல 57'. முதல்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கும் என்று கூறப்பட்டது. சென்னையில் உள்ள தனியார் பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டது....

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து புதிய தகவல்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா நலமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா குணமடைந்து வருவதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதலே,...

பெண்ணாக நடித்ததில் பெருமை: சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ரெமோ படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். ஆர்.டி. ராஜா தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - பி.சி. ஸ்ரீராம், இசை - அனிருத். சிவகார்த்திகேயன் பெண் வேடமிட்டு நடிப்பதாலும் ஈர்க்கும்படியான டிரெய்லராலும் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தணிக்கையில் ரெமோ படத்துக்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. அக்டோபர் 7-ம் தேதி,...

விஜய், அட்லீ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை

விஜயா புரடக்ஷன்ஸ் பனரில் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பைரவா' படத்தின் வேலைகள் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னொரு பக்கம், விஜய் அடுத்து நடிக்கவிருக்கும் படம் குறித்த புதிய தகவல்களும் வருகின்றன. 'தெறி' படம் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து விஜய்யும், அட்லியும் மீண்டும் இணைகின்றனர். விஜய்யின் 61-ஆவது படமான இதை ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்...

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும்: ஜனாதிபதிக்கு மகஜர்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வவுனியா அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மகஜர் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு எதிராக வவுனியாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) அணிதிரண்ட பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த சிங்கள அமைப்புக்கள் ஒன்றிணைந்து குறித்த மகஜரை கையளித்துள்ளன. மேலும் குறித்த மகஜரில், ‘எழுக தமிழ்’ பேரணிக்கு தலைமை தாங்கிய...

புகையிரதம் மோதி ஆறு பிள்ளைகளின் தந்தை பலி

கிளிநொச்சி 155 ஆம் கட்டை ஆனந்தநகர் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆறு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் மகேந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழப்பாணம் நோக்கி சென்ற தபால் புகையிரதத்தில் சிக்குண்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் பிரேதபரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பிலான...

கீரிமலையை புனித பூமியாக்கி பௌத்தமயமாக்க திட்டமா? வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு

யாழ்ப்பாணம் கீரிமலை இந்துக்களின் புண்ணிய பூமியாக பார்க்கப்படுகையில் அதனை புனித பூமியாக்கி அங்கும் பௌத்தமயமாக்கலை மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வலி.வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற குழுவினர் தலைவர் ச.சஜீவன் குற்றம்சுமத்தியுள்ளார். இதற்கு இந்திய அரசாங்கம் உதவ முன்வந்திருப்பது கவலையளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் மற்றும் இந்திய துணைத்தூதுவர் ஆகியோர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை...
Loading posts...

All posts loaded

No more posts