2025 உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கட்டாய விடுமுறை தொடர்பில் தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலுக்கான விடுமுறை சிறப்பு விடுப்பாக வழங்கப்பட வேண்டும், மேலும் அது அவர்களின் தனிப்பட்ட விடுப்பைப் பாதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கு 40 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்வதற்கு ½ நாள் விடுப்பும், 40-100 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்வதற்கு ஒரு நாள் விடுப்பும் வழங்கப்பட உள்ளது.
100-150 கிலோ மீட்டருக்கு இடையிலான பயணத்திற்கு ஒன்றரை நாட்கள் விடுப்பும், 200 கிலோ மீட்டருக்கு மேல் பயணத்திற்கு இரண்டு நாட்களும் விடுப்பு வழங்கப்படும்.
அதேநேரம், ஒரு சில வாக்காளர்கள் வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சென்று திரும்பி வருவதற்கு 3 நாட்கள் தேவைப்படக்கூடிய கணிசமான அளவு இடங்களும் இருக்கின்றமையால் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு மூன்று நாட்கள் விடுமுறையும் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் 2025 மே 06 அன்று நடைபெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.