- Sunday
- August 2nd, 2026
உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் கடைசி நிமிடத்தில் டையலெமன்ஸ் அடித்த கோலால் செனகல் அணியை வீழ்த்தி பெல்ஜியம் வெற்றி பெற்றது. பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்து 2-வது சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இதில், நள்ளிரவு 1.30 மணியளவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பெல்ஜியம்...
ஈரான் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச அணுசக்தி முகவரகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என அந்தநாட்டின் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்வதற்கு சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் ஆய்வாளர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்....
இந்த ஆண்டின் அடுத்த 6 மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் எவ்வித திருத்தமும் மேற்கொள்ளப்படமாட்டாது என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் நீர் சுத்திகரிப்பு பணிகளுக்காக சபைக்கு பெரும் செலவு ஏற்படவில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய தேவை...
கடந்த வருடத்தின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தின் ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9.9% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய, ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்துள்ள ஒட்டுமொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 138,241 ஆகும் என அந்த அதிகார சபை...
நியூயோர்க் நகரிலுள்ள எம்பயர் அரச கட்டிடத்தின் உயரமான கோபுர உச்சியின் மேல் ஆபத்தான முறையில் ஏறி, திருமண முன்மொழிவை செய்ததாகக் கூறப்படும் இளம் ஜோடியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ரஷ்யாவை பூர்வீகமாகக் கொண்ட சாகசங்களில் ஈடுபடும் எஞ்சலா நிகோலாவ் (Angela Nikolau) மற்றும் வான்யா பீர்கஸ் (Vanya Beerkus) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச...
உடுவில் மகளிர் கல்லூரியில் (Uduvil Girls' College) கல்வி சார் ஊழியர் பிரிவில் ஏற்பட்டுள்ள வழிகாட்டல் ஆலோசனை (Counsellor) ஆசிரியர் பதவிக்கான வேலைவாய்ப்பிற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இப்பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதிற்குட்பட்ட பெண் பட்டதாரிகளாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது சுயவிபரக்கோவை (CV) மற்றும்...
நெதர்லாந்தில், 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3,00,000 இற்கும் மேற்பட்ட மின்னல்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் வானிலை ஆய்வுத் துறையான KNMI தெரிவித்திருப்பது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஐரோப்பா முழுவதும் வரலாறு காணாத அளவுக்கு வெப்ப அலை நிலவி வருகிறது. இதனால், நெதர்லாந்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக வெப்பநிலை 30°C முதல் 40°C வரை பதிவாகியிருந்தது....
பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா பகுதியில் அமைந்துள்ள தனியார் மேலதிக வகுப்பு ஒன்றின் கூரை திடீரென இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த சிறுவர்களில் பெரும்பாலானோர் 7 முதல் 11 வயதிற்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் 10 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் அடங்குவர். இந்தக் கூரை...
இந்த ஆண்டு க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை விரைவாக வழங்குவதற்கு, ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து மாணவர்களுக்கும் நிரந்தர தேசிய அடையாள அட்டைகளை வழங்கத் திணைக்களம் எதிர்பார்ப்பதாகப் பணிப்பாளர் நாயகம் ஜகத் ஹேரத் தெரிவித்தார். சாதாரண தரப் பரீட்சையை...
யாழ் போதனா வைத்தியசாலைக்கு அடுத்த ஆண்டு மேலும் ஒரு புதிய CT Scan இயந்திரம் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதியளித்துள்ளதாக , போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த, சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு கடந்த சனிக்கிழமை விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையிலான விசேட குழுவினர் , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு...
'கருப்பு 'திரைப்படத்தின் பிரம்மாண்டமான வசூல் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கும் '#சூர்யா 48' திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தில் சூர்யா, கயாடு லோகர், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், குமரவேல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் எஸ் ஆர்...
டிஜிட்டல் திரை பிரபலமான பாரத் கதாநாயகனாக வெள்ளித்திரையில் அறிமுகமாகும் 'மிஸ்டர் பாரத்' எனும் திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் படக் குழு உருவாக்கிய பிரத்யேக பாடலும் , பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நிரஞ்சன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மிஸ்டர் பாரத்' திரைப்படத்தில் பாரத், சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், ஆர் . சுந்தர்ராஜன், ஆதித்யா கதிர்,...
இலங்கையில் பதிவு செய்யப்பட முடியாத, ஒரு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய நவீன ரக அதிவேக மோட்டார் சைக்கிள்கள் ஐந்துடன் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனுடன் இரண்டு போலி இலக்கத் தகடுகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹோமாகம பிராந்திய குற்றவியல் பணியகத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில், அத்துருகிரிய - ஹோகந்தர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்...
வெனிசுவேலாவின் வடக்குப்பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட இரட்டை பூமியதிர்ச்சியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,943 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். ரிச்டர் அளவில் 7.2 மற்றும் 7.5 ஆகப் பதிவான இந்த பூமியதிர்ச்சி ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் நிலைகுலையச் செய்துள்ள நிலையில், மீட்புப் பணிகள் மற்றும் சர்வதேச உதவிகள் குறித்த புதிய விபரங்கள் வெளியாகியுள்ளன. பூமியதிர்ச்சியால்...
இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கமைய, இதுவரை கடற்படையின் தலைமை அதிகாரியாக கடமையாற்றிய ரியர் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ வைஸ் அத்மிரால் பதவிக்கு தரம் உயர்த்தப்பட்டு, இலங்கை கடற்படையின் 27ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குரிய நியமனக் கடிதம், ஜனாதிபதியின் செயலாளர்...
எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும், பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி வாடகை கட்டணங்கள் குறைக்கப்பட மாட்டாது என அந்தந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன. நேற்று முன்தினம் (29) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில், இரண்டு வகையான பெற்றோல் மற்றும் டீசல் விலைகளை குறைப்பதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்திருந்தது. அதன்படி, ஒக்டேன்...
போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி, தற்போது மறுவாழ்வு பெற்றுவரும் இளைஞர் சமூகத்தினரை தொழில்முறை வேலைவாய்ப்புகளில் இணைப்பதற்காகக் கைத்தொழில் அமைச்சு புதிய வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. மறுவாழ்வு பெற்ற இந்த இளம் யுவதிகள் மற்றும் இளைஞர்களைத் தனியார் துறையின் நிலையான தொழில்முறை வேலைவாய்ப்புகளில் இணைப்பதை இதன்மூலம் எதிர்பார்ப்பதுடன், அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு தேசிய சபை, மறுவாழ்வு பணியகம் மற்றும்...
பலதரப்பட்ட வெளிப்புற அதிர்ச்சிகளுக்கு மத்தியிலும், மெக்ரோ-பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் விரிவாக்கப்பட்ட நிதி வசதி வேலைத்திட்டத்தின் கீழ் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் காட்டியுள்ள அர்ப்பணிப்பை சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழு பாராட்டியுள்ளது. ஜூன் 24 முதல் 30ஆம் திகதி வரை கொழும்பிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவினர்,...
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் வானிலை மாற்றங்கள், வறட்சி, மற்றும் அனர்த்த முகாமைத்துவம் குறித்து விஞ்ஞானபூர்வமாகவும், மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் துல்லியமான முன்னறிவிப்புகளையும் வழங்கி வரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதியும் புவியியற்றுறைப் பேராசிரியருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, இலங்கையில் தற்போது நிகழும் காலநிலை மாற்றம் தொடர்பாக வழங்கிய நேர்காணல் கேள்வி: இலங்கையின் அடிப்படையான...
அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த தம்பதியருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, பிறப்பின் அடிப்படையில் அமெரிக்கக் குடியுரிமை வழங்குவதைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த உத்தரவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 9 நீதிபதிகள் கொண்ட இந்த நீதிபதிகள் குழுவில், டிரம்பின் உத்தரவுக்கு ஆதரவாக 3 நீதிபதிகளும், அதற்கு எதிராக 6 நீதிபதிகளும் தீர்ப்பளித்துள்ளனர். இந்தத்...
Loading posts...
All posts loaded
No more posts
