விபத்தில் சிக்கிய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன்!!

இந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏ.ஆர்.ரகுமான். இவரது மகன் ஏ.ஆர்.அமீனும் இசைத்துறையில் களமிறங்கி தனது அப்பாவுடன் பயணித்து வருகிறார். இன்று (ஆகஸ்ட் 10) அதிகாலை 3.30 மணியளவில் தனது விலை உயர்ந்த காரில் நண்பரோடு கிண்டி நோக்கி சென்றிருக்கிறார். அப்போது ஒலிம்பியா டெக் பார்க் சிக்னல் அருவே ரேபிடோ வேகன்-ஆர் வாகனம்...

LPL கிண்ணத்தை கைப்பற்றியது கோல் கெலன்ட்ஸ் அணி!

2026 லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டியில் கோல் கெலன்ட்ஸ் அணி வெற்றிப்பெற்று கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. ஜப்னா கிங்ஸ் அணியை 05 விக்கெட்டுகளால் வீழ்த்தி இந்த வெற்றியை அந்த அணி பதிவு செய்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து...
Ad Widget

வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் மற்றொரு கட்டம் ஆரம்பம்!

தெங்கு பயிர்ச்செய்கை சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் கற்பகத்தரு வளத்தின் கீழ் வடக்கு தெங்கு முக்கோணம் திட்டத்தின் மற்றொரு கட்டம் முல்லைத்தீவு, முள்ளியவளைப் பகுதியில் நடைபெற்றது. 2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் தெங்கு ஏற்றுமதி வருமானத்தை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், வருடாந்த தெங்கு உற்பத்தியை 4,200 மில்லியன் காய்களாகவும் உயர்த்தும் தேசிய இலக்கை அடையும் நோக்கில் இது நடத்தப்படுகிறது....

அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள் விற்பனை செய்த நிலையங்களுக்கு அபராதம்!

அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர் விலையை விட அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்த மற்றும் விலைக் காட்சிப்படுத்தாத ஹெட்டிபொல பகுதியிலுள்ள 03 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த நிறுவனங்களுக்கு நீதிமன்றத்தால் தலா 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக...

2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!!

2026 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்றிலிருந்து (10) ஆரம்பமாகி செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்காக 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும் 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்கலாக மொத்தம் 372,310 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னர்...

கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில்!!

பயணக் கொடுப்பனவை உயர்த்தாமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் (10) நாளையும் (11) நோய் விடுப்புப் பதிவு செய்து சேவையில் ஈடுபடாதிருக்க தீர்மானித்துள்ளனர். கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்தார். கிராம...

அமெரிக்காவுக்கு ஈரான் விதித்துள்ள நிபந்தனைகள்!

ஹோர்முஸ் நீரிணை ஊடாக புதிய கடற்போக்குவரத்து பாதைகளை தீர்மானிப்பதற்காக ஓமானுடன் இறுதி உடன்படிக்கைக்கு வரத் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது. எனினும், இந்த கடல் பாதையை மீண்டும் திறக்க வேண்டுமானால், இழப்பீடு வழங்குதல், தடைகளை நீக்குதல் மற்றும் இராஜதந்திர அச்சுறுத்தல்களை நிறுத்துதல் உள்ளிட்ட நிபந்தனைகளை அமெரிக்கா நிறைவேற்ற வேண்டும் என ஈரான் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. கடந்த...

நோயாளிகளின் உயிரோடு விளையாடும் தனியார் வைத்தியசாலைகள்!!

காலாவதியான இரசாயனப் பொருட்கள், தடுப்பூசி ஊசிகள் பயன்பாடு மற்றும் அதிகக் கட்டணம் வசூலித்தமை தொடர்பில் கேகாலையில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு 520,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் விதிகள் மற்றும் கட்டளைகளைக் கடுமையாக மீறிய குற்றத்திற்காகவே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகார சபையின் (CAA) கேகாலை மாவட்ட...

அடுத்த 24 மணி நேரத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நிலவும் இயங்குநிலை வானிலை நிலைமை காரணமாக பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு ஏற்படுவது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்றிலிருந்து (10) மு.ப 07.00 மணி முதல் நாளை (11) மு.ப 07.00 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்குச் செல்லுபடியாகும்....

இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்!!

இலங்கைக்கான ஒருநாள் விஜயம் மேற்கொண்டு வெளிவிவகார செயலர் ஶ்ரீ விக்ரம் மிஸ்ரி கொழும்பை வந்தடைந்தார். இந்த விஜயத்தின்போது அவர், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை - இந்திய இடையிலான வழமையான உயர் மட்ட பரிமாற்றங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த விஜயமானது நெருக்கமான இருதரப்பு உறவுகளை மீள வலுப்படுத்தும் அதேவேளை...

Jaffna Kings அணியை கைப்பற்றிய சஹீர் கான்!!

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் மிக வெற்றிகரமான அணியான ஜஃப்னா கிங்ஸ் (Jaffna Kings) புதிய உரிமையாளர்களின் கைக்கு மாறியுள்ளது. முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் சஹீர் கான் (Zaheer Khan) மற்றும் தொழிலதிபர் நாகேந்திர சித்தௌதம் ஆகியோரை இணை உரிமையாளர்களாகக் கொண்ட ஸ்டாக்ஹோமைத் தளமாகக் கொண்ட Anchor Sports AB நிறுவனம் இந்த...

அகில விராஜ் காரியவசம் கைது!!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று (05) முற்பகல் ஆஜரான நிலையில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவர்களிடம் தலைமைத்துவப் பண்பையும் ஆளுமையையும் வளர்த்தெடுக்க வேண்டும்!!

சமூகத்துக்குச் சேவையாற்றக் கூடியவாறு மாணவர்களை உருவாக்குவதில்தான் ஒரு கல்லூரியின் வெற்றி தங்கியிருக்கின்றது. கல்லூரிகள் மாணவர்களிடம் தலைமைத்துவப் பண்பையும் ஆளுமையையும் வளர்த்தெடுக்க வேண்டும்' என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் 'அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை' திட்டத்தின் கீழ் 51.88 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப அலகு...

நல்லூர் கோவில் வீதிக்கு பூட்டு!!

யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வாசல் வளைவானது நாளைய தினம் வியாழக்கிழமை காண்பிய விரிப்பு காணவிருப்பதன் காரணமாகவும், அதற்குரிய பணிகளை முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையிலும் இன்றைய தினம் புதன்கிழமை காலை 8 மணி முதல் நாளை வியாழக்கிழமை நண்பகல் 12 மணி வரை குறித்த பகுதியின் ஊடான போக்குவரத்து தடை...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2026-ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இன்று (05) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை நிறைவடையும் வரை இந்தத் தடை உத்தரவு அமுலில் இருக்கும். மேலும், இக்காலப்பகுதியில் பரீட்சையில் எதிர்பார்க்கப்படும் வினாக்களைக் கொண்ட வினாத்தாள்களை அச்சிடுதல், விநியோகித்தல்...

செம்மணியில் இதுவரை 481 எலும்புக்கூடுகள் மீட்பு!

செம்மணி புதைகுழியில் நேற்று (04) 43 ஆம் நாள் அகழ்வுப் பணியின் போது, புதிதாக 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 2 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேலும் ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதியும் கண்டறியப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களாக இதுவரையில் மொத்தம் 97...

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இலங்கை வருகை!!

2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இரண்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி நேற்று (04) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இதன் முதலாவது போட்டி வரும் ஓகஸ்ட் 15 முதல் 19 ஆம் திகதி வரை காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரண்டாவது போட்டி வரும் ஓகஸ்ட் 23...

வவுனியா கோர விபத்து: விசாரணையில் வௌியான திடுக்கிடும் தகவல்!

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில், குறித்த பிரபல பேருந்தின் உரிமையாளர் நேற்று (04) புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 31 ஆம் திகதி புளியங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில், அதில் பயணித்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை...

ஜாதியில் என்ன பெருமை – நடிகை மீனா

80களில் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மீனா. அதற்குப் பிறகு 90களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், அர்ஜுன் என பல முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக அவர் நடித்திருக்கிறார். தற்போது மீனாவுக்கு 49 வயதாகிறது. அவரது மகள் நைனிகாவும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மீனா...

இது ஆட்சியல்ல சர்க்கஸ்கூடம் – உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூரில் காவிரி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நடிகை ஒருவர் குறித்து இரட்டை அர்த்த கருத்தைப் பேசியதாக அவர்மீது வழக்குப் பதியப்பட்டு நேற்று காலை சென்னையில் கைது செய்யப்பட்டார். சென்னையில் கைது செய்யப்பட்ட அவர் விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்பட்டு, விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டார். செங்கிப்பட்டி...
Loading posts...

All posts loaded

No more posts