Ad Widget

வடக்கில் நுண்நிதிக் கடனில் சிக்கியுள்ளோருக்கு சலுகைக் கடன்!!

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் நுண்நிதிக் கடனில் சிக்கியுள்ள மக்களுக்கு இலகு கடன் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பல்வேறு நுண்நிதிக் கடன் முறைகள் மூலம் கடன்களைப் பெற்றுச் சிக்கியுள்ள குறைந்த வருமானமுடைய கிராமிய மக்களை குறித்த கடன்பிடியிலிருந்து விடுவிப்பதற்காக கூட்டுறவு கிராமிய வங்கி மற்றும் சிக்கன கடனுதவி கூட்டுறவுச் சங்கம் ஊடாக அறிமுகப்படுள்ள குறைந்த வட்டியுடன் இலகு கடன் வழங்கல் திட்டம் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் 6 மாவட்ட செயலகங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

வடக்கு மாகாணத்துக்கு 292 மில்லியன் ரூபாய்களும் வடமத்திய மாகாணத்துக்கு 250 மில்லியன் ரூபாய்களும் அடங்களாக மொத்தம் 542 மில்லியன் ரூபாய் நிதி சுழற்சிமுறை நிதியாகப் பயன்படுத்தப்படுகிறது.

கடன் பிடியில் சிக்கியுள்ள மக்களுக்கு சலுகை வழங்குவதற்கு குறித்த சுழற்சிமுறை நிதியைப் பயன்படுத்தி கடனுதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்தவும் அதன்கீழ் தற்போது வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகையை ஒரு லட்சம் ரூபாய் வரை அதிகரிப்பதற்கும் குறித்த கடன் திட்டத்துக்கான அதிகபட்ச வருடாந்த வட்டி வீதத்தை 9 சதவீதத்திலிருத்து 6 சதவீதத்துக்கு குறைப்பதற்கும் நிதி அமைச்சராக பிரதமர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Related Posts