Ad Widget

யணக் கட்டுப்பாடுகள் நாளை நீக்கம் – மக்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகள் நாளை (திங்கட்கிழமை) நீக்கப்படவுள்ளன. இந்த நிலையில், சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அத்தோடு, குறித்த கட்டுபாடுகளுக்கு உட்பட்டே மக்கள் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அலுவலகங்களில் சேவைக்காக குறைந்தபட்ச ஊழியர்களையே...

நாளை அதிகாலை முதல் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்படும் – இராணுவ தளபதி அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள பல பகுதிகள் நாளை (21) அதிகாலை 4 மணி முதல் தனிமைப்படுத்தப்படும் என கொரோனா தடுப்பு செயலணி அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு செயலணியின் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இதனை அறிவித்துள்ளார். நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு நாளை தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த அறிவிப்பு...
Ad Widget

நேற்றைய தினம் (18) 54 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரப்பு!!

நேற்றைய தினம் (18) நாட்டில் மேலும் 54 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். இவர்களில் 23 பெண்கள் மற்றும் 31 ஆண்கள் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று (19) வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,534...

ஜனாதிபதியின் அதிருப்தியை அடுத்து தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளருக்கு இடமாற்றம்

ஜூன் 11ஆம் திகதி கோவிட்-19 உயிரிழப்புகளின் எண்ணிக்கையில் பிழை இருப்பதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தனது அதிருப்தியை வெளிப்படுத்திய ஒரு நாள் கழித்து சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர், மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மருத்துவ வல்லுநர் சமரவீர தொற்றுநோயியல் பிரிவில் இருந்து தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். தேசிய...

பருத்தித்துறை பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஐவர், நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உறுதி

பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் ஐவர் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர் ஒருவர் என 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் மற்றும் பருத்தித்துறை நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இடையே கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கடந்த சில நாள்களாக கண்டறியப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பெறப்பட்ட மாதிரிகளில் 17 பேரின் மாதிரிகள்...

கிளிநொச்சியில் தொற்று நீக்கும் பணியை தனிநபர் முfpன்னெடுப்பு!!

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்குடன் தனிநபர் ஒருவர் தனது சொந்த முயற்சியால் தொற்று நீக்கும் பணியினை முன்னெடுத்திருந்தார். கிளிநொச்சி- கண்டாவளை, தருமபுரம் பகுதியில் மக்கள் அதிகம் நடமாடும் பொது இடங்கள் மற்றும் பொலிஸ் நிலையம், இராணுவ சோதனைச் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் தொற்று நீக்கும் செயல்பாட்டினை அவர் நேற்று (வெள்ளிக்கிழமை)...

யாழ். மாவட்டதிற்கு இருந்த நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைப்பு

2020 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், கம்பஹா மாவட்டத்திற்கு மேலதிகமாக ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை யாழ். மாவட்டதிற்கு இருந்த ஆசனங்களில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கம்பஹா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 18 ல் இருந்து 19 ஆகவும், யாழ். மாவட்ட இட ஒதுக்கீடு 7 இல் இருந்து 6 ஆகவும் குறைந்துள்ளது....

பேக்கரி விற்பனையாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகளை வழங்கி வைத்த யாழ்.பொலிஸார்

யாழ்ப்பாண நகரில் இயங்கும் பேக்கரிகளில், நடமாடும் பேக்கரி உற்பத்தி பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு அங்கிகள், பொலிஸாரால் இன்று (சனிக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இனிவரும் காலங்களில் பாதுகாப்பு அங்கியினை அணிந்தே விற்பனையில் ஈடுபட வேண்டும் என யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்ணான்டோ அவர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

திங்கள் முதல் ரயில் சேவைகள் இடம்பெறும் – ரயில்வே திணைக்களம்

எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் மாகாணங்களுக்குள் ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி ஆறு பிரதான ரயில் மார்க்கம் ஊடாகவும் கரையோர மார்க்கத்தின் ஊடாக ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த எதிர்வரும் புதன்கிழமை இரவு 10 மணி வரை ரயில் சேவை தொடரும் என ரயில்வே திணைக்களத்தின்...

யாழ் மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழ் மாவட்டத்தை அவதானிக்கும் போது இன்னும் அபாயமான கட்டம் நீங்க வில்லை. எனவே பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமென அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அரசாங்க அதிபர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 5,000 ரூபா கொடுப்பனவு முதற்கட்டமாக...

கோவிட்-19 டெல்டா திரிபு நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் ஆபத்து!!

இந்தியா முழுவதும் வேகமாகப் பரவியிருக்கும் கோவிட்-19 டெல்டா வரைஸ் திரிபு வகையை இலங்கையில் கண்டுபிடிப்பது மிகவும் ஆபத்தானது என்று இலங்கை பொது சுகாதாரப் பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது. புத்தளத்தில் ஊடகங்களுடன் பேசிய சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண, கோவிட்-19 டெல்டா வைரஸ் திரிபு பரவியதாகக் கூறப்படும் கொழும்பில் இருந்து ஏனைய பிரதேசங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது...

யாழில் திருமண நிகழ்வில் பங்கேற்ற 13 பேருக்கு கொரோனா!!

சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு பகுதியில் அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4ஆம் திகதி, பண்டத்தரிப்பு பகுதியில் சுகாதார பிரிவின் அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட 78 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர்.பரிசோதனையில் 13 பேருக்கு கொரோனா வைரஸ்...

எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமுலில்...

தமிழர்களுக்கு தீர்வை வழங்க இந்தியா- அமெரிக்கா முன்வர வேண்டும்- சிவாஜிலிங்கம்

இந்தியா- அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இலங்கை விவகாரத்தில் இனியும் தலையிடவில்லை என்றால் 13 ஆவது திருத்தச்சட்டமும் இல்லாது போய்விடும் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். யாழில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எம்.கே.சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தியாவிடம் ஒன்றையே...

யாழில் யாசகர்களுக்கு மதிய உணவுகள் வழங்கிய பொலிஸார்!

யாழ்ப்பாணம் நகரப்பகுதியிலுள்ள யாசகர்களுக்கு, மதிய உணவுகள் பொலிஸாரினால் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன. பயணத்தடை காரணமாக யாழ்.நகரை சூழவுள்ள பகுதிகளிலுள்ள யாசகர்கள், உணவுக்காக பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். இந்நிலையில் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள், உணவில்லாமல் பாதிக்கப்பட்ட யாசகர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கியுள்ளனர். குறித்த நிகழ்வினை நாளையும்...

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட கொரோனாப் பரிசோதனை ஆய்வு கூடத்துக்கு தானியங்கி ஆர். என். ஏ பிரிப்பு இயந்திரம் அன்பளிப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட கொரோனாப் பரிசோதனை ஆய்வு கூடத்துக்கு 4.8 மில்லியன் ரூபா பெறுமதியான தானியங்கி ஆர். என். ஏ பிரிப்பு இயந்திரம் ஒன்று புலம்பெயர் தமிழரான சுப்பிரமணியம் கதிர்காமநாதனால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ பீட கொரோனாப் பரிசோதனை ஆய்வு கூடத்தின் தேவைகருதி, யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி இந்த அன்பளிப்புக்கான...

புத்தூர் வீதியில் சென்றவர் மயங்கி விழுந்து மரணம்!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தவர் திடீரென மயக்கமுற்று விழுந்து உயிரிழந்துள்ளார். புத்தூர் – நிலாவரை வீதி வழியாக இன்று(வியாழக்கிழமை) காலை 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, திடீரென மயக்கமுற்று வீதியில் விழுந்துள்ளார். அவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு அச்சுவேலி வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர். அவர்...

மீன் வியாபாரியிடம் கையூட்டு பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பொலிஸாருக்கு இடமாற்றம்!

பயணத்தடை காலப்பகுதியில் அனுமதிப்பதிரத்துடன் வியாபாரத்தில் ஈடுபட்ட மீன் வியாபாரியிடம் கையூட்டுப் பெற்றதாக குற்றச்சாட்டுக்கு முகம் கொடுத்துள்ள பொலிஸ் அதிகாரிக்கும், உத்தியோகஸ்தருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது. கொரோனா நோய்த்தொற்று பயணத்தடை காலப்பகுதியில் நடமாடும் மீன் வியாபாரிகளுக்கு நல்லூர் பிரதேச செயலாளரினால் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது. அதனைப் பயன்படுத்தி மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரியை...

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்ய அனுமதி மறுப்பு!!

இணையத்தளம் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது. பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளதுடன், முத்திரையிடப்பட்டுள்ளன. இதனையடுத்து, மதுபான விற்பனையை இணையத்தளம் வழியாக மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு மதுவரித்திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியது. எனினும் நாட்டில் கொரோனா பரவல்...

யாழில். கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த தொழிலாளிக்கு கொரோனா!

கட்டட வேலையில் ஈடுபட்ட போது, மேல் தளத்திலிருந்து தவறி வீழ்ந்து உயிரிழந்த தொழிலாளிக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன. அச்சுவேலியில் நேற்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டைச் சேர்ந்த நவரத்தினம் அன்ரன் ஜெயராஜா (வயது-36 ) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார். கட்டடத்தின் மேல் தளத்தில் சன்செட்டுக்கு...
Loading posts...

All posts loaded

No more posts