Ad Widget

பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து தீர்மானிக்க பல வாரங்களாகும்!!!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து தீர்மானிக்க பல வாரங்களாகும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதியின் பின்னர் பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது தொடர்பாக எதிர்வரும் நாட்களில் கிடைக்கவுள்ள பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. தனிமைப்படுத்தல் தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய...

இலங்கையில் பயணக்கட்டுப்பாடு தொடருமா? – நாளை தீர்மானம்

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு தொடருமா அல்லது நீக்கப்படுமா என்பது குறித்து நாளை தீர்மானிக்கப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை நாளை சந்திக்கவுள்ள கொரோனா பணிக்குழு தற்போதைய நிலைமையை மறுஆய்வு செய்து இந்த விடயம் குறித்து தீர்மானிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார். நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்...
Ad Widget

வேகமாகப் பரவக்கூடிய டெல்டா வகை வைரஸ் கொழும்பில் அடையாளம்!

கொரோனா வைரஸின் மிகவும் பரவக்கூடிய டெல்டா வைரஸான B.1.617.2 மாறுபாடு கொழும்பில் கண்டறியப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல்துறை பீடத்தின் பிரதானி, வைத்தியர் சந்திம ஜீவந்தர இந்த விடயம் குறித்து இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார். கொழும்பில் பெற்றுக் கொண்ட பரிசோதனை மாதிரிகளின் ஊடாக இதனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதன்படி,...

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் – இந்திய உயர்ஸ்தானிகர் இடையே சந்திப்பு!!

தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யும் இலங்கையின் நல்லிணக்கத்துக்கு இந்தியாவின் நிலையான ஆதரவினை வழங்குவதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஐந்து பேரடங்கிய குழுவினர் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவை இன்று (வியாழக்கிழமை) இந்திய இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து ருவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், வடக்கு, கிழக்கு உட்பட...

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!!

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு உகந்த சூழல் உருவாக்கப்பட்டவுடன் பாடசாலைகள் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். பாடசாலை மீண்டும் திறப்பதற்கான பின்னணியை முறையாக தயாரிப்பது குறித்து இன்று நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் ஊடகங்களிடம் இதனைக் குறிப்பிட்டார். பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான முதல்...

முதியவர்கள், மாணவர்களுக்கு சுகாதாரத்துறை வழங்கும் அறிவுறுத்தல்!!

எந்தவொரு நீண்டநாள் நோய் நிலமையை உள்ள முதியவர்களை பொருத்தமான மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்குமாறு சுகாதாரத் துறை கோருகிறது. கோவிட்-19 தொற்றுநோயால் தங்கள் நோய்களுக்கு சிகிச்சை பெற தயக்கம் காட்டியதால் முதியவர்கள் சிலர் வீட்டில் உயிரிழப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையின் முதியோர் பிரிவின் மருத்துவ வல்லுநர் தில்ஹார சமரவீர தெரிவித்தார். இன்று சுகாதார...

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி!!

இணையத்தளம் (online) ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இந்த விடயம் தொடர்பான அறிவிப்பை மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கபில குமாரசிங்க இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். நாட்டில் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், சகல மதுபான நிலையங்களும் மூடப்பட்டு முத்திரையிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, இணையத்தளம் ஊடாக சில அங்காடிகள் மூலம் மதுபானம் விற்பனை செய்ய...

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற 78 இலங்கை தமிழர்களை விடுதலை செய்யக்கோரி யாழ்ப்பாணத்தில் அவர்களது உறவினர்கள் தங்களது வீடுகளில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று(புதன்கிழமை) காலை 9.00 மணியளவில் யாழ்ப்பாணம், நவாலி பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது உறவுகளை விடுதலை செய்யக்கோரி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை...

பயணத்தடையை நீக்குவது பற்றி 19 அல்லது 20இல் தீர்மானம்!!

நாடுமுழுவதும் பயணக் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்த முடிவை ஜூன் 19 அல்லது 20ஆம் திகதிகளில் மட்டுமே எடுக்க முடியும் என்று அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்ல தெரிவித்தார். இன்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற இணையவழி அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத் தடை...

பயணத்தடை திகதி மேலும் நீடிக்கப்படவேண்டும் – சுகாதாரத் துறை வலியுறுத்து

பயண தடை திகதி மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் பின்பற்றப்படாவிட்டால், தற்போதைய சூழ்நிலையில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவது கடினம் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அப்படியானால்...

பொலிஸார் எனத் தெரிவித்து பொலிஸாரையே ஏமாற்ற முயன்ற இருவரை மறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!!

பொலிஸார் எனத் தெரிவித்து பயணத் தடை உத்தரவை மீறி வீதிகளில் நடமாடிய இருவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் இன்று உத்தரவிட்டார். அவர்களில் ஒருவர் பொலிஸ் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர் என்று மன்றில் அறிக்கையிடப்பட்டது. யாழ்ப்பாணம் மாநகரில் பயணத் தடையை மீறி நடமாடிய ஒருவரை பொலிஸார் வழிமறித்து விசாரணை செய்துள்ளனர். அவர் தான்...

நயினாதீவு கடலில் கரையொதுங்கும் மருத்துவக்கழிவுகள் – அச்சத்தில் மக்கள்!

நயினாதீவு தெற்கு கடற்கரையில் மருத்துவ கழிவுகள் கரை ஒதுங்குவதால் மக்கள் இடையே அச்சநிலை ஏற்பட்டுள்ளது. அவை இந்தியாவில் கடலில் போட்ட நிலையில் இங்கு, வந்தவையா என்ற குழப்ப நிலையே காணப்படுவதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். வெற்று ஊசிகள், மாத்திரை வெற்று கடதாசிகள் உள்ளிட்டவையே இவ்வாறு கரை ஒதுங்கியுள்ளமை நேற்று(திங்கட்கிழமை) கண்டறிப்பட்டது. சம்பவம் தொடர்பில் நயினாதீவு...

யாழ்.நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் திறந்து வைப்பு!

நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம் இன்றைய தினம்(செவ்வாய்கிழமை) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. யாழ்.மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான நெல் களஞ்சியத்தில் தற்போது யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றாளர்களை பராமரிக்கவென 200 கட்டிகளுடன் தயார்படுத்தப்பட்டுள்ள குறித்த இடைத்தங்கல் பராமரிப்பு நிலையமானது இன்றைய தினம் யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மற்றும் அரச அதிபரினால் வைபவ...

வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகள் சுகாதார அமைச்சின் கீழ்!

மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிபிட்டி, அவிசாவளை, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன. இலங்கையில் தேசிய வைத்தியசாலைகளில் காணப்படும் மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள்...

பனிஸ் உட்பட அனைத்து பேக்கரி வகை பொருட்களின் விலை அதிகரிப்பு!

பாண் தவிர்ந்த அனைத்து வகையான பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் மாளுபான், பனிஸ் உட்பட அனைத்து பேக்கரி வகை பொருட்களும் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரையில் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் கரையொதுங்கியது திமிங்கலம்

ஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. 32 அடி நீளமான கரையொதுங்கிய குறித்த திமிங்கலத்தை காலை 8.30 மணியளவில் மீனவர்கள் கண்டுள்ளனர். தொடர்ந்து மீனவர்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த திணைக்கள அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர். குறிப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் திமிங்கலம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். சம்பவ...

தமிழக முதலமைச்சருக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்!

முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் நலன்களை கருத்தில் கெண்டும், திருச்சி சிறப்பு சிறைச்சாலையில் தங்களது விடுதலை தொடர்பாக சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சிறைக் கைதிகளின் விடுதலை குறித்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ் நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்றைய தினம் (14) அவசர கடிதம் ஒன்றை...

அடுத்த சில நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கலாம்!!! – சுகாதார அமைச்சு

இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இவ்வாறு கூறினார். அடுத்த சில நாட்களிலும் நாட்டில் கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்...

யாழில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்!

அனுமதிக்கு மேலதிகமாக பலரும் திருமண நிகழ்வில் கூடியதால் குருநகர் பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 16 பேர் இன்றைய தினம்(திங்கட்கிழமை) தனிமைப்படுத்தப்பட்டனர். இன்றைய தினம் குருநகர் பகுதியில் யாழ்.பொலிஸார் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போது அதிகளவானவர்கள் திருமண நிகழ்வில் பங்குபற்றியதை அவதானித்து யாழ்ப்பாண மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு அறிவித்தனர். இதனையடுத்து அங்கு...

சமஷ்டி ஆட்சி முறை வருகின்ற போது மலையக மக்களின் இருப்பு பாதுகாக்கப்படும் – கஜேந்திரன்

" ஒற்றையாட்சி முறைமை ஒழிக்கப்பட்டு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். சமஷ்டி முறை வருகின்ற போது மலையக மக்களின் இருப்பும் பாதுகாக்கப்படும்." என தமிழ் தேசியக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். பொது முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மஸ்கெலியா பகுதிகளில் உள்ள சுமார் 600...
Loading posts...

All posts loaded

No more posts