- Friday
- September 19th, 2025

யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தை அடுத்து தென்மராட்சியின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டு உள்ளது. யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மீசாலை பகுதியில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொலிசாரின் பேருந்துக்கு பின் பக்கமாக டிப்பர் வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது. அதனால் அருகில் இருந்த மின் கம்பம் சேதமடைந்து கொடிகாமம் , மீசாலை...

யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 93ஆக உயர்வடைந்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குருநகரைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை தும்பளையைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில்...

வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கான அரசின் மீள்குடியேற்ற இணைப்பாளராக பிரதமரின் இணைப்புச் செயலாளர் கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ச வழங்கிவைத்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கீதாநாத் காசிலிங்கம், 2019ஆம் ஆண்டு நவம்பரில் பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டதிலிருந்து பிரமரின் இணைப்புச் செயலாளராக உள்ளார்.

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோண்டாவில் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவமொன்றில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் கோண்டாவில் பகுதியில் உள்ள இலங்கை பேருந்து சாலைக்கு பின்புறமாக உள்ள செல்வபுரம் சிவன் கோவிலடியில் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர். இதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் அவர்களில் ஒருவரது கை துண்டாடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை கட்டாயமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நேற்று (புதன்கிழமை) அறிவித்துள்ளனர். மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். மாகாண எல்லைகளை கடக்க முயற்சிக்கும் வாகனங்கள் தொடர்ந்தும் திருப்பி அனுப்பப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார். அத்தியாவசிய...