நில அபகரிப்பிற்கு எதிரான மே 29 ம் திகதி போராட்டத்திற்கு அனைத்து தமிழ் கட்சிகளும் தங்கள் ஆதரவை வழங்கவேண்டும் – சுமந்திரன்

ஆறாயிரம் ஏக்கர் தமிழர் நிலத்தினை அபகரிக்கும் அரசாஙகத்தின் முயற்சிக்கு எதிராக மே 29 ம் திகதி இடம்பெறவுள்ள பாரிய மக்கள் போராட்டத்திற்கு அனைத்து தமிழ் கட்சிகளும் தங்கள் ஆதரவை வழங்கவேண்டும் என இலங்கை தமிழரசுகட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரிந்துவிட்டது உடைந்துவிட்டது என சொல்கின்ற...

3000 நாட்களை எட்டியது காணாமல்போன உறவுகளின் போராட்டம்!

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் (7) மூவாயிரம் நாட்களை எட்டியுள்ள நிலையில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இறுதிப்போரின்போதும் அதற்கு முன்னரும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் உண்மைநிலையினை அறியத்தருமாறு வலியுறுத்தி, தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா அஞ்சல் அலுவலகத்துக்கு அருகில் சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டம்...
Ad Widget

ஜே.வி.பி யின் பசப்பு வார்த்தைகளுக்கு இனியும் தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்!!

ஜே.வி.பியினுடைய பசப்பு வார்த்தைகளை நம்பி ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் அவர்களுக்கு வாக்களித்தமை தவறு என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள். இந்த வெற்றி எங்களை நாங்களே ஆள்வதற்காக மக்கள் எமக்கு தந்த ஆணையாக பார்க்கின்றேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய பேரவையின் வல்வெட்டித்துறை நகரசபை முதன்மை வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வல்வெட்டித்துறை நகரசபையின்...

யாழ் . தேர்தல் முடிவுகள் ஒரே பார்வையில்!!

யாழ்ப்பாணம் மாநகர சபை தமிழ் தேசிய பேரவை - 12 ஆசனங்கள் தமிழரசு கட்சி - 13 ஆசனங்கள்.தேசிய மக்கள் சக்தி - 10 ஆசனங்கள்.ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 04 ஆசனங்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சி - 04 ஆசனங்கள். ஐக்கிய தேசிய கட்சி - 01 ஆசனம் ஐக்கிய மக்கள் சக்தி...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பணிகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்களைத் தயார்படுத்தும் பணிகள் இன்று (05) காலை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நாளை (06) காலை 7 மணிக்குத் ஆரம்பமாகி மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியாக 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெற உள்ளது. 339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நடைபெறும்...

கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (04) காலை 6 மணிமுதல் இன்று (05) காலை 6 மணி வரையான காலப்பகுதியிலேயே மேற்படி வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்தோடு, குறித்த காலப்பகுதியில் கட்சிகளின் ஆதரவாளர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை,...

பருத்தித்துறை கடற்கரையில் கரையொதுங்கிய பெண்ணின் சடலம்

பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலம் நேற்று (04) பிற்பகல் கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு சடலமாக கரை ஒதுங்கியவர் தும்பளை கிழக்கை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணொருவர் என பொலிஸார் தெரிவித்தனர். கடற்கரையில் சடலம் காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்....

வடக்கு காணி அபகரிப்பு வர்த்தமானி குறித்து சுமந்திரன் கருத்து!

வடக்கில் சுமார் ஐந்தாயிரத்து 941 ஏக்கர் காணிகளை அபகரிக்கும் நோக்கில் அரசாங்கம் வர்த்தமானி ஒன்றை வெளியிட்டமை தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஜனாதியிடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார். குறித்த வர்தமானிக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்ட ஆலோசனைகள் தொடர்பாக எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள்...

உள்ளூராட்சி தேர்தல்; ஊழியர்களுக்கான விடுறை தொடர்பில் அறிவிப்பு!

2025 உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டாய விடுமுறை தொடர்பில் தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தலுக்கான விடுமுறை சிறப்பு விடுப்பாக வழங்கப்பட வேண்டும், மேலும் அது அவர்களின் தனிப்பட்ட விடுப்பைப் பாதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. தனியார் துறை ஊழியர்களுக்கு 40 கிலோமீட்டர்...

யாழ்.இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த காணிகள் விடுவிப்பு!

யாழ்ப்பாணத்தில் இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்து ஒரு தொகுதி காணிகள் நேற்று வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மானத ஜெகம்பத் யாழ் மாவட்ட செயலர் ம.பிரதீபனிடம் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள், செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன. வசாவிளான் பகுதியில் 20 ஏக்கர் காணிகளும் மாங்கொல்லை பகுதியில் 15...

நாகை – காங்கேசன்துறை இடையிலான போக்குவரத்துக்கு கப்பல் பயணக்கட்டணம் குறைப்பு!

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான பயண கட்டணம் கோடைகால விடுமுறையை முன்னிட்டு குறைக்கப்பட்டுள்ளதாக பயணிகள் கப்பல் நிறுவன தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்தார். இதன்படி, இதுவரையில் இருவழி பயணக் கட்டணமாக 8,500 இந்திய ரூபாய் அறவிடப்பட்ட நிலையில், குறித்த கட்டணம் தற்போது 8,000 இந்திய ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகளை...

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் இறையடி சேர்ந்தார்

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 01ஆம் திகதி வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார்.

வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்களுக்கான விசேட அறிவித்தல்

உத்தியோகபூர் வாக்காளர் அட்டைகள் தபால் மூலம் கிடைக்காத வாக்காளர்களுக்கு தபால் திணைக்களம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் அஞ்சல் மூலம் இதுவரை கிடைக்கவில்லை என்றால், தமக்கு கடிதங்கள் கிடைக்கப்பெறும் தபால் நிலையத்திற்குச் சென்று அடையாளத்தை உறுதி செய்வதன் மூலம் அதைப் பெறலாம் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறும் மே...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 5ஆம், 6ஆம், 7ஆம் திகதிகளில் அனைத்துப் பல்கலைக்கழகங்கள், வளாகங்கள் மற்றும் நிறுவகங்களில் பயிலும் இளமாணி மற்றும் பட்டமேற்க் கல்வி மாணவர்களுக்கு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு விடுமுறை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள்...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அறிவிப்பு!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025 மே 05 மற்றும் 06 ஆகிய திகதிகளில் இரண்டு நாட்களுக்கு திணைக்களம் மூடப்படும் என்று DMT தெரிவித்துள்ளது. 2025 உள்ளூராட்சி தேர்தல் மே 06 அன்று நடைபெற உள்ளது.

உள்ளூராட்சி தேர்தல்; 33 வேட்பாளர்கள் கைது!

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக மொத்தம் 33 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (30) காலை வரை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக இது தொடர்பில் விடுத்த அறிக்கையில் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் 349 கட்சி ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று வரை...

காங்கேசன்துறை – பலாலி இடையிலான அரச பேருந்து சேவை ஆரம்பம்

35 வருடங்களின் பின்னராக காங்கேசன்துறை பலாலி இடையிலான அரச பேருந்து சேவை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யுத்தம் காரணமாக கடந்த 35 வருடங்களாக உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்ட குறித்த பகுதியூடாக பொதுமக்கள் நடமாட முடியாத சூழல் காணப்பட்டது. இதன் காரணமாக பயணிகள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வரை மாத்திரமே பயணம் செய்து வந்தனர். கடந்த 10ஆம்...

யாழில் வீடொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வாள்கள், கஞ்சாவுடன் மூவர் கைது !

யாழ்ப்பாணத்தில் நான்கு வாள்கள் மற்றும் கஞ்சா போதைப்பொருள்களுடன் மூவர் திங்கட்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளனர். மாதகல் பகுதியில் போதைப்பொருள் வியாபார கும்பல் ஒன்று , கூரிய ஆயுதங்களுடன் வீடொன்றில் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் , குறித்த வீட்டினை இளவாலை பொலிஸார் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர். அதன் போது , மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில்...

பிரதமர் ஹரிணி தேர்தல் சட்டத்தை மீறியுள்ளார் – சுமந்திரன் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணத்தில் அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு ஆலய வளாகம் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய அவர், குறித்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு...

மன்னாரில் சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு; மக்கள் சந்திப்பை முன்னெடுத்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் நினைவேந்தல் நிகழ்வு திங்கட்கிழமை (28) மாலை மன்னாரில் இடம் பெற்றது. அதனைத்தொடர்ந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த மக்கள் சந்திப்பும் குறித்த நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
Loading posts...

All posts loaded

No more posts