பிரபாகரனின் உடலை நான் கனவிலும் காணவில்லை! : மஹிந்த ராஜபக்ஷ

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடலை தான் கனவிலும் காணவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். அத்தோடு, பிரபாகரனின் சடலத்தை பார்க்கும் மனோநிலையில் அப்போது தாம் இருக்கவில்லையென்றும் மஹிந்த கூறியுள்ளார். பத்தரமுல்லையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற தமிழ் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது, “இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பிரபாகரன் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதே, அவரது சடலத்தை நீங்கள் பார்த்தீர்களா?” என...

அன்டனி ஜெகநாதனுக்கு சம்பந்தன் அஞ்சலி

மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வடமாகாணசபை பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகநாதனுக்கு, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன்,இன்று திங்கட்கிழமை(03) காலை அஞ்சலி செலுத்தினார் இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவப்பிரகாசம் சிவமோகன், சிவசக்தி ஆனந்தன், திருமதி சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணம் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர்
Ad Widget

முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராக இன்று திங்கட்கிழமை, பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளதாக சிங்கலே தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. காலை 10 மணியளவில் பொலிஸ் தலைமையகத்தில் இந்த முறைப்பாட்டை வழங்கியதாக அதன் தலைவர் அஹுலுகல்லே சிறி ஜீனாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகளைத் தீர்க்க முன்வந்தால் தான் ஒருமித்து வாழ முடியும்!

மத்திய அரசாங்கம் சம உரிமை கொடுத்து, வட மாகாண சபையுடன் பேசி எமக்கு இருக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்வை தர முன்வந்தால் தான், எங்களால் நாட்டில் சம உரிமையுடன் ஒருமித்து வாழ முடியும், என, இலங்கைக்கான சுவீஸ் உயர்ஸ்தானிகர் சுமோட்டா சோமூகவிடம் (Simonetta Sommaruga) தெரிவித்துள்ளதாக, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், கூறியுள்ளார். அவ்வாறு இல்லை எனின்...

முதலமைச்சர் சி.வி இனவாதியல்ல!! அரசியல்வாதி: மஹிந்த கூறுகிறார்!

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல என்று கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரை தாம் ஒரு அரசியல்வாதியாவே பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்லையின் அமைந்துள்ள ஒன்றிணைந்த எதிரணியின் காரியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களுக்கான தீர்வு, வேலைவாய்ப்பு, வீதிகள் அபிவிருத்தியின்மை, விவசாயிகளுக்கான நிவாரணம் வழங்கப்படாமை...

தமிழ் பகுதிக்கு சிங்கள கிராம சேவகர்!

வவுனியா வடக்குப் பிரதேசத்தில் சிங்களவர்களே வசிக்காத தமிழ் கிராமத்துக்கு சிங்கள கிராமசேவகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அப்பிரதேசத்து மக்கள் தெரிவித்துள்ளனர். இதுபற்றித் தெரியவருவதாவது, வவுனியா வடக்குப் பிரதேசத்திலுள்ள மாமடு கிராமசேவகர் பிரிவில் பணிபுரிபவர் ஒரு சிங்கள கிராமசேவகர் எனவும் அவர் தற்போது அங்கிருந்து 10ஆம் திகதி மாற்றலாகி ஒலுமடு கிராமத்துக்கு வரவுள்ளார் எனவும் அப்பிரதேசத்து மக்கள் தெரிவிக்கின்றனர்....

போலி ஏ.டி.எம். அட்டைகள் மூலம் பாரிய மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் கைது

தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தின் (ATM) போலி அட்டைகளைப் பயன்படுத்தி பல நாடுகளில் பணத்தினை கொள்ளையிட்ட இலங்கையர் ஒருவரை தமிழகத்தின் காரைக்குடி பொலிசார் கைதுசெய்துள்ளனர். அவரிடமிருந்து 26 இலட்சம் இந்திய ரூபாய்கள், 25 பவுன் நகை, 48 தானியங்கி பணம் வழங்கும் இயந்திர அட்டைகள், போதை பொருட்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காரைக்குடி கழனிவாசலை சேர்ந்த...

ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது!!

ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தென்னிந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஸ்லீப்பர் செல்களாக ஊடுருவி உள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் கணிசமான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐஎஸ் அமைப்பினர், பல்வேறு உலக...

சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நடிப்பேன்! ஸ்ரீதிவ்யா

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்து பிர பலமானவர் ஸ்ரீதிவ்யா. அதையடுத்து காக்கி சட்டையிலும் நடித்தார். அதோடு, சிவகார்த்திகேயனுக்கு பொருத்தமான ஜோடி என்று ரசிகர்களால் கருதப்பட்டவர் ஸ்ரீதிவ்யா. என்றாலும், பின்னர் ஹன்சிகா, கீர்த்தி சுரேஷ் என்று நடிக்கத் தொடங்கி விட்ட சிவகார்த்திகேயன், அடுத்தபடியாக நயன்தாராவுடன் ஜோடி சேரப்போகிறார். ஆக, மீண்டும் ஸ்ரீதிவ்யாவுடன் சிவகார்த்திகேயன்...

ரிசல்ட்டுக்காக வெயிட் பண்ணும் வடிவேலு!

வடிவேலுவின் காமெடி மார்க்கெட் சிறப்பாக சென்று கொண்டிருந்தபோது, அரசியல் புயலில் சிக்கியதால் சிலகாலம் நடிப்புக்கு ஓய்வு கொடுத்தார். ஆனால் அதையடுத்து இனிமேல் நான் காமெடியன் அல்ல. முழுநேர ஹீரோ என்று கூறி தெனாலிராமன், எலி படங்களில் நடித்தார். ஆனால் அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் மீண்டும் கத்திச்சண்டை, சிவலிங்கா படங்களில் காமெடியனாக ரீ-என்ட்ரி...

ஆண் நடிகர்களே இல்லாமல் உருவான திரைக்கு வராத கதை

90-களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நதியா திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். தொடர்ந்து சில படங்கள் நதியா, சிறிது காலமாக வாய்ப்பில்லாமல் இருந்தார். தற்போது சிறிது இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கவந்துள்ளார். இவர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘திரைக்கு வராத...

யாழ். பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதி விஜயம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் குடிநீர் தேவையைக்கருதி பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இரண்டு நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஜனாதிபதியால் நேற்று (02) திறந்து வைக்கப்பட்டன. நேற்று மாலை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் தேசிய விளையாட்டு விழாவின் நிறைவு நிகழ்வில் பங்குபற்றுவதற்காக சென்ற ஜனாதிபதி, மேற்படி நிகழ்விலும் இணைந்துகொண்டார். பல்கலைக்கழக மாணவர்களின் கோரிக்கைக்கமைய இந்த நீர் சுத்திகரிப்பு...

பதிவு செய்யாத மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்ய இன்று முதல் அவகாசம்

பல்வேறு காரணங்களினால் இதுவரையில் பதிவு செய்யப்படாதுள்ள மோட்டார் சைக்கிள்களை பதிவு செய்வதற்கு 4 மாத கால அவகாசத்தை வழங்குவதற்கு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி அறிவித்துள்ளார். இந்த அவகாச காலம் இன்று (03) முதல் ஆரம்பமாகி எதிர்வரும் 2017 ஜனவரி வரையில் நடைமுறையில் இருக்கும் எனஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் காலத்துக்குள் 450 வேகம்...

புனர்வாழ்விற்கு பெயர் குறிப்பிடப்பட்ட இரு அரசியல் கைதிகளுக்கு நீதிமன்றத்தால் தண்டணை

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிப்பதாக விடுவிப்பதாக பெயர் குறிப்பிடப்பட்ட 23 பேரில் இருவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளதை அடுத்து அவ்விரு அரசியல் கைதிகளின் உறவுகள் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொர்பில் அமைச்சர் சுவாமி நாதனை இவ்வாரம் நடைபெறவுள்ள நாடாளுமனற அமர்வின்போது சந்தித்து பேசவுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். கடந்த மாத...

ஒரே நாட்டிற்குள் சமத்துவமாக வாழக்கூடிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 42 ஆவது தேசிய விளைாயட்டு விழா நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கின்ற பாரிய மாற்றத்தை, இந்த ஆட்சியை நடத்துகின்றவர்களின் சிந்தனையில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளதாக எதிர்கட்சி தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நேற்று யாழப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற 42 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு...

சைக்கிள் ஓட்டப் போட்டியில் யாழ். மாணவிகள் சாதனை

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சைக்கிள் ஓட்டப் போட்டியில் யாழ்ப்பாண மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான சைக்கிள் ஓட்டப்போட்டி கடந்த மாதம் 30 ஆம் திகதி அனுராதபுரத்தில் இடம்பெற்றது. 24 கிலோமீற்றர் கொண்ட இந்த போட்டியில் யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலைகளில் கல்வி கற்கும் சகோதரிகளான மாணவிகள் வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்களை...

நியூசிலாந்தில் சம்பந்தனை புகழ்து பேசிய பிரதமர் ரணில்!

நியூசிலாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் அன்ட்‌ரூ லிட்டிலுக்கு (Andrew Little) தைரியமூட்டிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, புகழ்ந்து பேசினார். நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, நியூசிலாந்துக்கு சென்றுள்ள பிரதமர் தலைமையிலான குழுவினர், ஒக்லண்டில் வசிக்கும் இலங்கைப் பிரஜைகளை, மெட் அல்பிரட் யுத்த ஞாபகார்த்த மண்டபத்தில்...

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிப்பதற்காக இரண்டு நீர் சுத்திகரிப்பு கருவிகள் Reverse osmosis plant பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கருவிகளை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணவர்த்தன தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது. இதற்கு 14 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாளாந்தம் ஆயிரம்...

சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு

பொது மொழியான விளையாட்டுத் துறையை முன்னேற்றி நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற 42வது தேசிய விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி உரையாற்றிளார். விளையாட்டு மைதானம் என்பது இன, மத, குல, பிரதேச பேதங்களின்றி...

தெற்கில் சிலர் எம்மை வைத்து அரசியல் வியாபாரம் நடத்த முயற்சி!

தெற்கில் சிலர், எம்மை வைத்து அரசியல் வியாபாரம் நடத்த முற்பட்டிருக்கின்றார்கள் என, வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 42வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றக்கிழமை நடைபெற்றது. அந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். என்னைப் பேயாகவும், பூதமாகவும், தகாத...
Loading posts...

All posts loaded

No more posts