புத்தூர் மக்கள் போராட்டத்தை முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்

புத்தூர் மேற்கு பகுதியில் உள்ள இந்து மயானத்தை அகற்றக் கோரி அப்பகுதியில் முன்னெடுத்து வரும் சாத்வீக போராட்டத்துக்கு, வட மாகாண முதலமைச்சர் நேற்று (17) விஜயமொன்றினை மேற்கொண்டார். அத்துடன் அப்பகுதியில் அமைந்துள்ள கிந்துசிட்டி மயானத்தை பார்வையிட்ட பின் பொதுமக்கள் மத்தியில் தனது நிலைப்பாடு தொடர்பில்... Read more »

விடுதலைப்புலிகளின் காலத்தில் சிறந்த நிர்வாகக் கட்டமைப்புக்கள்: அங்கஜன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலப்பகுதியில் நல்ல நிர்வாகக் கட்டமைப்புக்கள் காணப்பட்டன என்று நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணம் நாவலர் கலாச்சாரமண்டபத்தில் சர்வதேச தொழிலாளர் சங்கமும் ஸ்ரீலங்கா சுதந்திர தொளிலாளர் சங்கமும் இணைந்து நடாத்திய விழிப்புணர்வுக்... Read more »

சம்பந்தன் தொடந்தும் இரட்டைவேடம் போடமுடியாது! : சிவசக்தி ஆனந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்ச்சியாக இரட்டைவேடம் போடமுடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார். முல்லைத்தீவு மாவட்டம், தண்ணீரூற்றில் சமூகசேவையாளர்கள் 63பேரைக் கௌரவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு... Read more »

2020 இல் அரச ஊழியர்களுக்கான சம்பளம் பன்மடங்காக அதிகரிக்கும்!

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வின் பிரகாரம் 2020 ஆம் ஆண்டளவில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் பன்மடங்காக அதிகரிக்கும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இதன்படி விசேட வைத்திய நிபுணர்களின் அடிப்படை சம்பளம் 1 இலட்சது 20 ஆயிரம் ரூபாவாகவும் சாதாரண... Read more »

சிநேகம் பேசி ஏமாற்றினார் மஹிந்த ; முதலமைச்சர் சி.வி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தன்னுடன் நட்பு பாராட்டுவது போலவும் அன்புடன் பேசுவது போலவும் வெளிப்படுத்தி, தான் விடுத்த கோரிக்கைகளைக் கணக்கிலெடுக்காமல் உதாசீனம் செய்தார் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளராக குசல் பெரேராவின், “மஹிந்த – சிங்கள... Read more »

வடக்கையும் தெற்கையும் இணைப்பதற்கு புதிய வழி: இராதாகிருஷ்ணன்

வடக்கையும் தெற்கையும் விளையாட்டுத்துறையின் ஊடாக இணைக்க முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “வடக்கு, தெற்கு... Read more »

133 மில்லியன் வரிப்பணத்தை வட மாகாணசபைக்கு விடுவித்துக் கொடுங்கள் :நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி

இலங்கையில் முத்திரைத் தீர்வைக் கட்டளைச் சட்டம், முதல் முதலில் 1909ஆம் ஆண்டில் சட்டமாக்கப்பட்டது. அதன் பிறகு பாராளுமன்றம் 1982ஆம் ஆண்டின் முத்திரைத் தீர்வைச் சட்டத்தை இயற்றியது. இச்சட்டத்தின் மூலம் சாதனங்களுக்கும் (Instruments), ஆவணங்களுக்கும் (Documents) அவற்றின் தொடர்பாகவும் தீர்வைகள் அறவிடப்பட்டன. அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின்... Read more »

களுத்துறை சிறை தாக்குதலில் நான் ஒரு கண்பார்வையை இழந்தேன் : நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!

எனது தன் நம்பிக்கையும், நான் தப்பிப் பிழைக்க வேண்டும் என்று எமது மக்கள் எனக்காக செய்த பிராத்தனையும், வைத்தியவர்களின் அக்கறை மிகுந்த வைத்தியமும் என்னைக் காப்பாற்றியது. என்னை நாகொட வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்த சிங்கள மொழி பேசுகின்ற நிபுணத்துவ... Read more »

உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வு! : சம்பந்தன்

”உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வைக் காண்பதற்கே முயன்று கொண்டிருக்கின்றோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம்... Read more »

தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் : எம்.ஏ.சுமந்திரன்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள், தமது உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தாத ஒரு போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் வி.தர்மலிங்கத்தின் 32ஆவது ஆண்டு நினைவு தினம், தாவடியில் அமைந்துள்ள... Read more »

வேற்றுமை பாராட்டினால், ஊரின் ஒற்றுமை சீர்குலையும் : முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்

பொலிகண்டி ஒற்றுமை விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டி, பொலிகண்டி ஒற்றுமை விளையாட்டுக் கழக கடற்கரை மைதானத்தில் நேற்று (03) மாலை நடைபெற்றது. இதன்போதே வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், “விளையாட்டுப் போட்டிகள், அதில் பங்குபற்றுபவர்களின்... Read more »

பெண்களின் நிலையை உயர்த்த அஞ்சி நடுங்க வேண்டியதில்லை : அனந்தி

வடக்கின் யுத்தத்தினால் கணவர்களை இழந்த பெண்களின் வாழ்வாதார உதவிகள் என்பது தற்போதைய அரசிலும் கட்டியேழுப்ப முடியாத நிலையில் இருந்து கொண்டு இருக்கின்றது. அதற்கான நடவடிக்கையினை மத்திய அரசின் மகளிர் அமைச்சு எடுக்க முன்வர வேண்டும் என்று மகளிர் விவகாரம், புனர்வாழ்வு அளித்தல் சமூக சேவைகள்,... Read more »

சமுர்த்தி திட்டத்தை மேலும் பலப்படுத்துவோம்: ஜனாதிபதி

சமுர்த்தி திட்டத்தை மிகவும் பலமிக்கதாக்கி முன்னெடுத்துச் செல்வதற்கன பொறுப்பை குறையின்றி நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பு தாமரை தடாக கலையரங்கில் நடைபெற்ற சமுர்த்தி சமூக பலம் – 2017 தேசிய மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். பொருளாதார ரீதியில்... Read more »

அரசாங்க சேவையில் உள்ளவர்கள் அர்ப்பணிப்புடன் சேவைகளை வழங்க முன்வரவேண்டும் : ஜனாதிபதி

அரசாங்க சேவையில் உள்ளவர்கள் மக்களின் நன்மதிப்பை பெறும்வகையில் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் தமது சேவைகளை வழங்க முன்வரவேண்டுமென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அரசாங்க சேவையில் ஏதேனும் ஒரு துறை மக்களின் எதிர்ப்புக்கும் வெறுப்புக்கும் உள்ளானால் அது தொடர்பில் அத்துறைகளின் தலைவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்... Read more »

அமைச்சுப் பதவி பறிக்கப்படும் என்ற அச்சம் எனக்கும் உள்ளது: அனந்தி சசிதரன்

அமைச்சராக பொறுப்பெடுத்துள்ள நிலையில் பல்வேறு சவால்களிற்கு முகம் கொடுத்து வருவதுடன், வழங்கப்பட்ட அமைச்சுப் பதவியும் எப்போது பறிக்கப்படும் என்ற அச்சமும் உள்ளதாக வட மாகாண மகளிர் விவகாரம், சமூக சேவைகள், புனர்வாழ்வு மற்றும் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று (செவ்வாய்க்கிழமை)... Read more »

தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம் : அமைச்சர் விஜயகலா

தமிழீழ விடுதலைப்புலிகளாக இருந்தால் அவர்களை இனம் கண்டு நீங்கள் படுகொலை செய்யுங்கள் நாங்கள் கேட்க வரமாட்டோம். ஆனால் எங்களுடைய அப்பாவி பொது மக்களை படுகொலை செய்திருக்கின்றீர்கள் என சிறுவா் பெண்கள் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி கரைச்சி... Read more »

கையடக்க தொலைபேசி பாவனை அரைப் பைத்தியமாக்கியுள்ளது : சி.வி.விக்னேஸ்வரன்.

கையடக்க தொலைபேசி பாவனை மனிதனை அரைப் பைத்தியங்களாக வீதியில் உலாவரும் நிலைமைக்கு தள்ளியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். புத்தகத்திருவிழா நேற்று மாலை மாநகரசபை சுகாதாரப் பணிமனை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும்... Read more »

கன்னி உரையில் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார் வடமாகாணசபை உறுப்பினர் ஜெயசேகரம்!

அறிவுரீதியாகவும், இராஜதந்திர ரீதியிலும் தமிழ் மக்களுக்கான தீர்வு நோக்கி எமது தலைவர்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அதிலே நாம் வெற்றியடைவோம். ஆனால், அபவிருத்தியை நோக்கிப் பயணிப்பதையும், தன்னிறைவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல் போன்ற இரண்டும் வடமாகாணசபையினால் சாதிக்கமுடியும். ஆனால் நாம் அதனைச் சாதிக்கத் தவறிவிட்டோம் என வடமாகாண சபை... Read more »

நாட்டில் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது : யாழில் மங்கள

அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைக்கு உட்படுத்தியுள்ளமை நாட்டின் ஜனநாயகத்தை மேலும் உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கை சுங்கத் திணைக்களத்தின் செயற்பாடுகள், மூன்று தசாப்தங்களின் பின்னர் நேற்று (வியாழக்கிழமை) காங்கேசன்துறையில் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த... Read more »

வடக்கு மாகாணசபையில் நிலவும் குழப்பங்கள் அரசியல் தீர்வில் இருந்து தமிழ்மக்களைத் திசைதிருப்பும் சதி : பொ.ஐங்கரநேசன் குற்றச்சாட்டு

கடந்த சில மாதங்களாக அரசியல்வாதிகளினதும் ஊடகங்களினதும் பொதுமக்களினதும் பேசு பொருளாக வடக்கு மாகாணசபையே இருந்து வருகிறது. அமைச்சர்களின் ஊழல், அமைச்சரவை மாற்றம், முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்று வடக்கு மாகாணசபை தொடர்பாகவே எல்லா இடங்களிலும் பேசப்பட்டு வருகிறது. இந்தக் குழப்பங்கள் அரசியல் தீர்வில்... Read more »