Ad Widget

சமூக ஊடகப் போராளி ஞானப்பிரகாசம் பிரகாஷ் மறைவு!!

சமூக ஊடகப் போராளி ஞானப்பிரகாசம் பிரகாஷ் (வயது 26) இன்று மாலை உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளதாக நேற்று முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டது.

இந்த நிலையில் திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையிர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.

தசைத்திறன் குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டவரான ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஸூக்கு முகநூலில் பலரையும் ஒருங்கிணைத்து அநீதிக்கு எதிரான போராட்டங்களை நடத்தியவர் என்பதைப் பாராட்டி மாமனிதர் ரவிராஜ் ஞாபகார்த்தமான “சமூக ஊடகங்கள் மூலம் ஒருங்கிணைப்பு செயற்பாடு விருது” வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

2019ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் திகதி இடம்பெற்ற மாமனிதர் நடராஜா ரவிராஜின் 13ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் வழங்கிவைக்கப்பட்டது.

ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ், சமூக ஊடகங்களில் மக்களுக்கு பயனுள்ளதான விடயங்களைப் பகதிர்வதிலும் தனது இறுதிமூச்சுவரை பணியாகக் கொண்டிருந்தார்.

Related Posts