
வடக்கு மாகாணத்தில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்காக 118 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுவருவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசி... Read more »

இரண்டு முகக்கவசங்களை அணிவதன் ஊடாக கொரோனா வைரஸிடம் இருந்து அதிக பாதுகாப்பை பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க தொற்று நோய் பிரிவினர் இதுகுறித்த தகவல்களினை வெளியிட்டுள்ளனர். சத்திரசிகிச்சை முகக்கவசத்துடன் துணியிலான முகக்கவசமொன்றை அணிவதன் ஊடாக வைரஸிடம் இருந்து 92.5 சதவீத பாதுகாப்பை பெற... Read more »

வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் சட்டத்துக்கு புறம்பாக மணல் அகழ்வில் ஈடுபட்டு மணல் ஏற்றியவாறு இரண்டு டிப்பர் வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட நிலையில் இராணுவத்தினரின் அழுத்தத்தால் விடுவிக்கப்பட்டுள்ளன என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. அத்துடன், மணல் கடத்தில் ஈடுபடுவோரை கைது செய்யும் நோக்குடன் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் அணிக்கு... Read more »

காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்என சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்துள்ளார். கொவிட் நோயாளிகளைக் கண்டறிவது... Read more »

குருந்தூரில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கமானது பல்லவர்காலத்திற்குரியது. அது தாரா லிங்கம் என அழைக்கப்படுகிறது. இவ்வாறுல சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார். அதுதொடர்பில் அவர் தெரிவித்ததாவது; மிக அண்மைய காலங்களில் தொல்பொருள் திணைக்களமானது பல ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த எமது... Read more »

வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 2 பேர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம், யாழ்ப்பாணம்... Read more »

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிப்பங்களிப்பில் பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தை மையப்படுத்திய பாரிய அபிவிருத்தித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அண்மையில் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், பருத்தித்துறை மீன்பிடி... Read more »

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்தை ஒத்த உருவம் பல்லவர் கால எட்டுப்பட்டை (எட்டு முகம்) தாரா லிங்கம் என்பதை வரலாற்று ஆய்வாளர் NKS.திருச்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக ருவிட்டரில் பதிவிட்டுள்ள... Read more »

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவிப்பை வரவேற்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார். பிரதமர் நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) வெளியிட்ட குறித்த அறிவிப்பை மேற்கோளிட்டு அலைனா டெப்லிட்ஸ் டுவிட்டரில் குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.... Read more »

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சை வழமைபோன்று நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் செயன்முறைப் பரீட்சையை இரத்து செய்யப்படும் என முன்பு எடுக்கப்பட்ட முடிவை இரத்து செய்வதாகவும்... Read more »