Ad Widget

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை முதல்!!

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை அத்தியாவசிய சேவையாக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படும்.

அத்தியாசிய தேவைகளை கருத்திற் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை தொடர்ந்து அமுலில் இருக்கும் என போக்குவரத்து மற்றும் சமூதாய பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வில் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை முடக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் ஒரு சில பகுதிகளில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து அமுலில் உள்ளது. இதனை விரிவுப்படுததும் வகையில் தற்போது மாகாணங்களுக்கு இடையில் பொது போக்குவரத்து சேவையை மட்டுப்படுத்திய வகையில் நாளை (14) முதல் மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாகாணங்களுக்கு இடையில் தனியார் மற்றும் அரச பேருந்துகளும், புகையிரதங்களும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளை முதல் பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படும். அத்தியாவசிய சேவையை கருத்திற் கொண்டு காலை மற்றும் மாலை அலுவலக புகையிரதங்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் சுற்று தாக்கத்தின் பின்னர் மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஆரம்பிக்கப்பட்டன.

புதுவருட கொவிட் கொத்தணியின் காரணமாக கடந்த மே மாதம் தொடக்கம் சுமார் இரண்டு மாத காலம் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தன.

சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றி பொது போக்குவரத்து சேவையினை மீள ஆரம்பிக்க கொவிட் -19 வைரஸ் ஒழிப்பு மத்திய நிலையம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Posts