Ad Widget

LTTE இயக்கத்தை மீள உருவாக்க முயன்ற குற்றத்திற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டார்கள்!!

அரசாங்கத்துக்கு எதிராக புரட்சி செய்வார்களாயின், தனி இராச்சியம் அமைக்க முயற்சிப்பார்களாயின் அத்தகைய நபர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறு கோரி கிளிநொச்சியில் நேற்று ஆர்ப்பாட்டம்...

யாழ்ப்பாணத்தில் நலன்புரி முகாம்களில் வாழும் காணியில்லாத குடும்பங்களை மீளக் குடியமர்த்தல்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நலன்புரி முகாம்களில் வாழும் காணி இல்லாத 381 குடும்பங்களுக்கு பிரதம விலை மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டின் அடிப்படையில் 7 லட்சம் ரூபாய் 20 பேர்ச் காணித் துண்டை வழங்குவதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது நலன்புரி நிலையங்களில் வாழும் 409 குடும்பங்களில் 233 குடும்பங்களுக்கு காணியில்லை என்பது அடையாளம்...
Ad Widget

வடக்கில் நுண்நிதிக் கடனில் சிக்கியுள்ளோருக்கு சலுகைக் கடன்!!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நுண்நிதிக் கடனில் சிக்கியுள்ள மக்களுக்கு இலகு கடன் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பல்வேறு நுண்நிதிக் கடன் முறைகள் மூலம் கடன்களைப் பெற்றுச் சிக்கியுள்ள குறைந்த வருமானமுடைய கிராமிய மக்களை குறித்த கடன்பிடியிலிருந்து விடுவிப்பதற்காக கூட்டுறவு கிராமிய வங்கி மற்றும் சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கம் ஊடாக...

இலங்கையில் கொரோனாவால் முதல் மருத்துவரின் மரணம் பதிவு!!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ஒருவர் இன்று (செவ்வாய்கிழமை) காலை உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 32 வயதுடைய கயான் தந்தநாராயண எனும் குறித்த வைத்தியர் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையிலேயே, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றினால்...

மாவை முதலமைச்சர் வேட்பாளரென எந்த தீர்மானமும் எடுக்கவில்லை!!

தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ, தமிழ் அரசு கட்சியினதோ வடக்கு மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென தெரிவித்துள்ளார் இலங்கை தமிழ் அரசு கட்சியின் பதில் பொது செயலாளர் ப.சத்தியலிங்கம். இலங்கை தமிழ் அரசு கட்சியின் அரசியல்குழு கூட்டம் கடந்த 30ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்றிருந்தது. இதன்போது, சிறிதரன் எம்.பி கருத்து தெரிவித்த போது,...

கிளிநொச்சியில் ஏ9 வீதியை மறித்து போராட்டம்!!

விடுதலைப்புலிகளிற்கு உதவிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவுகளை விடுதலை செய்யக்கோரி கிளிநொச்சியில் போராட்டம் நேற்று (01) ஆரம்பமானது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஒன்று கூடிய உறவுகள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏ9 பிரதான வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுகொண்டிருந்த நிலையில் போக்குவரத்து சில நிமிடங்கள் பாதிக்கப்பட்டது....

மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கும் தொல்பொருள் திணைக்களகத்திற்கும் இடையில் முக்கிய கலந்துரையடல்!!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட இடங்களிலுள்ள தமிழர்களின் மரவுரிமைச் சின்னங்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பாக மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கும் தொல்பொருள் திணைக்களகத்திற்கும் இடையில் முக்கிய கலந்துரையடல் ஒன்று நடைபெற்றது. “எமது வரலாறுகளை அடுத்த சந்ததிக்கு கடத்துவதற்கு ஏதுவான வகையிலும் எங்களுடைய ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் உள்ள மரவுரிமைச் சின்னங்களை நாமே பாதுகாக்கும் நோக்குடனும் அவ்...

யாழ்.பல்கலை மாணவர்கள் ஐவர் உள்பட 6 பேருக்கு கோரோனா தொற்று!!

யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர்கள் ஐவர் உள்பட 6 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளம நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள்பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். காத்தான்குடி, கல்முனை மற்றும் மூதூரைச் சேர்ந்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இணைந்த விஞ்ஞான சுகாதார கற்கைகள் பீடத்தைச் சேர்ந்த...

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பலதடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவாமாகாணத்திலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு...

‘அமைதி தூபி’ என்பதற்கு இடமில்லை: முள்ளிவாய்க்கால் தூபியாகவே அமைக்கப்படும்- மாணவர் ஒன்றியம் உறுதி!

யாழ்.பல்கலை கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டு வரும் நினைவுத் தூபி முள்ளிவாய்க்கால் நினைவு தூபியாகவே அமைக்கப்படும் என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உறுதிபடக் கூறியுள்ளது. அந்த வகையில், முள்ளிவாய்க்கால் நினைவு தூபி எனும் பெயரில் முன்னர் இருந்த அமைப்பிலையே தூபி மீள கட்டப்படும் என மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். இதனைவிடுத்து, ‘அமைதி தூபி’ எனும் பெயரிலையோ...

வடக்கு தொண்டர் ஆசிரியர்களால் போராட்டம் முன்னெடுப்பு: தீர்வு கிடைக்கும்வரை போராடவுள்ளதாகத் தெரிவிப்பு!

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் தமக்கான நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் உள்ள மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தின் போது வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளரிடம் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் போராட்டக்காரர்கள் கையளித்துள்ளனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், “யுத்த காலத்திலும்...

இலங்கையில் 70 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை!!

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 826 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 64 ஆயிரத்து 983ஆக உயர்வடைந்துள்ளது. அவர்களில் 58ஆயிரத்து 75 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில், தொற்றுக்கு உள்ளான ஆறாயிரத்து 585...

இலங்கையில் 60 ஆயிரம் பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது!!

இலங்கையில் சுகாதார பிரிவினர், முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 60,000 பேருக்கு இதுவரை அஸ்ட்ரா ஜெனகா (AstraZeneca) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கொவிட் – 19 கட்டுப்பாட்டு மற்றும் ஆரம்ப வைத்திய சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் தடுப்பூசி பெற்றுக்கொண்ட எவருக்கும் குறிப்பிடத்தக்களவு ஒவ்வாமை ஏற்படவில்லை என இராஜாங்க அமைச்சர், விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி...

சுதந்திர தினத்தன்று அடையாள உண்ணாவிரதம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாகவும், கருப்புபட்டி அணிந்து 2ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதி வரையில் அடையாள உண்ணாவிரதத்திற்கு, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் குறித்த அழைப்பு இன்று விடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது...

மக்கள் எழுச்சிப் போராட்டத்துக்கு வடக்கில் ஒழுங்குகள் முன்னெடுப்பு!! மக்களை அணிதிரட்ட ஏற்பாடு!!

பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டத்துக்கு வடக்கு மாகாண மத அமைப்புக்கள், தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் தங்கள் ஆதரவை முழுமையாக வழங்குவதாக அறிவித்துள்ளனர். அத்துடன் வடக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொது அமைப்புகளையும் மக்களையும் ஒன்றிணைத்து மாபெரும் எழுச்சியை உருவாக்க மாகாண, மாவட்ட இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொத்துவிலில் ஆரம்பமாகும்...

வடக்கில் ஜனவரியில் 557 பேருக்கு கோரோனா தொற்று

வடமாகாணத்தில் ஜனவரி மாதத்தில் 557 பேர் கோரோனா வைரஸ் தொற்றுடையவர்களாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இவர்களில் 330 பேர் வவுனியா மாவட்டத்திலிருந்தும் 159 பேர் மன்னார் மாவட்டத்திலிருந்தும், 46 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்தும் 14 பேர் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்தும், 8 பேர் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்...

பிரதேச செயலாளரின் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் பதற்றம்

வேலணை பிரதேச செயலாளர் எஸ்.சோதிநாதனின் இடமாற்றத்துக்கும் புதிய செயலாளர் இன்று கடமைகளைப் பொறுப்பேற்பதற்கும் எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச செயலக வாயிலை மூடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார், ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்வோம் என எச்சரித்ததால் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. வேலணை பிரதேச செயலாளர் எஸ்.சோதிநாதனுக்கு, இன்று (திங்கட்கிழமை) நடைமுறைக்கு வரும்...

வாகனங்கள், வீடுகள், நிறுவனங்களில் தேசிய கொடியை காட்சிப்படுத்துமாறு அறிவிப்பு!!

73 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் மற்றும் வாகனங்களிலும் தேசிய கொடியை காட்சிப்படுத்துமாறு அரச பாதுகாப்பு உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக...

யாழில் தயார் நிலையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையம்

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவ தளபதியும் கொவிட் - 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மத நிகழ்வொன்றிற்காக யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வேளை பலாலி வாசவிலான் பகுதியில் புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தை மேற்பார்வை செய்தார். இந்த தனிமைப்படுத்தல் நிலையத்தில் 500 – 1000 பேர் வரையில்...

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்திலும் தொல்லியல் திணைக்களம்?

கிளிநொச்சி- உருத்திரபுரம், உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்திலும் தொல்லியல் அடையாளம் இருப்பதாக தொல்லியல் திணைக்களம் ஆராய்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி உருத்திரபுர சிவன் ஆலயத்திற்கு அருகில் தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாகக் கூறி அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் திணைக்களத்தினர் அண்மையில் குறிப்பிட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அப்பகுதிக்கு பௌத்த தேரர் ஒருவர் நண்பகல்...
Loading posts...

All posts loaded

No more posts