Ad Widget

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!!

நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்று கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு உகந்த சூழல் உருவாக்கப்பட்டவுடன் பாடசாலைகள் மீண்டும் கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பாடசாலை மீண்டும் திறப்பதற்கான பின்னணியை முறையாக தயாரிப்பது குறித்து இன்று நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் ஊடகங்களிடம் இதனைக் குறிப்பிட்டார்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான முதல் படியாக கல்வித்துறையில் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுப்படும் என்று அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 2 லட்சத்து 70 ஆயிரத்து 920 கோவிட்-19 தடுப்பூசிகள் தேவை என்றும் கல்வி அமைச்சர் கூறினார்.

Related Posts