Ad Widget

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த கிராம அலுவலர்களை பொலிஸ் கடமையில் ஈடுபடுத்த பரிந்துரை

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இடம்பெறுகின்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு, கிராம அலுவலர்களை பொலிஸ் கடமை புரியும் அதிகாரிகளாக நியமனம் செய்யுமாறு அந்த மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணையையடுத்து வழங்கப்பட்ட தீர்ப்பிலேயே, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற...

ஜனாதிபதியே வாக்குறுதி தரவேண்டும்! நீதி அமைச்சரின் உறுதி, கோரிக்கையை ஏற்க அரசியல் கைதிகள் மறுப்பு!!

நாடுமுழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது போரட்டத்தைக் கைவிடவேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ நேற்று மகஸின் சிறைக்கைதிகள் முன்னிலையில் விடுத்த கோரிக்கையை கைதிகள் ஏற்க மறுத்துள்ளனர். தமது விடுதலை தொடர்பில் ஜனாதிபதியிடமிருந்து ஒரு பதில் கிடைக்கும்வரை உண்ணாவிரதத்தைக் கைவிடப்போவதில்லை என உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் அமைச்சர் விஜயதாஸ...
Ad Widget

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்- த.தே.ம.முன்னணி ஆதரவு

சிறீலங்கா அரசினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியான விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை(15-10-2015) யாழ் பஸ் நிலையம் முன்பாக காலை 10.30 மணி தொடக்கம் 11.30 வரை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்திற்கு அக் கட்சியின் வடமாகாண இணைப்பாளர்...

“தயவுசெய்து அம்மாவை விட்டுவிடுங்கள்” – நெஞ்சை உலுக்கிய மகளின் கதறல்

அம்மா, வருவார் வருவார் என ஒவ்வொரு நாளும் எதிர்பார்க்கின்றேன். அம்மா வருவதாக இல்லை. தயவு செய்து எனது அம்மாவை விட்டுவிடுங்கள் என வவுனியாவைச் சேர்ந்த யுவதியான சசிதரன் யதிந்தினி கதறியழுதமை அரசியல் கைதிகளது உறவுகளின் கதறல்களுக்கு மத்தியில் நெஞ்சை உலுக்கியது. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பு – கோட்டையில் உறவினர்கள், அரசியல் வாதிகள் சிவில்...

அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்கிறது! – 12 பேரின் உடல் நிலை மோசம்

தமது விடுதலையை வலியுறுத்தி நேற்று மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்திய தமிழ் அரசியல் கைதிகளில் 12 பேரின் உடல் நிலை மோசமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 12ஆம் திகதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். எனினும், இவர்களின் விடுதலை தொடர்பாக...

நீதிமன்றிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் கடத்தல்! யாழில் பெரும் பரபரப்பு!!!!

வழக்குக்காக நீதிமன்றம் சென்றுவிட்டு தாயாரோடு வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை வானில் வந்த இனந்தெரியாத குழு கடத்திச் சென்றுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுப் புதன்கிழமை மதியம் வடமராட்சி - வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து மேலும் அறிய வருவதாவது: இதில் இதே இடத்தைச் சேர்ந்த 32 வயதான பெண்...

அடையாள உண்ணாவிரத்திற்கு அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளையதினம் வெள்ளிக்கிழமை யாழ் முனியப்பர் கோவில் முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. மேற்படி போராட்த்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. காலம்: 16.10.2015 வெள்ளிக்கிழமை நேரம்: காலை 7.00 மணி இடம்: முனியப்பர் கோவில் முன்றல் (யாழ் பொது நூலகத்திற்கு அருகாமை) தமிழ்த்...

உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அரசியல் கைதிகளின் கண்ணீர்க் கதறல்!

நேசத்தமிழ் உறவுகளே! உங்களின் விடிவிற்காய் உதிரம் சிந்தி ஊருக்காய் உழைத்த நாம் இன்று உறவுகளை பிரிந்து உற்றவரை பிரிந்து பூட்டிய சிறைகளுக்குள் பட்டினி போராட்டம் நடத்துகிறோம். உங்கள் பிள்ளைகளாகிய எங்கள் அவல குரல் கேட்கிறதா சொல்லுங்கள். ஒரு மனித வாழ்க்கையின் சத்தான அரைவாசி காலத்தை சிறையில் தொலைத்து ஏக்கங்கள், தாக்கங்கள், நிராகரிப்புகள், நிராசைகள், அவமானங்கள், அருவப்புக்கள்...

எம்.பிக்கள் படுகொலை பற்றி ஆராய நாடாளுமன்ற விசாரணைக்குழு! – பிரதமர் ரணில் அதிரடி நடவடிக்கை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற விசாரணைக்குழுவொன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் விசேட வரப்பிரசாதங்கள் சட்டமூலத்தின்கீழ் இந்தக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எம்.பிக்களின் படுகொலைகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களை நாடாளுமன்ற விசாரணைக்குழு முன்னிலையில் அழைத்து தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், பொலிஸாரின் விசாரணைகளை மேற்பார்வையிடவும்...

ரௌடித்தனத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நீதிபதி இளஞ்செழியனின் எச்சரிக்கை!

மாவட்ட நீதிபதி அல்லது அரச அதிபர் தளத்தில் நின்று சட்டத்தைப் பயன்படுத்தி வன்செயலில் ஈடுபடும் கும்பலைக் கலைப்பதற்கு இடமளிக்க வேண்டாம் என ரௌடித்தனத்தில் ஈடுபடும் இளைஞர்களுக்கு நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை வன்முறைகளில் அல்லது வன்செயல்களில் ஈடுபடுகின்ற குழுவினரை, சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று பொலிஸார் அல்லது படையினரின் உதவிகொண்டு கலைப்பதற்கு சட்டத்தில் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.இத்தகைய அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு...

புலிகளின் வரைபடங்களுடன் கொழும்பு வந்தார் கருணா

கிழக்கில் இருந்து தப்பி வந்த போது, கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரு பயணப் பெட்டி நிறைய விடுதலைப் புலிகளின் முகாம்கள் அமைந்துள்ள வரைபடங்களை எடுத்து வந்தார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மெளலானா தெரிவித்துள்ளார். 2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளிடம் இருந்து கருணாவை காப் பாற்றி, கொழும்புக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருந்த அலிசாகிர்...

வெள்ளைக்கொடியுடன் சென்று குடியேறுவோம்

எம்மை விரைவில் மீள்குடியேற்றம் செய்யாவிடின். ஒரு கையில் எமது காணிக்கான உறுதியுடனும், மறுகையில் வெள்ளைக் கொடியையும் தாங்கி உயர்பாதுகாப்பு வலய வேலிகளைத் தாண்டிய எமது சொந்த நிலங்களுக்குச் சென்று குடியமருவோம் என வலிகாமம் வடக்கில் இருந்து நலன்புரி நிலையத்தில் வசிக்கும் முத்தையா சிவானந்தன் தெரிவித்தார். தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள்...

புலிகள் சர்வதேச சமூகம் மூலம் சரணடைய முயன்றனர் என்பதை ஏற்றுக்கொள்கிறார் கோத்தபாய ராஜபக்ஸ

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சர்வதேச சமூகத்தின் ஊடாக விடுதலைப் புலிகள் சரணடைய எத்தனித்தனர் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எனினும், சரணடைதல் தொடர்பில் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் எவ்வித நேரடி இணக்கப்பாடுகளும் எட்டப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகள் சரணடைந்த போது,...

ஐந்து தசாப்த கால பிரச்சினைக்கு தீர்வுகாண கூட்டமைப்பு உட்பட ஏனைய கட்சிகளுடன் பேசுகிறோம்!

இலங்கையில் ஐந்து தசாப்த காலமாக நீடிக்கும் இன, மொழிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட ஏனைய அரசியல் கட்சிகளுடன் ஏற்கனவே நாங்கள் பேச்சுக்களை ஆரம்பித்து விட்டோம். - இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து தசாப்த காலமாக இலங்கையில் மொழி மற்றும் இனப்பிரச்சினை முக்கிய விவகாரங்களாக இருந்ததுடன் கடந்த...

வடக்கில் இன்று 576 ஏக்கர் காணிகள் விடுவிப்பு

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இதுவரை காலமும் இராணுவத்தின் கட்டுபாட்டில் இருந்த 576 ஏக்கர் பரப்பளவு கொண்ட மக்களின் காணிகள் இன்று திங்கள்கிழமை ஜனாதிபதியினால் உரியவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் இடம்பெற்ற உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் 2016-2018 இன் ஆரம்ப நிகழ்வின் போதே, மக்களுக்கு காணிகளும் வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் பரவிபாஞ்சான் உள்ளிட்ட...

போராட்டத்தைக் கைவிட்ட வலி. வடக்கு முகாம் மக்கள் !! : அரசியல் அழுத்தம் காரணமா??

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தம்மை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த வலியுறுத்தி இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்து இருந்தனர். ஆனால், குறித்த போராட்டம் கடுமையான அரசியல் அழுத்தம் காரணமாக கைவிடப்பட்டு உள்ளதாக தெரிய வருகின்றது. இன்று காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை சுன்னாகம் சபாபதிப்பிள்ளை மற்றும்,...

காங்கேசன்துறை கடற்பரப்பில் மேலும் 4 கி.மீற்றரை ஆக்கிரமித்தது கடற்படை! கடற்றொழிலாளர்கள் பாதிப்பு

காங்கேசன்துறை துறைமுகத்தின் பாதுகாப்புக்கு எனக் கூறி மேலும் 4 கிலோமீற்றர் நீளமான கடற்பரப்பை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் 650 இற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.வலி. வடக்குப் பிரதேசத்தில் நிலப்பரப்பை உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். இந்நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்தின் பாதுகாப்புக்கு எனக்கூறி சுமார் ஒன்றரைக் கிலோமீற்றர் நீளமான பகுதியை ஆக்கிரமித்திருந்தனர்....

உண்மையான நீதியும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்தும் விதத்தில், சமர்ப்பிக்கப்படும் பிரேரணையில் திருத்தங்களை செய்ய வேண்டுகோள்

இலங்கை தொடர்பான உத்தேச வரைவுத் தீர்மானம் தொடர்பாக தமிழ் அரசியற் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் தொழிற் சங்கங்கள் கூட்டறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளன. அறிக்கை வருமாறு . ‘இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் மனித உரிமைகளையும் மேம்படுத்தல்’ எனும் தலைப்பில் செப்ரெம்பர் 30ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கும்...

உள்ளக விசாரணைகளுக்காக 3 விசேட குழுக்கள்! சர்வதேச விசாரணை இல்லவே இல்லை!!

மூன்று விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளகப் பொறிமுறையுடனான விசாரணை நடத்தப்படும். எனவே சர்வதேச விசாரணை என்று சிலர் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். இதில் எவ்வித உண்மைகளும் இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பரணகம ஆணைக்குழுவை அமைத்து சர்வதேச சட்டத்தரணிகளின் உதவியைப் பெற்றவர் மஹிந்த ராஜபக்‌ஷவே ஆவார் என்றும் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார். ஊடகத்துறை சார்ந்த...

குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை !! பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நீதிமன்றில் !!

யாழ் மாவட்டத்தில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டு அந்தந்த நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டிருப்பதாக, யாழ் மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரும், மாவட்டத்தின் பல்வேறு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொறுப்பதிகாரிகளும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் முன்னிலையில் ஆஜராகி தெரிவித்திருக்கின்றனர். சுன்னாகத்தில் கடையொன்றுக்குள் புகுந்த...
Loading posts...

All posts loaded

No more posts