Ad Widget

முதியவர்கள், மாணவர்களுக்கு சுகாதாரத்துறை வழங்கும் அறிவுறுத்தல்!!

எந்தவொரு நீண்டநாள் நோய் நிலமையை உள்ள முதியவர்களை பொருத்தமான மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்குமாறு சுகாதாரத் துறை கோருகிறது.

கோவிட்-19 தொற்றுநோயால் தங்கள் நோய்களுக்கு சிகிச்சை பெற தயக்கம் காட்டியதால் முதியவர்கள் சிலர் வீட்டில் உயிரிழப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையின் முதியோர் பிரிவின் மருத்துவ வல்லுநர் தில்ஹார சமரவீர தெரிவித்தார்.

இன்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சிறப்பு மருத்துவ வல்லுநர் ஹேமந்த ஹெரத் தெரிவித்ததாவது;

இந்த நாட்களில் வீட்டிலிருந்து கற்பிக்கும் போது நீண்ட நேரமாக தங்கள் பிள்ளைகளை இணையவழி வகுப்புகளில் ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு பெற்றோர்களைக் கேட்டுக்கொள்கின்றோம்.

மாணவர்களை இணையவழித் தொழில்நுட்பத்தின் மூலம் நீண்ட நேரமாக தொடர்ச்சியாக இணைப்பதன் மூலம், கல்வி மற்றும் எதிர்காலத்தில் அவர்களின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் – என்றார்.

Related Posts