Ad Widget

யாழ்.பல்கலைக்கழகத்தில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!!

யாழ்.பல்கலைக் கழக மருத்துவ பீடத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த பீ.சி.ஆர் பரிசோதனைகளை மீள ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் பீ.சி.ஆர் பரிசோதனைகளை உடனடியாக மேற்கொள்வதற்கான ஆளணியை நியமிப்பதற்குத் துணைவேந்தர் நடவடிக்கை மேற்கொண்டதை தொடர்ந்த 3பேர் பல்கலைக்கழகத்தின் நிதிமூலத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக் கழக மருத்துவ பீட கொரோனா...

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியை மீண்டும் பொறுப்பேற்றார் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் பதவியை நாட்டில் நிலவும் கொரோனா பேரிடரினை கருத்தில் கொண்டு, வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் பொறுப்பேற்றார். கடந்த பெப்ரவரி மாதம் ஆரம்பித்தில், மேற்படிப்புக்காக பிரிட்டனுக்கு சென்றிருந்த அவர், தனது பொறுப்பை தற்காலிகமாக பதில் பணிப்பாளர், வைத்தியர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் ஒப்படைத்திருந்தார். எனினும், தற்போது விடுமுறையில் நாடு திரும்பிய வைத்தியர் தங்கமுத்து...
Ad Widget

கொக்குவில் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு

கொக்குவில் பகுதியில் யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னான்டோ தலைமையில் இராணுவம் மற்றும் பொலிஸாரினால் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சமீப காலமாக இடம்பெற்று வரும் வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள், அவ்விடங்களில் பதுங்கியிருப்பதாக இரகசிய தகவல், யாழ்.பொலிஸ் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த தகவலுக்கமைய இன்று அதிகாலை 4 மணி முதல்...

நியூசிலாந்தில் தாக்குதலை நடத்திய இலங்கையர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!

நியூசிலாந்தில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் மக்கள் மீது தாக்குதலை நடத்திய ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். பொலிஸாரின் தீவிர கண்காணிப்பில் இருந்த குறித்த நபர் ஐ.எஸ். அடிப்படைவாத கொள்கைகள் கொண்ட இலங்கையர் எனவும் இது தீவிரவாத தாக்குதல் எனவும் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார். இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கமொன்றின் கொள்கைகளை கொண்டிருந்த அவரின் பெயரை...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிப்பு!!

நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். அதன்படி குறித்த ஊரடங்கு செப்டம்பர் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைய அதிகரிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவதே ஒரே தீர்வு என பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்...

பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கும் இயலுமை உள்ளது -ஜனாதிபதி

மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியை வழங்குவதற்கான இயலுமையுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற கொரோன ஒழிப்பு விசேட குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. தடுப்பூசியேற்றும் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது. 20 முதல் 29...

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!!

18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (02) ஆரம்பிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மாவட்ட அடிப்படையில் தடுப்பூசி வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சமூக ஊடகப் போராளி ஞானப்பிரகாசம் பிரகாஷ் மறைவு!!

சமூக ஊடகப் போராளி ஞானப்பிரகாசம் பிரகாஷ் (வயது 26) இன்று மாலை உயிரிழந்துள்ளார். அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளதாக நேற்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டது. இந்த நிலையில் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையிர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார். தசைத்திறன் குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டவரான ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸூக்கு முகநூலில்...

ஊரடங்கு நேரத்திலும் யாழில் அதிகரிக்கும் வாள்வெட்டு சம்பவங்கள்- ஒருவர் படுகாயம்!

மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் சிறிது நேரம் பதற்றநிலை காணப்பட்டதோடு, பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாக பழக்கடை நடத்துபவர் மீதே இவ்வாறு வாள்வெட்டுத்...

குழந்தை பிரசவித்து 10 நாட்களின் பின்னர் தாய் உயிரிழப்பு – யாழில் மேலும் 8 உயிரிழப்புகள் பதிவு!

யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் குழந்தை பிரசவித்து 10 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிறந்த குழந்தைக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகராசா பிரியதர்ஷினி (வயது -33) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இதேநேரம், கைதடி அரச...

தர்மலிங்கத்தின் 36ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிப்பு!

தமிழர் அரசியலில் தவிர்க்க முடியாத செல்வாக்குமிக்க தலைவர் வி.தர்மலிங்கத்தின் 36வது நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம், தாவடி பகுதியில் உள்ள அமரர் வி.தர்மலிங்கத்தின் நினைவு தூபியில் இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் மறைந்த அமரர் வி.தர்மலிங்கத்தின் நினைவு தூபிக்கு சுடர் ஏற்றி, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது....

யாழில் மின்னல் தாக்கி 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!!

அச்சுவேலி பகுதியில் வயலில் உழுது கொண்டிருந்தவர் மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இந்தச் சம்பவம் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது. இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை (டிப்போ) சாலையில் பேருந்து சாரதியாக பணியாற்றும் உடுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மதனராசா (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வயலில்...

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கைதடி முதியோர் இல்லத்தில் 72 பேர் உட்பட 106 பேர் தொற்றுடன் அடையாளம்!

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 106 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 72 பேர் கைதடி முதியோர் இல்லத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையில் இன்று 103 பேரிடம் அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது....

குருநகர் இளைஞன் கொலை – நீதவான் வழங்கி உத்தரவு

யாழ் குருநகர் பகுதி இளைஞனை வாளால் வெட்டி கொலை செய்த பிரதான சந்தேகநபர்களை 48 மணித்தியாலம் பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கவும் தொடர்புபட்ட ஏனையோரையும் உடனடியாக கைது செய்யும் படியும் யாழ் நீதவான் பீற்றர்போல் இன்று (01) யாழ் நீதிமன்றத்தில் உத்தரவிட்டார். யாழில் கடந்த 22 ஆம் திகதி பட்டப்பகலில் ஊடரங்கு அமுலில் இருந்த...

யாழில் கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைக்க மறுத்த அரச அலுவலகருக்கு எதிராக நீதிமன்றில் தீர்ப்பு!!

பெண் அரச அதிகாரி ஒருவர் கோவிட்-19 நோய்த்தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கைக்கு அரச அலுவலகர் ஒத்துழைப்பு வழங்காததால் நீதிமன்றக் கட்டளையை அரியாலை பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பெற்றுக்கொண்டுள்ளார். நாட்டின் நடைமுறையில் உள்ள சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் பொதுச் சுகாதாரப் பரிசோதகரின் கடமைக்கு ஒத்துழைக்கவேண்டும், அவரினால் கோரப்படும் விவரங்கள் வழங்கப்படவேண்டும் என்று யாழ்ப்பாணம்...

யாழில் 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்!!

யாழ். மாவட்டத்தில் 3 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்துள்ளார். அதன்படி, வேலணை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட J/26 கிராமசேவகர் பிரிவு, மருதங்கேணிப் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட J/432 மற்றும் J/433 ஆகிய இரு கிராமசேவகர் பிரிவுகளும் முடக்கப்பட்டிருப்பதாக மாவட்டச் செயலாளர் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்கள்...

யாழ். நகரில் அதிகளவில் மக்கள் நடமாட்டம்!

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் யாழ்ப்பாண நகரில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து காணப்படகின்றது. குறிப்பாக நேற்றையதினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 375 பேருக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசிய தேவை தவிர்ந்து வீடுகளைவிட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனினும் அவ்வாறான அறிவுறுத்தல்களையும் மீறி பொதுமக்கள் தற்பொழுது வீதிகளில் வழமைபோல நடமாடி வருவதை...

கொரோனா ஏற்பட்டு குணமடைந்த சிறுவர்களுக்கு மிகவும் ஆபத்தான நோய்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு குணமடைந்த சிறுவர்களுக்கு பல உறுப்புக்கள் சார்ந்த அழற்சி நோயுடன் (Multi system inflammatory syndrome) தொடர்புடைய மிகவும் ஆபத்தான நோய் பரவி வருவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குப் பின்னர், சில குழந்தைகள் இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளாவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே...

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய மாறுபாடு இலங்கையிலும் அடையாளம் காணப்படலாம்!!

தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா மாறுபாடு எந்த நேரத்திலும் இலங்கைக்குள் நுழையலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். அவ்வாறு வைரஸ் நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க உலகில் வேறு எந்தப் பொறிமுறையும் இல்லை என்றும் அவர் கூறினார். இந்த விடயம் குறித்து ஊடகங்களிடம் தெரிவித்துள்ள அவர், சோதனைக்காக...

முடக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்குமாறு கோரிக்கை!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்கத்தை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் குறித்து ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் போதியளவு வீழ்ச்சி ஏற்படாத காரணத்தினால் முடக்கல் நிலையை...
Loading posts...

All posts loaded

No more posts