‘சூர்யா 48 ‘படத்தொடக்க விழா!!

‘கருப்பு ‘திரைப்படத்தின் பிரம்மாண்டமான வசூல் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கும் ‘#சூர்யா 48’ திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தில் சூர்யா, கயாடு லோகர், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், குமரவேல் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்.

‘ஜெய் பீம்’ கூட்டணி- இந்திய அளவிலான முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாலே ஃபிலிம்ஸ் ஆகியவை இணைந்திருப்பதால்… ‘சூர்யா 48’ திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போதே உருவாகி இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் ஜூலை மாதம் 22 ஆம் திகதி முதல் தொடங்குகிறது என படக் குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.‌

Related Posts