Ad Widget

ரவிராஜ் அன்றைய ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டார்- மனோ கணேசன்

ரவிராஜ் அன்றைய ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டார். லசந்த விக்ரமதுங்க நடுத்தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டார். வெகு விரைவில் குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவோம்.என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட முறாவோடை சக்தி வித்தியாலய 125 வருட ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் சஞ்சிகை வெளியீட்டு விழா வித்தியாலய மைதானத்தில் நேற்று நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,இளைஞர்களே எழுந்து வாருங்கள், தலைமை தாங்குங்கள், தாய் பூமியை, தாய் நாட்டை, தாய் மொழியை, தாய் இனத்தை காப்பாற்றுவோமானால் அத்தகைய இளைஞர்களுக்கு நாம் உரிய இடத்தை வழங்க வேண்டும். இடத்தை பெற்றுக் கொள்ள ஊக்குவிப்பை வழங்க வேண்டும்.

தமிழர்கள் ஆட்சி அமைக்கும் காலம் வரும் போது கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் அமைச்சராக வரும் காலம் வரும். இருபது வருடங்களாக நான் தெருவில் இருந்து போராடியுள்ளேன்.

2005ஆம் ஆண்டுகளில் கொழும்பு தலைநகர் தெருவில் ரவிராஜ், லசந்த விக்ரமதுங்க, விக்ரம கருணாரட்ண, ஜயசூரிய, பிரயாண குணரெட்ண ஆகியோர் காணாமல் போதல், கடத்தல் சம்பவத்திற்கு எதிராக கலமிரங்கினோம்.

என்னை கொலை செய்ய மூன்று தடவை முயற்சித்தார்கள். அவர்கள் கில்லாடி என்றால் நான் பலே கில்லாடி. அதனால் என்னை கொலை செய்ய முடியவில்லை என்றார்.

Related Posts