ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் இன்று முதல் இடைநிறுத்தம்!!

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான சேவைகளை வழங்குவது இன்று (21) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொழிலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று முதல் 23 ஆம் திகதி வரை சேவைகள் வழங்கப்படாது என்று அந்தத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. தொழிலாளர் திணைக்களத்தின் ஊடாக சேவை வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி கணினி தரவுத்தள அமைப்பில்...

காணி அபகரிப்பையும், பௌத்த மயமாக்கலையும் தடுப்பதற்கு தலையீடு செய்யுங்கள்!! தமிழ்த்தேசிய பேரவை வேண்டுகோள்!!

வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், குருந்தூர் மலை விவகாரம், தையிட்டியில் விகாரை நிர்மாணம் என்பன உள்ளடங்கலாக வட, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் காணி சுவீகரிப்பு முயற்சிகள் தொடர்பில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சுவிட்ஸர்லாந்து நாட்டு இராஜதந்திரகளிடம் எடுத்துரைத்திருக்கும் தமிழ்த்தேசிய பேரவையின் பிரதிநிதிகள், காணி அபகரிப்பையும், தொல்பொருள் அடையாளங்கள் பௌத்தமயப்படுத்தப்படுவதையும் தடுப்பதற்கு சர்வதேச சமூகம்...
Ad Widget

அரசாங்கம் அறிவித்துள்ள தற்காலிக இடைநிறுத்தம் தீர்வைப் பெற்றுத்தராது- சுமந்திரன்

வட மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துவது எந்தவொரு தரப்பினருக்கும் நிரந்தர தீர்வைப் பெற்றுத்தராது எனச் சுட்டிக்காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், எனவே அவ்வர்த்தமானி அறிவித்தல் முழுமையாக வாபஸ் பெறப்படவேண்டும் என மீளவலியுறுத்தியுள்ளார். காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4...

வங்கிக் கணக்குகளைத் ஆரம்பிக்கவும் TIN இலக்கம் கட்டாயம்!!

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2025.04.01 அன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் வரி வீதம் 5% சதவீதம் தொடக்கம் 10% சதவீதம் வரை அதிகரிப்பதற்கான சட்டரீதியான ஏற்பாடுகள் 2025 ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....

நல்லூருக்கு அருகில் உள்ள அசைவ உணவகத்தை அகற்ற கோரி போராட்டம்!!

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி சைவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நல்லூரான் உற்சவ வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து சைவ சமயிகளும் அணிதிரண்டு எதிரப்பை பதிவு செய்யுமாறு அகில இலங்கை...

வடக்கு மாகாண ஆளுனருக்கும் வடக்கு கடற்படைத் தளபதிக்குமிடையே சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்று் வடக்கு கடற்படைத் தளபதி ரியல் அட்மிரல் எஸ்.ஜே.குமாரவுக்கும் இடையிலான சந்திப்பு திங்கட்கிழமை (19) ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின்போது யாழ். மாவட்டத்திலுள்ள கடல் கடந்த தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள் தொடர்பிலும், வடக்குக்கான போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

யாழில் தமிழரசு, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துரையாடல்!

வடக்கு கிழக்கில் உள்ளூராட்சிசபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இன்று (16) இலங்கை தமிழ் அரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றுக்கிடையில் இரண்டு சந்திப்புக்கள் யாழ்ப்பாணத்தில் நடந்தன. முதலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குமிடையிலான கலந்துரையாடல் நடந்தது. கந்தரோடையிலுள்ள த.சித்தார்த்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு...

யாழில் ஆசிரியர் மாணவர்களை கதிரையால் தாக்கியதில் ஐந்து மாணவர்கள் காயம்!!

யாழ் நகர மத்தியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கதிரையால் தாக்கியதில் ஐந்து மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பாடசாலையில் தரம் 08 கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலை நேரம் வகுப்பறையில் அமைதியின்றி காணப்பட்டுள்ளனர். அதனை அடுத்து அங்கு வந்த ஆசிரியர் வகுப்பறையில் இருந்த மாணவர்களின் கதிரையை தூக்கி மாணவர்கள் மீது மூர்க்கத்தனமாக...

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் நாற்பதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

நெடுந்தீவு குமுதினி படுகொலையின் நாற்பதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடந்தது. மாவிலி துறையில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவேந்தல் நினைவு தூவியில் குமுதினி படுகொலை நினைவேந்தல் குழுவின் தலைவர் விஸ்வலிங்கம் ருத்திரன் தலைமையில் நேற்று (15) காலை நடைபெற்றது. நினைவு சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் வணக்கம் அக வணக்கம் செலுத்தப்பட்டது 1985...

செம்மணியில் அகழ்வுப்பணிகள் ஆரம்பம்!

அரியாலை – செம்மணி சிந்துபாத்தி மாயானத்தில், மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்ட பகுதிகளில் நேற்றைய தினம் முதல் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித எச்சங்கள் அவதானிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி சம்பவ இடத்தில்...

வல்வெட்டித்துறையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் கைது!

ல்வெட்டித்துறை கடல் பகுதியில் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முயன்ற ஆறு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் மற்றும் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரண்டு நபர்கள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இரண்டு நபர்களும், சம்பந்தப்பட்ட குழுவை அழைத்து வர...

ஏ.சி பாம் கிராமத்தை உடனடியாக மீள்குடியமர்த்துங்கள்!! தவறினால் குடியேற்றப்படுவார்கள் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, ஏ.சி.பாம் கிராம மக்களை உடனடியாக மீள்குடியமர்த்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ள வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அவ்வாறு குடியேற்றத் தவறினால் குறித்த பகுதியில் மக்களோடு இறங்கி துப்பரவுசெய்து ஏ.சி.பாம் கிராம மக்களை குடியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்தார். அதேவேளை ஏ.சி.பாம் கிராமத்தை நிலஅளவைத் திணைக்களம்...

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான முக்கிய உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு நேற்று(14) நீதிபதிகள் மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவா ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரிக்கப்பட்டுள்ளது. அமர்வின்...

ஆனையிறவு உப்பினை சகல பகுதிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் – க.இளங்குமரன்

ஆனையிறவு உப்பினை சகல பகுதிகளுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார். புதன்கிழமை (14) பிற்பகல் ஆனையிறவு உப்பளத்துக்கு விஜயம் செய்த அவர் உப்பளத்தின் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார் அதாவது கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய தொழிற்சாலைகளில் ஒன்றாக காணப்படுகின்ற ஆனையிறவு உப்பளத்தில் பணியாற்றும்...

பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை!

தனது சிறு பிள்ளையின் உணவில் கிருமிநாசினியை கலந்து உணவூட்டிய தந்தை தலைமறைவாகியுள்ள சம்பவம் யாழ்ப்பாணம் இளவாலைப் பகுதியில் பதிவாகியுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவிலுள்ள உயரப்புலம் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறு வயதான சிறு பிள்ளை உணவு உட்கொண்ட பின் வாயிலிருந்து நுரை வெளியேறியதை அடுத்து குடும்பத்தினர்...

வெசாக் தினத்தில் சிங்கள பௌத்தர்களுக்கு தமிழர்களிடருந்து ஒரு கோரிக்கை!!

வடக்கில் தமிழ் மக்களிடமிருந்து வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி, இராணுவத்தின் ஆதரவுடன் விகாரை அமைக்கப்பட்ட காணிகளை அதன் உரிமையாளர்களிடம் மீளத் தர சிங்கள பௌத்த மக்கள் முன்வர வேண்டும் என தமிழ் அரசியல் ஆர்வலர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் புத்தரின் பிறந்தநாளை நினைவுகூரும் வெசாக் போயா தினத்தன்று, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, தையிட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள...

கஜேந்திரகுமாரை நேரில் சந்திப்பதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி முடிவு!!

உள்ளுராட்சி மன்றங்களுக்கான ஆட்சி அதிகாரத்தினை கூட்டிணைந்து அமைத்துக்கொள்வது தொடர்பில் பேச்சுக்களை நடத்துவதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நேரில் சந்திப்பதற்கு ஜனநாய தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்துள்ளது. அத்துடன் தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் கொள்கை அடிப்படையிலான கூட்டு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பரஸ்பரம் தெளிவு படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது....

எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை!!

தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது வைத்துள்ள நம்பிக்கை குறையவே இல்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நாம் நிச்சயம் நிறைவேற்றுவோம். அரசியல் இருப்புக்காகவே தேசிய மக்கள் சக்தியை தமிழ் மக்கள் நிராகரித்து விட்டதாக சில குழுக்கள் போலி பிரச்சாரம் முன்னெடுத்துவருகின்றன என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். இது...

விரைவில் மின் கட்டண திருத்தம்!!

இந்த வருடத்திற்கான இரண்டாவது மின் கட்டண திருத்தம் தொடர்பான பிரேரணையை இலங்கை மின்சார சபை எதிர்வரும் வாரத்திற்குள் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமெனில், அது தொடர்பான பிரேரணையை மே மாதத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுடம் சமர்ப்பிக்க வேண்டுமென...

வடக்கில் அநுர அலை ஓய்ந்து விட்டது!!

நடைபெற்று முடிந்த தேர்தல் அனுர அலை என்று கூறப்பட்ட பொய் பரப்புரைக்கு முடிவு கட்டி தமிழ் தேசியத்தின் இருபை உறுதி செய்துள்ளது என தமிழரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியத்தை வடக்கு கிழக்கில்...
Loading posts...

All posts loaded

No more posts