நெடுந்தீவு குமுதினி படுகொலையின் நாற்பதாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடந்தது. மாவிலி துறையில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவேந்தல் நினைவு தூவியில் குமுதினி படுகொலை நினைவேந்தல் குழுவின் தலைவர் விஸ்வலிங்கம் ருத்திரன் தலைமையில் நேற்று (15) காலை நடைபெற்றது.
நினைவு சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் வணக்கம் அக வணக்கம் செலுத்தப்பட்டது
1985 ஆம் ஆண்டு 5ஆம் மாதம் 15 ஆம் திகதி இதே போன்று ஒரு நாளில் நெடுந்தீவு கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த குமுதினி படகை வழி மறித்து கடற்படையினர் அப்படகில் பயணம் செய்த ஏழு மாத பெண்குழந்தை உட்பட 36 பொதுமக்களை வெட்டி கொலை செய்த கொடூர சம்பவம் நெடுந்தீவு கடற்பரப்பில் பதிவாகியது.
அதற்கமைய, இன்றைய நிகழ்வில் சர்வ மத குருக்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் உறவினர்கள், பொதுமக்களின் பலரும் கலந்து கொண்டு குமுதினி படுகொலையில் உயிர் நீத்தவர்களுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் படுகொலை வாரத்தின் நான்காவது நாளான இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.