Ad Widget

சிறீலங்காவில் இடம்பெற்ற குற்றங்களை விசாரிக்க சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதி மன்றிற்குப் பரிந்துரை செய்ய வேண்டும் : ஐ.நாவில் கஜேந்திரகுமார்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது கூட்டத்தொடரின் பொது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை.

இந்த அறிக்கையானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து தயாரிக்கப்பட்டது.

இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 ஒக்டோபர் 2015ல் நிறைவேற்றப்பட்டபோது, குறித்த தீர்மானத்திற்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளுக்குமிடையில், பாரிய கவலைக்குரிய வேறுபாடுகள் காணப்படுவதாக நாம் எச்சரித்தோம். இதில், முக்கிய வேறுபாடானது, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியக விசாரனை அறிக்கையானது கலப்பு நீதிமன்றத்தை அமைக்கக் விசேடமாகக் கோரியது. ஆனால், தீர்மானம் 30/1 தனித்து சில வெளிநாட்டு பங்களிப்பை தெளிவற்ற முறையில் கோரியது. இது, நடைமுறை நோக்கில் ஒரு உள்நாட்டு பொறுப்புக்கூறும் பொறிமுறையையே.

கலப்பு பொறிமுறையொன்றின் எத்தகைய அம்சங்களும் நிறுவப்படுவதை முற்றுமுழுதாக நிராகரிக்கும் நிலைப்பாட்டோடு, மேற்குறித்த வேறுபாட்டை சிறீலங்கா அரசாங்கம் அன்றிலிருந்து எடுத்துக்கூறி வருகிறது. இத்தகைய பின்னணியில், குறித்த தீர்மானத்தின் எத்தகைய முக்கியமான பகுதிகளை சிறீலங்கா அரசாங்கம் அமுல்படுத்த நிராகரித்ததோ, அதனை அமுல்படுத்துவதற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை இந்தப் பேரவை முப்பத்திநான்காவது கூட்டத்தொடரின் போது வழங்கியது.

இத்தகைய பின்னணியில், போரினால் பெருவாரியாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக் கொள்ள சிறீலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பரிந்துரை செய்தல் அல்லது தமிழ்மக்களுக்கான நீதியின் முக்கியமான அடிப்படைக் கூறுகளில் கவனம் செலுத்துவற்கான தற்காலிக சர்வதேச தீர்ப்பாயத்தை உருவாக்குதல் தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் சபையும் மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் தற்போதைய ஆணையாளரும் அவருக்கு முன் பதவி வகித்த ஆணையாளரைப்போன்று, பொறுப்புக்கூறல் தொடர்பான வெளிநாட்டுப் பொறிமுறையொன்று உருவாக்குவது தொடர்பான அழைப்பினை வெளிப்படுத்த வேண்டும்.

Related Posts