Ad Widget

சுதந்திர தினத்தன்று அடையாள உண்ணாவிரதம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாகவும், கருப்புபட்டி அணிந்து 2ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதி வரையில் அடையாள உண்ணாவிரதத்திற்கு, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் குறித்த அழைப்பு இன்று விடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர்.

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல் ஆக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் கதிர்காமநாதன் கோகிலவாணி கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் 04.02.2021 அன்று இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஸ்டிக்கும் வகையில் கறுப்புபட்டி அணிந்து 2ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டமானது, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை 03.02.2021 திகதி மற்றும் 04.02.2021 திகதிகளில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.

குறித்த போராட்டத்திற்கு வர்த்தக சங்கங்கள், முச்சக்கரவண்டி சங்க உறுப்பினர்கள், பேருந்து உரிமையாளர் சங்க உறுப்பினர்கள், தமிழ் உறவுகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

Related Posts