Ad Widget

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை முதல்!!

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும். அத்தியாசிய தேவைகளை கருத்திற் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை தொடர்ந்து அமுலில் இருக்கும் என போக்குவரத்து மற்றும் சமூதாய பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில்...

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் தடுப்பூசியைப் பெறுவது குறித்து சுகாதார அமைச்சு விளக்கம்!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த நோயாளர்கள் குணமடைந்து 14 நாட்களின் பின்னர் தடுப்பூசியை பெறுவது உகந்ததாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, தேவையற்ற முறையில் அச்சமடையத் தேவையில்லை என விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். நோயாளர் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பியதன் பின்னர், அன்று முதல் 14 நாட்களுக்குப் பின்னர் தாமதிக்காமல் தடுப்பூசியைப்...
Ad Widget

யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் சர்வமதப் பேரவை!!

கவனம், அபாயம், அவதானம் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. யாழ். மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது கொரோனா விழிப்புணர்வு பதாதைகள் யாழ்.நகரப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு, கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டினை...

ஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்

தடுப்பூசி செலுத்திய பின்னர் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். இன்று (திங்கட்கிழமை) பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். கொழும்பு பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் இன்றும்...

கொழும்பு, கண்டி, யாழ் மாவட்டங்களில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில்

நாட்டில் நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்பது பகுதிகள் இன்று காலை 6.00 மணிமுதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அம்பறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளும், கண்டி மாவட்டத்தின் கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளும், கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில பகுதிகளும் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்தித்துறை...

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ் கூறுகள்? – மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் விளக்கம்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ் கூறுகள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இது தடுப்பூசியுடன் தொடர்பான விடயம் அல்ல என்றும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன தெரிவித்தார். இந்த விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், ‘இந்த விடயம் பத்திரிக்கையொன்றில் தலைப்பு...

குறிகாட்டுவான் கடற்கரையில் இந்திய மருத்துவ கழிவுகள் கரையொதுங்குகின்றன

குறிகாட்டுவான் கடற்கரை பகுதிகளில் மருத்துவ கழிவுகள் கரையொதுங்கி வருகின்றன. இந்திய மருத்துவ கழிவுகளே குறிகாட்டுவான் கடற்கரையில் இவ்வாறு கரையொதுங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் நயினாதீவு கடற்கரை பகுதிகளிலும் பெருமளவான மருத்துவ கழிவுகள் கரையொதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500ஐக் கடந்தது!

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500ஐக் கடந்துள்ளது. மேலும் 35 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது. 18 பெண்களும் 17 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 502ஆக அதிகரித்துள்ளது.

மட்டுப்படுத்தபட்டோரின் பங்கேற்புடன் திருமண விழா; ஆலயங்களில் வழிபாடு – புதிய கட்டுப்பாடுகள் வெளியீடு

திருத்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார். அதில் தற்போது நடைமுறையில் உள்ள பல கட்டுப்பாடுகள் தளர்தப்பட்டுள்ளன என்று இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். குறைந்த எண்ணிக்கையிலானோர் பங்கேற்புடன் திருமண நிகழ்வுகளை நடத்துவதற்க்கும் சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்கும் வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகளை நடத்த அனுமதிக்கப்படும் என்றும் இராணுவத் தளபதி...

எரிபொருள் விலையை குறைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்

பொது மக்களின் நலன்கருதி எரிபொருள் விலையை குறைப்பது உள்ளிட்ட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமாயின் அவை நிவர்த்தி செய்யப்பட்டு நாட்டை கட்டியெழுப்ப சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் நிதி அமைச்சர் கூறினார். நிதி அமைச்சில் தமது கடைமைகளை பொறுப்பேற்ற...

லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை!

லம்ப்டா கொரோனா வைரஸ் பிறழ்வு இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். லம்ப்டா வைரஸ் பிறழ்வு தொடர்பில் சுகாதார அமைச்சு...

தரம் 5 புலமைப்பரிசில், ஏஎல் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த 2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் சாதாரணதரப் பரீட்சை திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 4ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி 29ஆம் திகதிவரை இடம்பெறுகிறது. க.பொ....

யாழ்ப்பாணத்தில் மேலும் பல பிரதேசங்கள் மக்களின் மீள்குடியமர்வுக்காக விடுவிப்பு – மீள்குடியமர வேண்டியவர்களின் விவரம் மீளாய்வு

உள்நாட்டுப் போர் காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களில் மீள்குடியமர்த்தப்படவுள்ள மக்களின் விவரங்களை இற்றைப்படுத்தும் பணி பிரதேச செயலகங்களினால் முன்னெடுக்கப்படுகிறது. இதுதொடர்பில் மேலதிக மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போரினால் இடம்பெயர்ந்து தற்போதும் வேறு இடங்களில் வசித்து வரும் குடும்பங்களின் விவரங்கள் மீளாய்வு செய்யப்படுகின்றன. பல்வேறு பிரதேசங்கள் மீள்குடிமர்த்துவதற்கு...

கொரோனா வைரஸினால் மேலும் 40 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 40 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, 11 பெண்களும் 29 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை நாட்டில் இதுவரையில் 2 இலட்சத்து 68 ஆயிரத்து 676...

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 31 பேர் கைது!!

சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை உடனடியாக மீள பெறுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பத்தரமுல்லை, நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்பினர், பொது மக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டு குறித்த சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தினர். எனினும்,...

இலங்கையில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல் – அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து அரசாங்கம் விளக்கம்

உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில், நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் நிலவுவது குறித்து உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் எந்த தகவலும் வரவில்லை என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்தார். பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள இலங்கை குறித்த புதுப்பிக்கப்பட்ட பயண...

பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி யாழில் விசேட பூஜை வழிபாடு!

கலாநிதி யோகராஜன் அறக்கட்ட அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில், பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்களின் பங்குபற்றுதலுடன் பசில் ராஜபக்சவிற்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு இடம்பெறுகின்றது.

பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தது கூட்டமைப்பு!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் Sarah Hulton-இற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பில் நேற்று(புதன்கிழமை) குறித்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்...

மஹிந்தவின் அமைச்சு பசில் வசம்! மஹிந்தவுக்கு புதிய அமைச்சு!!

நிதி அமைச்சராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சராகப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

முல்லைத்தீவு சென்று தாக்குதல் நடத்திய ஆவாவின் 6 பேர் யாழில் கைது!!

முல்லைத்தீவு செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து ஒருவருக்கு வாளினால் வெட்டியும் காரினை எரியூட்டியும் அட்டூழியத்தில் ஈடுபட்ட 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சுவிஸில் இருந்து ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் பணம் அனுப்பி இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். நவாலியைச் சேர்ந்த மூவரும் புத்தூரைச்...
Loading posts...

All posts loaded

No more posts