Ad Widget

வேகமாகப் பரவக்கூடிய டெல்டா வகை வைரஸ் கொழும்பில் அடையாளம்!

கொரோனா வைரஸின் மிகவும் பரவக்கூடிய டெல்டா வைரஸான B.1.617.2 மாறுபாடு கொழும்பில் கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல்துறை பீடத்தின் பிரதானி, வைத்தியர் சந்திம ஜீவந்தர இந்த விடயம் குறித்து இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளார்.

கொழும்பில் பெற்றுக் கொண்ட பரிசோதனை மாதிரிகளின் ஊடாக இதனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 5 பேர் கொழும்பு – தெமட்டகொட பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த ஐவரும் சமூகத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய மாறுபாடு பி 117 மாறுபாட்டை விட 50% வேகமானது மற்றும் அதிக அளவில் பரவக்கூடியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, இலங்கையில் அதிக அளவில் பரவும் ஆல்பா மாறுபாடு உட்பட பல கொரோனா வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts