- Saturday
- November 7th, 2026
எந்த சூழ்நிலையிலும் மின்கட்டணம் உயர்த்தப்பட்ட மாட்டாது என மின்சக்கி, எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. மின்கட்டணத்தை உயர்த்த அனுமதி பெற்றுத்தருமாறு இலங்கை மின்சாரசபை, பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள நிலையில் அந்த அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. 100க்கு 5 வீதமாக மின் கட்டணத்தை உயர்த்துமாறு இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் ஒக்டோபர் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் விதத்தில் 6...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் காரைநகருக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (04) அதிகாலை 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து காரைநகர் கடற்பரப்பில் படகொன்றில் வந்து மீன்பிடித்துக் கொண்டிந்த மீனவர்களே கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடற்படையினரிடமிருந்து மீனவர்களைப்...
மிஹின் லங்கா நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் இம் மாதம் 30ம் திகதியுடன் நிறுத்த தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, மிஹின் லங்காவினால் முன்னெடுக்கப்படும் அனைத்து விமானப் பயணங்களையும், ஶ்ரீ லங்கன் விமான நிலையம் மேற்கொள்ளும் என, மிஹின் லங்கா நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போது மிஹின் லங்கா நிறுவனத்திடம் உள்ள இரண்டு விமானங்களும் ஶ்ரீ லங்கா...
சிகரெட்டுக்கான விலை ஏழு ரூபாவால் அதிகரித்துள்ளதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதி அமைச்சில் தற்போது இடம்பெறும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ரவி கருணாநாயக்க இந்த விடயத்தை கூறியுள்ளார். இதேவேளை, பெறுமதி சேர் வரித் திருத்தம் தொடர்பான சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர்...
சிவாஜி, எந்திரன் படங்களை அடுத்து ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் பிரமாண்ட படம் 2.ஓ. ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தில் அக்சய்குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடிக்கின்றனர். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நிலையில், டிசம்பர் மாதத்தோடு படப்பிடிப்பு முடிந்து விடுமாம். அதையடுத்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று...
காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் அரசியல் கட்சிகளும் கன்னட அமைப்புகளும் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துவருகிறார்கள். இந்நிலையில், இதொல்லே ராமாயணா கன்னடப் பட நிகழ்ச்சிக்காக நடிகர் பிரகாஷ் ராஜைப் பேட்டி கண்ட கன்னட டிவியின் தொகுப்பாளர், காவிரி விவாகரம் குறித்து கேள்வி கேட்டார். இந்தக் கேள்வியால்...
நிகழாண்டில் மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு ஜப்பானைச் சேர்ந்த உயிரணுவியல் விஞ்ஞானி யோஷினோரி ஓசுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பழுதடைந்த உயிரணுக்கள் தம்மைத் தாமே அழித்து சுத்தம் செய்துகொள்ளும், "ஆட்டோஃபஜி' என்றழைக்கப்படும் "சுய துப்பரவு' செயல்நுட்பம் குறித்த ஆய்வுகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக நோபல் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்தக் குழு திங்கள்கிழமை கூறியதாவது: உயிரிணுக்களின் சுய...
முதல் டெஸ்ட் போட்டியை போலவே 2வது டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தியது இந்திய அணி. இதன் மூலம் தொடரை வென்று, தர வரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்துவரும் நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் ஆடிவருகிறது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில்...
வீட்டுப் பாவனை உட்பட சகல நுகர்வோர் பிரிவுகளுக்கும் 5 வீத கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்கான அனுமதியை வழங்குமாறு இலங்கை மின்சார சபை, இலங்கை பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அடுத்த 06 மாத கால திட்டத்தின் படி இலங்கை மின்சார சபையின் மாதாந்த செலவு 850 மில்லியனினால் அதிகரித்துள்ளதாகவும், இதன்படி, எதிர்வரும் 06...
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பட்டம் பெற்ற 3225 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு இன்று ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது. இவர்களில் 1466 பேர் தேசிய பாடசாலைகளுக்கு நியமனம் செய்யப்படவுள்ளனர். அத்துடன், சிங்கள மற்றும் ஆங்கில மொழியில் பட்டம் பெற்ற டிப்ளோமா பட்டதாரிகள் 2211 பேர் இவர்களில் உள்ளனர். இதில் 1014 பேர் தமிழ் மூலமான பட்டதாரிகள். இன்று ஆசிரியர்களாக...
யாழ்.பொலிஸ் நிலைய தலமை பொலிஸ் பரிசோதகர் மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகிய இருவருக்கு தண்டனை பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். குறித்த பொலிஸ் அதிகாரிகள் இருவரும் கதிர்காமத்திலுள்ள பொலிஸ் ஓய்வு விடுதியில் முறைகேடாக நடந்து கொண்டமையை அடுத்தே தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,...
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வருவதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் அப்பல்லோ மருத்துவமனையினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம், 22 ஆம் திகதி முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் நுரையீரல் பாதிப்புக் காரணமாக அவருக்கு சுவாசிப்பதில் சிரமங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதேவேளை முதலவர் ஜெயாவுக்கு சிறப்பு...
விடுதலைப் புலிகளில் இருந்து கருணாவை பிரித்து போல தமிழ் தேசிய கூட்டமைப்பையும் சிதைக்க தென்னிலங்கை சக்திகள் முயற்சி செய்து வருவதாக நாடாளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...
கவர்ச்சியால் மேற்குலக நாடுகளில் அதீத பிரபல்யம் அடைந்துள்ள அமெரிக்காவின் கவர்ச்சி கன்னியான கிம் காடஸ்சியன் வெஸ்ட்டிடம் இருந்து மில்லியன் கணக்கான நகை கொள்ளையிடப்பட்டுள்ளது. பாரிஸ்சிலுள்ள சொகுசு வீட்டில் வைத்து பொலிஸ் சீருடை அணிந்த இருவர் அவரிடம் இருந்த 6 மில்லியன் யூரோ பெறுமதியான நகை பெட்டி கொள்ளையிடப்பட்டுள்ளதாக பாரிஸ் பொலிஸார் கூறியுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில்...
தம்மை கொலை செய்வதற்கு சதி செய்யப்படுவதாக வட மாகாண முதலமைச்சரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளமை பாரதூரமான விடயம் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ஜனாதிபதிக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் முறையிட்டு அது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு...
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வடக்கு மாகாண சபையில் ஆளுநர் நிதியத்திற்கு அனுமதி வழங்கிய நல்லாட்சி அரசாங்கம் இதுவரை முதலமைச்சர் நிதியத்திற்கு அனுமதி வழங்க பின்னடித்து வருகின்றது. இருப்பினும் முதலமைச்சர் நிதியத்துக்கான அனுமதியை விரைவில் அரசாங்கம்...
ரவிராஜ் அன்றைய ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டார். லசந்த விக்ரமதுங்க நடுத்தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டார். வெகு விரைவில் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவோம்.என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலய 125 வருட ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் சஞ்சிகை வெளியீட்டு விழா வித்தியாலய மைதானத்தில் நேற்று நடைபெற்ற போதே மேற்கண்டவாறு...
கிளிநொச்சி – இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளம் பொறியியலாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் 03.10.2016 திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்றதாக கிளிநொச்சி காவல் துறையினர் தெரிவித்தனர். அவசரஅவசரமாக இராப்பகலாக புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் இப்பணியில் ஈடுபட்டிருந்த 25 வயதுடைய கனகராசா கோபிநாத் என்ற பொறியியலாளர்...
பூனைக்குட்டியாக இருந்த வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை புலிக்குட்டியாகமாற்றியது நல்லாட்சி என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நேற்று(3) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் புலி உறுப்பினர்கள் வடக்கில் உள்ள இராணுவத்தினருக்கும், பௌத்தவிகாரைகளுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் போது தற்போதைய அரசாங்கம் வாய்மூடிமௌனியாகப் பார்த்துக் கொண்டிருந்தமையினாலேயே விக்னேஸ்வரன் அவ்வாறுநடந்து கொண்டதாகவும்...
அரசியல் தலைமைகளுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்படக் கூடாது என்ற கட்டாயம் உள்ளது. எனினும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாயின் அவருக்கான சிவில் பாதுகாப்பில் திருப்தி இல்லையெனின் இராணுவ பாதுகாப்பை வழங்க தயார் என பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. அரசியல் நகர்வுகளுக்காக பாதுகாப்பு விடயங்களை பகடைக்காய்களாக பயன்படுத்தக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளது. வடமாகாண முதல்வர்...
Loading posts...
All posts loaded
No more posts
