- Saturday
- August 1st, 2026
கிலியன் எம்பாப்பேயின் அதிவிசேட திறமையின் உதவியுடன், பிரான்ஸ் அணி இம்முறை உலகக் கிண்ண கால்பந்து தொடரின் இறுதி 16 அணிகள் கொண்ட சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இறுதி 32 அணிகள் சுற்றில் நடைபெற்ற போட்டியொன்றில் பிரான்ஸ் அணி 3க்கு 0 என்ற கோல் கணக்கில் சுவீடனைத் தோற்கடித்ததுடன், எம்பாப்பே இப்போட்டியில் இரட்டை கோல்களைப் பதிவு செய்தார்....
இலங்கையிலேயே வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றார்கள். ஏனைய மாகாணங்களில் நடைபெறும் கலந்துரையாடல்களின் போது, இவர்களது சேவையையே நாம் முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டுகின்றோம், என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தார். வடக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்கள...
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையிலேயே முதற்தடவையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான 'சிசு செரிய' பாடசாலைப் பேருந்துச் சேவையானது, யாழ்ப்பாணம் கொடிகாமம் மத்திய பேருந்து நிலையத்தில் இன்று (01.07.2026) புதன்கிழமை காலை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆரம்ப நிகழ்வில், கடற்றொழில்,...
