Ad Widget

தகனம் செய்வதில் பாரிய சிக்கல்: நிதி அமைச்சரிடம் நேரடியாக முறையிட்டார் சுமந்திரன்

வடக்கு கிழக்கில் சடலங்களை தகனம் செய்வதில் பாரிய சிக்கல் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் நேரடியாக குறித்த முறைப்பாட்டினை அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்திருந்தார். கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள...

கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைக்க நடவடிக்கை!

கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கரைச்சி பிரதேச தவிசாளர் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த மயானத்தை அமைக்க 24 மில்லியன் ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தொகையில் ஒரு கோடி ரூபாயை கிளிநொச்சியில் உள்ள வர்த்தகர் ஒருவர் வழங்க முன்வந்துள்ளார்....
Ad Widget

நிறைவேறியது அவசரகாலச் சட்டம்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் 81 மேலதிக வாக்குகளினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையியேயே 81 மேலதிக வாக்குகளினால் அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபசவினால் கடந்த ஆகஸ்ட் 30ஆம் திகதி அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள்...

முல்லைத்தீவை சேர்ந்த இளம் பெண் இந்தியாவில் கைது!!

இந்தியாவின் தனுஸ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக தப்ப முயன்ற இலங்கையை சேர்ந்த இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடு தப்பி செல்ல தமிழகம் வந்தாரா என மத்திய உளவுத்துறை தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர். இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த சிவனேசன் என்பவருடை மகள் கஸ்தூரி. இறுதிகட்ட போரின் போது இலங்கையில் இருந்து...

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்க இனியும் காத்திருக்க வேண்டியதில்லை – பேராசிரியர் நீலிகா

பாடசாலைகளை மீண்டும் திறக்க காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு, மூலக்கூறு மற்றும் நுண்ணுயிரியல் துறை பேராசிரியர் நீலிகா மாலவிகே தெரிவித்தார். பல மேற்கத்திய நாடுகளில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், பாடசாலைகள் இன்னும் திறந்தே உள்ளன என்று அவர் சுட்டிக்காட்டினார். “இந்த ஆண்டு மே மாதத்திற்குள், இலங்கை உள்பட...

கொரோனாவால் உயிரிழந்த சுயாதீன ஊடகவியலாளர் பிரகாஸின் பூதவுடல் தகனம்!

கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்திருந்த சுயாதீன ஊடகவியலாளரின் பூதவுடல் இன்றைய தினம் மின் தகனம் செய்யப்பட்டது. கொடிகாமத்தை சேர்ந்த ஞானப்பிரகாசம் பிரகாஸ் (வயது 26) கடந்த வாரம் கொரோனோ தொற்றுக்கு உள்ளான நிலையில் கடந்த 02ஆம் திகதி உயிரிழந்திருந்தார். சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக அவரது பூதவுடல் கோம்பயன் மணல் மயானத்தில் இன்று (திங்கட்கிழமை) மின்...

பணம் உதவி வழங்கிய குற்றச்சாட்டில் யாழில் மூவர் கைது!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அதிகளவானோரை அழைத்து பணம் உதவி வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வதிரி, இரும்பு மதவடியில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இந்தப் பண உதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, நூற்றுக்கணக்கானோர் வரிசையில் திரண்டனர். இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக...

யாழில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது – க.மகேசன்

யாழ். மாவட்டத்தில் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார் தற்போது உள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பாக யாழ். மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா நிலைமை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில்...

யாழில் புதிதாக மின்தகன இடங்களை அமைப்பதற்கான சாத்தியமில்லை!!

புதிதாக மின்தகன இடங்களை உடனடியாக அமைப்பதற்கான சாத்தியமில்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (திங்கட்கிழமை) மதியம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ். மாவட்டத்தில் சடலங்களை மின்தகனம் செய்வதற்கான வசதி யாழ். மாநகர சபையிடம் மட்டுமே உள்ளது....

முன்னாயத்த நடவடிக்கைக்காக ஏனைய சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே இருக்கிறோம் – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

முன்னாயத்த நடவடிக்கைக்காக நாட்டிலுள்ள வேறு இடங்களில் உள்ள சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே இருக்கிறோமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் – இதுவரை 20 சடலங்களை பாதுகாப்பதற்கான குளிரூட்டி வசதிகள்...

பொறுமையின் எல்லையில் வடக்கு கடற்றொழிலாளர்கள் – போராட்டத்தில் குதிக்கவும் தீர்மானம்!!

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோதச் தொழில் முறைகளினால் ஏற்படுகின்ற பாதிப்புக்களில் இருந்த தங்களை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் பொறுமையின் எல்லையில் இருப்பதாகவும் வடக்கு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இலங்கை அரசாங்கத்தின் அசமந்தப் போக்கினைக் கண்டித்துள்ள வடக்கு கடற்றொழிலாளர்கள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதிருந்த நம்பிக்கையினையும் இழந்துள்ளதாக...

யாழ்ப்பாணத்தில் மேலும் ஐவரை காவுகொண்டது கோவிட்-19 வைரஸ்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 5 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வேலணையைச் சேர்ந்த 80 வயதுடைய பெண் ஒருவரும் நீர்வேலியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட கீரிமலையைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த...

4 மாவட்டங்களில் 20 – 29 வயதுக்கு உட்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி!

நாட்டில் 4 மாவட்டங்களில் உள்ள 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்கும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார். அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் நாளை தடுப்பூசி செலுத்தப்படுமென அவர் தெரிவித்தார். இந்த மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி செலுத்தப்படும் அதே தடுப்பூசி...

அவசரகால சட்டத்தை அமுல்படுத்தி மக்களை அடக்கி ஆள அரசாங்கம் முயல்கின்றது- சுரேஸ்

பஞ்சம் மற்றும் பட்டினினை நோக்கி இலங்கை அரசு நகர்ந்து கொண்டு இருக்கின்றது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்...

ஒக்டோபர் 2 வரை முடக்கத்தை நீடிக்க வேண்டும் – இலங்கை மருத்துவ சங்கம்

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கத்தில் காணப்படுகின்ற தளர்வு நிலைமையால் முடக்கத்தின் மூலமான நேர்மறையான பிரதிபலனைப் பெற முடியாமல் போகும். எனவே தற்போதுள்ளதைப் போன்ற நிலைமையிலேனும் போக்குவரத்துக்களை கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாக்கக் கூடிய உயிர்களைக் கருத்திற் கொண்டு, தற்போதைய முடக்கத்தை இம்மாதம் 18 ஆம் திகதி வரையும் , ஒக்டோபர் 2 ஆம் திகதி வரையும் நீடிக்குமாறு...

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு சட்டத்தினை மீறி செயற்பட்டோருக்கு எதிராக நடவடிக்கை

கோப்பாய் பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை மீறி வீதியில் பயணித்தோருக்கு எதிராக பொலிஸாரால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோப்பாய் பகுதிகளில் பணத்தடையினை மீறி பொதுமக்கள் வீதிகளில் பயணிப்பதுடன், வீதிகளில் சுகாதார நடைமுறையினை பிற்பற்றாது, வியாபார நடவடிக்கை முன்னெடுக்கின்றமையினால் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பதற்குரிய வாய்ப்பு அதிகம் காணப்படுவதாக பெரும்பாலானோரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த...

கோதுமை மாவுக்கு சந்தையில் தட்டுப்பாடு!

கோதுமை மாவுக்கு தற்போது சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தியாவசியப் பொருட்களை பதுக்குதல் மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை தொடர்ந்தும் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றது. அந்தவகையில் இந்த திடீர் சோதனையில் 32 ஆயிரத்து 597 மெட்ரிக் டன் சீனி மற்றும் 643.5 மெட்ரிக் டன் நெல் மீட்கப்பட்டுள்ளதாக நுகர்வோர்...

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்க்கவும்- சுகாதார பிரிவு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்கள், அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருத்துகளை பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள் என சுகாதார பிரிவு வலியுறுத்தியுள்ளது. சமீபகாலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களில் 30 வயதிற்கு குறைவானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. மேலும், நேற்று (வெள்ளிக்கிழமை) பதிவான கொரோனா மரணங்களில் 5 பேர்,...

யாழில் தேங்கும் கொரோனோவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள்!! மாநகர முதல்வரின் வேண்டுகோள்!!

கொரோனா தொற்றுக்குள்ளாகி இறப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு யாழ் மாநகர சபையினால் 6500 ரூபா கட்டனம் அறிவிடப்படுகின்றது. எனினும் குறித்த கட்டணத்தை செலுத்த முடியாதவர்கள் யாரவது தனிப்பட்டமுறையில் என்னை தொடர்பு கொண்டால் அவர்களுக்கு என்னால் உதவ முடியும் என யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ் மாநகர ஆளுகைக்குள் உள்ள மின்மயான தகனம்...

“இராணுவம் என்றால் என்ன என்பதை இனி சிங்கள மக்கள் அறிந்து கொள்வார்கள்” – விக்னேஸ்வரன்

“தமக்கெதிராக மக்கள் கிளர்ந்தெழ ஆயத்தமாகின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு அவர்களை அடக்கி ஆள அவசரகாலச் சட்டத்தை உபயோகித்துள்ளார். இது சர்வாதிகாரத்திற்கு முக்கிய படி என்பதில் எந்தவித ஐயமும் இருக்க முடியாது. இராணுவம் என்றால் என்ன என்பதை இனி சிங்கள மக்கள் அறிந்து கொள்வார்கள்” இவ்வாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்...
Loading posts...

All posts loaded

No more posts