நாகை – காங்கேசன்துறை இடையிலான போக்குவரத்துக்கு கப்பல் பயணக்கட்டணம் குறைப்பு!

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான பயண கட்டணம் கோடைகால விடுமுறையை முன்னிட்டு குறைக்கப்பட்டுள்ளதாக பயணிகள் கப்பல் நிறுவன தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.

இதன்படி, இதுவரையில் இருவழி பயணக் கட்டணமாக 8,500 இந்திய ரூபாய் அறவிடப்பட்ட நிலையில், குறித்த கட்டணம் தற்போது 8,000 இந்திய ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுற்றுலாப்பயணிகளை கவரும் நோக்கில் பயணக் கட்டணத்தை குறைத்து அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பயணிகள் கப்பல் நிறுவன தலைவர் சுந்தர்ராஜன் நாகபட்டினத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி முதல் நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கப்பல் போக்குவரத்து இயக்கப்பட்டு வாராந்தம் 6 நாட்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts